படைத்தவன் படைத்த
பாமாலை
பாரெங்கும் பூத்திருக்கும்
பூஞ்சோலை
கருப்பையின் கதகதப்பு
அன்னையின் அரவணைப்பு
அத்தனையும் வாடாத பூ
மனைவியின் இதழ்
மலரும் சிரிப்பு
மாதுளையின் பூ
கன்னச் சிவப்பு
கவரும் ரோசாப் பூ
மழலையின்
மாசிலாப் புன்சிரிப்பு
மல்லிகைப் பூ
நண்பனின் நட்பு
நாளும் பாதுகாப்பு
அரிதாய்ப் பூக்கும்
குறிஞ்சிப் பூ
உறவுகள் என்பது
கதம்பப் பூ
அத்தனைக்கும்
ஆணிவேர் அன்பு
ஆனால்,
கல்லின் மீது
பூ வீசியவர்கள்
முதன் முதலாய்
ஒரு பூவின் மீது
கல்வீசினார்கள்
தாய்ஃப் நகரத்தில்
பூவொன்று
புயலானாதால்
வெறுப்பு
அப்பூவே
கற்களை
வீழ்த்தியதும்
பெரும் வியப்பு..!!
மக்கத்தில் பிறந்து
மதீனத்தில் மறைந்த
இறைவனின்
அருட்கொடை பூ
அரசியலார் அள்ளி வீசும்
வாக்குறுதி காகிதப் பூ
என்று மினிக்கும் இலக்கியம் போலவே
தென்றலும் பூவாசம் தூவிட- நன்றாய்
அகத்தி லிறங்கிடும் அப்பொழுதில் பூவின்
சுகந்தம் தருமே சுகம்.
அபுல்கலாம்(த/பெ. ஷைக் அப்துல்காதிர்)
(‘”கவியன்பன் கலாம்,)
அலை பேசி: 050-8351499
அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி (இருப்பிடம்)
மின்னஞ்சல்: kalamkader2@gmail.com, kalaamkathir7@gmail.com