மாபெரும் வெற்றிக்கு மாற்றமே அடிப்படை

நன்றி – கி.சீனிவாசன்   தினமணி 02.12.2003 வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படும் நாம் தோல்வியைப் பற்றியே தொடர்ந்து எண்ணிக் கொண்டிருக்கலாமா?  பலர் ஒரே ஒரு தோல்விக்குப் பிறகு எழ முடியாமல் முற்றிலும் வீழ்ந்துவிடுவுது எதனால்?   தோல்வி நிலையானது  நமக்கு மட்டுமே வருகிறது.  ஏதோ கடவுள நம்மையே தேர்ந்தெடுத்துத் தோல்வியைத் தருவதாக நாமே கற்பனை செய்து கொண்டு நம்மை நாமே துன்பக்கடலில் ஆழ்த்துகின்றோம்.  குணம், நடத்தை, கண்ணோட்டம், மனப்பான்மை ஆகியவை முற்றிலும் வேறுபடுவதை உற்று நோக்கினால் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை உணர்வோம்! மனப்பான்மை, ஆகியவை […]

Read More

பதறிய மனது பாழ்

பதறிய மனது பாழ் ஓரிறையை எண்ணும் இதயத்தை கறையாக்க ஒழிந்திருக்கும் சைத்தானே ஒதுங்கு ! அருளூற்றாம் நல்இறையின் நிறைந்திட்ட கருணையை பெறுவதற்கே தொழுதிட்டேன் பொழுதும் ! அருளூறும் இதயத்தை அகந்தையால் பூட்டியே அல்லல்படும் மனிதா அறிந்திடு ! பொருளீட்டி வாழ்வதையே தொழிலாக எண்ணி அருளாளன் பாதையை மறவாதே ! ஒரு நாளில் பல நாளாய் செயல்பட்டே நீயும் புதுநாளை வரவேற்க புறப்படு ! திருவான இறைவனை தினமும்நீ தொழுது மறுவாழ்வுக்கு நன்மை குவித்திடு ! கல்வியும் ஒழுக்கமும் […]

Read More

இஸ்லாம் எங்கள் வழி ! இன்பத் தமிழ் எங்கள் மொழி!

ஷேக்கோ, இளையான்குடி உலகமக்கள் தங்கள் கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள மொழிகள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. இந்த மொழிகள் எப்படி உண்டாயின? என்பதற்கு மதங்கள் பலவிதமான காரணங்களைக் கூறும். சிவபெருமானின் உடுக்கையின் ஓசையிலிருந்து தான், மொழிகள் உண்டாயின! என்பது இந்து சமுதாயக்கருத்தாகும். ஆதியில் வார்த்தை இருந்தது; அந்த வார்த்தை இறைவகை இருந்தது என்பது பைபிளின் கொள்கையாகும். சிருஷ்டித்த உமது இறைவன் பெயரால் நீர் ஓதுவீராக ! (இறைவனாகிய) அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து தான் (நபியே) நீர் ஓதும். […]

Read More

பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்.. !

  இளையான்குடியில் எத்தனையோ சாதனையாளர்கள் பார்வையிலும், மக்களின் பார்வையிலும், கவனத்திலும் தங்களுடைய செயல்பாடுகளை பதிவு செய்தார்கள். செய்து வருகிறார்கள். அவர்களில் நம் கவனத்திற்கு வராமல் சப்தமில்லாமல் மட்டுமல்லாது பார்வையில்லாமலும் தங்களின் திறமைகளை நிரூபணம் செய்து வருகிற நண்பர்கள் இவரின் சாதனைகளை நம் இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்யவே இவர்களின் அறிமுகம். ஒருவர் பிறவியிலே பார்வை இழந்தவர் முகமது ஹக்கீம் மர்ஹூம் தென்மலைக்கான் முகமது ஆரிப் அவர்களின் மகன். சாலைகிராமம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றுகிறார். மற்றொருவர் […]

Read More

பரக்கத்தான மணவிழா

(  பேராசிரியை ஹாஜியா கே.கமருன்னிஸா அப்துல்லாஹ் எம்.ஏ.பி.டி.,   )   “குறைந்த செலவில் திருமணமே அதிக பரக்கத் நிறைந்தது”.                                    –அல்ஹதீஸ் அறிவிப்பாளர் : ஹள்ரத் ஆயிஷா (ரளி) அவர்கள் நூல் : அஹ்மத்   திருமணம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இன்றியமையாத தேவையாகும். ஒருவரையொருவர் நேசிப்பதற்கு திருமணம் போன்று வேறெதுவுமில்லை. அது தீய பார்வையை விட்டு விலக்குகிறது. பொறுப்பு மிக்க ஆண்மகனாகவும், பெண்ணாகவும் மாற்றுகிறது. இறைவனின் பிரதிநிதியான மனிதனை உலகம் பிறந்ததிலிருந்து உலகின் அழிவு வரை உருவாக்கி […]

Read More

பிப்ர‌வ‌ரி 26, முதுகுள‌த்தூர் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌ ஆண்டு விழா

முதுகுள‌த்தூர் : முதுகுள‌த்தூர் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌த்தின் ஆண்டு விழா ம‌ற்றும் ப‌ரிச‌ளிப்பு விழா 26.02.2012 ஞாயிற்றுக்கிழ‌மை பிற்ப‌க‌ல் 2 ம‌ணிக்கு சி.எஸ்.சி. கம்ப்யூட்ட‌ர் ப‌யிற்சி மைய‌ வ‌ளாக‌த்தில் ந‌டைபெற‌ இருக்கிற‌து என‌ ப‌யிற்சி மைய‌ முத‌ல்வ‌ர் ஹெச்.ஏ. முஹ‌ம்ம‌து சுல்தான் அலாவுதீன் தெரிவித்துள்ளார். அத‌ன் விப‌ர‌மாவ‌து : பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் எம். சீனி முஹ‌ம்ம‌து த‌லைமை வ‌கிக்கிறார். த‌லைமை இமாம் மௌல‌வி எஸ். அஹம‌து ப‌ஷீர் சேட் ஆலிம், திட‌ல் ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத் […]

Read More

கண்ணியமிக்க எழுத்தாளர்கள்

( பேராசிரியை ஹாஜியா கே. கமருன்னிஸா அப்துல்லாஹ் எம்.ஏ., பி.டி., )   “நிச்சயமாக உங்கள் மீது காவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் இரு கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். நீங்கள் செய்வதை எல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்”.                                 -அல் குர்ஆன் (82:10-12)   அல்லாஹுஜல்லஷானஹுத்தஆலா இத்திருவசனத்தில் இரு கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்களாக கிராமன் காத்திபீன்களை குறித்து பேசுகிறான். நன்மையை எழுதுபவர் மனிதனின் வலப்புறத்தோள் மீதும், தீமையை எழுதுபவர் இடப்புறத்தோள் மீதும் அமர்ந்து கண்காணிப்பர். […]

Read More

பெண்ணினத் துரோகி

பெண்ணினத் துரோகி கரு என்ற பெயறால் கனவுலகில் நான் மிதந்தேன். உழைப்பின்றி உணவு கிடைத்தது உல்லாசமாய்  நான் வளர்ந்தேன். கருவறையில் பக்குவசூழலில்  கவலையின்றி  நான் இருந்தேன். அந்தோ விபரீதம் கண்டு பிடித்தனர் மருத்துவ வல்லுனர்கள்… நான் ஒரு பெண்ணாம்.! ஏமாற்றம்  என்னைச் சுமந்தவளுக்கு! ஒழித்துக் கட்டுங்கள் என ஓலமிட்டனர். என்னைக் கொடூரமாக கொலை செய்தனர். கருவறை மண்ணறையாகியது. பெண் மகவு  பிறக்கும் உரிமையை தடுத்திட காதகியும் ஒரு பெண்தான். அவள் பெண்ணுரிமை போராட்டக் குழு தலைவியாம். மக்கள்  […]

Read More

மனசு

இறைவனின் பேரருளால்… ———————————————- மனசு ——— மனசே..நீ.., எங்கு செல்கின்றாய்? இல்லாத ஊருக்கு, வழியைத் தேடியா? அரு சுவை உணவும் திகட்டி விடும், நீயோ… வியக்கின்ற விஷயங்களை திகட்டாது அசைபோடுகின்றாய், நடக்காத காரியத்தை, நாடி ஓடுகின்றாய், நிறைவேறாததை நினைத்து வாடுகின்றாய், கிட்டாததை பற்றிட முனைகின்றாய், முடியாததின் மேல் மோகம் கொள்கின்றாய், முடித்ததை நினைத்து ஆனவமும் கொள்கின்றாய் மனசே..நீ.., கிட்டாத கனிக்கு கொட்டாவி விடாதே, மற்றவர் செழிப்பில் மனம் புழுங்காதே, உடலுக்கு சோர்வுண்டு உனக்கேன் அது இல்லை இங்கும் […]

Read More

“பசுவதை” – மிருகங்களின் கவலை – வெ. ஜீவகிரிதரன்

மத்தியப் பிரதேசம் குரேஷி இனத்தவர் அதிகம் உள்ள மாநிலம். இவர்கள் பெரும்பாலும் வியாபாரம் செய்பவர்கள். பல ஊர்களுக்கு அலைந்து திரிந்து கால்நடைகளை வாங்கி அவற்றை இறைச்சிக்கூடங்களுக்கு விற்பதுதான் இவர்களின் தொழில். கடந்த டிசம்பர் 31 அன்று அனிஸ் அஸ்லம் குரேஷி என்ற வாலிபர் சந்தை யிலே மாடு வாங்கி அதை வேறு ஒரு வியாபாரியிடம் விற்பதற்காக தன் `பொலிரோ’ வாகனத்தில் ஏற்றி ஓட்டிச் சென்ற போது, சாரங்பிகாரி என்ற இடத்திலே `பஜ்ரங்தள்’ குண்டர்களால் வழிமறிக்கப்பட்டார். அவர்கள் புத்தாண்டு […]

Read More