படிப்பில் வேண்டும் பிடிப்பு

அதிரை கவியன்பன் கலாம் இலக்கியம் கவிதைகள் (All)
மூச்சு விடுதல் மட்டு மன்று

முயற்சி கூட மனிதமே

பேச்சில் கூறு மனைத்தும் விடாமல்

பேணிக் காத்தல் மனிதமே

பாய்ச்சும் நீரா லுயிரும் பெற்று

பயிரும் வளர்தல் போலவும்

காய்ச்சும் தங்கம் ஒளிர்தல் போன்றும்

கடின வுழைப்பு வெல்லுமே

ஊதும் சங்கின் அறிவிப் பால்நம்

உறக்கம் களையச் செய்யுமே

ஓதும் உன்றன் படிப்பால் செல்வம்

ஓங்கி வளரச் செய்யுமே

தீதும் நன்றும் பகுத்து முடிவைத்

தீர்க்க வுதவும் கல்வியே

போது மென்ற நிறுத்தல் குறியைப்

போட்டு விடாது கல்வியே

(6 மாச்சீர்கள்+ 1 விளச்சீர்= எழுசீர் விருத்தம்)

(வேறு)

மின்வெட்டுச் சோதனையால் மிரள வேண்டா

மிச்சமுள்ள நேரத்தில் பிறழ வேண்டா

முன்சென்றத் தலைவர்கள் கல்வி தேட

முடங்கித்தான் போகாமல் வெற்றிச் சூட

பின்பற்றி(ய) வழிகளையும் நீயே நோக்கு

பிற்காலம் கல்வியினா லேழ்மை போக்கும்

உன்சுற்றம் உனைச்சுற்றும் நட்பும் நீளும்

உலகமெலாம் உனைநோக்கும் காலம் சூழும்

(எண்சீர் கழி நெடிலடி விருத்தம்)

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம் (பிறப்பிடம்)

அபுதபி (இருப்பிடம்)

அலைபேசி: 050-8351499

இணைய தளம்: http://www.kalaamkathir.7@gmail.com/

மின்னஞ்சல்: kalamkader2@gmail.comkalaamkathir7@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *