கனவே..
நானுறங்க நீயோ..
விழித்திருக்கிறாய் ஏன்?
எண்ணங்களை சுமக்கின்ற,
தலைக் கணமோ?
பிள்ளையினை சுமக்கின்ற,
பெண்டீருக்குக் கூட,
இல்லை அது,
உனக்கேன் அது…?
செல்லாத இடம் சென்று,
இல்லாததை காட்டுகின்றாய்,
கிள்ளாததை கிள்ளிக் கிள்ளி,
பொல்லாததை தீட்டுகிறாய்
அல்லாததை அள்ளி அள்ளி,
அல்லாட வைக்கிறாய்,
அழகுதனை அதிகம் காட்டி,
அழைக்கழிக்கிறாய்,
அசிங்கத்தை சிங்கமாக்கி,
அதிர வைக்கிறாய்,
திகிலை திரட்டி காட்டி,
திணர வைக்கிறாய்,
அநாகரீகத்தை நாகரீகமாக்கி
அருவருக்க செய்கிறாய்
கொடூரத்தினை கட்டவிழ்த்து,
கொடுமைப் படுத்துகிறாய்
இதெல்லாம்….
தீவிர வாதத்தை தூண்டுகின்ற
அராஜக நாடுகளின்,
அரக்க குணமல்லவா?
உனக்கேன் அது?
உள்ளத் திரையில் ஊடுருவி,
உழலவைக்கின்ராயே-நீ
சாந்தத்தைக் காட்டு,
சாந்தியடைகிரோம்
அமைதியைக் காட்டு,
நிம்மதியடைகிறோம்
ஒற்றுமையைக்காட்டு,
கூடி வாழ்கிறோம்
இல்லையேல்..
நாங்கள் கலையாதிருக்க,
கனவே நீ கலைந்து போ!
===
விருதை மு செய்யது உசேன்
ஷார்ஜா