ஷேக்கோ, இளையான்குடி
உலகமக்கள் தங்கள் கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள மொழிகள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. இந்த மொழிகள் எப்படி உண்டாயின? என்பதற்கு மதங்கள் பலவிதமான காரணங்களைக் கூறும்.
சிவபெருமானின் உடுக்கையின் ஓசையிலிருந்து தான், மொழிகள் உண்டாயின! என்பது இந்து சமுதாயக்கருத்தாகும்.
ஆதியில் வார்த்தை இருந்தது; அந்த வார்த்தை இறைவகை இருந்தது என்பது பைபிளின் கொள்கையாகும். சிருஷ்டித்த உமது இறைவன் பெயரால் நீர் ஓதுவீராக ! (இறைவனாகிய) அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து தான் (நபியே) நீர் ஓதும். உமது இறைவன் மகாபெரியவன். பெரும் கொடையாளி ! அவன் தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான். அன்றி (அதன் அறியாதவைகளை எல்லாம் அவனுக்கு கற்றுக் கொடுத்தான்.
இவ்விதமாக திருமறைக் குர்ஆன், இறைவன் மனிதனுக்குப் பேசவும் அவனுக்கு கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறது.
சரித்திரங்களைப் புரட்டினால் பிரிந்து பிரிந்து ஆங்காங்கே சிதறிப்போய் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் ஒரு காலகட்டத்தில் ஒன்று கூடிக் கூட்டாக வாழத்தொடங்கியபோது, அவர்களுக்குள் கருத்துப் பரிமாறிக் கொள்ள ஒரு சாதனம் தேவைப்பட்டது. அந்தச் சாதனம் மொழியாக ஆனது. அதன் மூலம் அவர்கள் அங்காங்கே தேவைக்கேற்ப, பற்பல மொழிகளை உண்டாக்கிக் கொண்டனர் என்று விளக்கம் தருகிறது.
எப்படியோ ஒரு வகையில் மொழிகள் தோன்றி, மக்களின் மனக்கருத்துக்களை ஒருவருக்கொருவர் கலந்துரையாடிக் கொள்கின்றனர். இவ்விதமாகத் தோன்றிய மொழிகள், உலகில் மொத்தம் ரூ.6000 இருக்கும் என்று ரஷ்யநாட்டின் பிரதான பத்திரிகையாகிய “பிராவ்தா” தெரிவித்துள்ளது.
இந்த ஆராயிரம் மொழிகளும், இன்று உயிருடன் நின்று புழக்கத்தில் பயன்படும் மொழிகள் மொத்தம் 2760 தான் என்றும், அப்பத்திரிகை தெரிவிக்கிறது.
இந்த 2700 மொழிகளில், இலக்கியநயமும் தொன்மைமிகுந்த காலமும் கொண்ட மொழிகள், இலத்தீன், ஹீப்ரு, சீனம், அரபி, தமிழ்… போன்ற மொழிகள்தாம் என்பது, அறிஞர் பெருமக்களின் கணிப்பாகும்.
இந்தியா மட்டும், சுமார் (நூற்றி எண்பது) மொழிகள் புலக்கத்தில் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றனவாம். இக்கருத்தை மொழி வல்லுனர் அறிஞர் சுனித் குமார் சட்டர்ஜி என்பவர் கூறியுள்ளாராம். உலகில் உள்ள மொழிகளில், தமிழ் ஒன்று என்று கண்டுள்ளனர். தமிழ் மொழியை அகத்திய முனிவர் என்பவர் வளர்த்துப் பரப்பினார். என்பது முன்னோர்களின் கருத்தாகும். தமிழ்மட்டும் சுமார் ஓர் இலட்சம் சொற்கள் உள்ளதாகக் கணக்கிட்டுள்ளார்கள்.
தமிழ் மொழியைப்பற்றிய விவரங்களையும், இலக்கண முறைகளையும், முதல் முதலில் எடுத்துக்கூறி விளக்கியவர், தொல்காப்பியம் ஒன்று தமிழ் முனிவராவார். பிறகு பவனந்தி முனிவர் போன்றவர்களும் இலக்கணம் ஆக்கி வழங்கியுள்ளார்கள்.
இவ்விருவரது இலக்கணநூல்களும், தொல் காப்பியம் ‘நான்னூல்’ என்பவைகளாகும்.
தமிழின் பெருமையைப்பற்றிப் பெருமைப் படக்கூடிய அளவுக்குப் பலரும், பரவலாகக் கருத்துக்கள் கூறியுள்ளார்கள்.
மொழி நூல் வல்லார் அறிஞர் டாக்டர் கால்டுவெல் என்பார், (மெரினா பீச்சில் நிலையாக நிற்பவர்) தமிழ் மொழி நல்ல பண்பு நிறைந்த மொழியாகும். நலம் மிகுந்ததுமாகும். உயர்ந்த நிலைமையில் இருப்பதுமாகும். அது, வடமொழியின் தேவை இல்லாமலே இயங்கக் கூடியதாகும். என்று பாராட்டியுள்ளார். தமிழ் என்ற சொல்லுக்கு ‘இனிமை’ என்றபொருள் கூறுவது முண்டு. அமிழ்தம் என்ற பொருளையே, தமிழ்என்ற சொல் கொண்டுள்ளது.
உதாரணத்துக்கு ‘தமிழ்’ என்ற சொல்லை தொடர்ந்து வேகமாக தமிழ் – தமிழ் .. என்று சொல்லிக் கொண்டே இருந்தால் ஒரு நிலையில் அது. ‘அமிழ்து.. அமிழ்து.. அமிழ்து..’ என்று ஒலிப்பதை உணரலாம் !
இந்த அமிர்தம் – இனிமை போன்ற தமிழ் மொழிக்கு மற்ற மொழிகளுக்கு இல்லாத அளவுக்கு எழுத்துக்களின் எண்ணிக்கை உண்டு
ஆங்கிலம், அரபி, பார்ஸி, உருது, இந்தி … போன்ற மொழிகளுக்கெல்லாம் மொத்த எழுத்துக்கள் 26-36 க்குள் தான் உள்ளன.
ஆங்கிலம் 26- அரபி 29 உருது 36 பார்ஸி 36- தான் எழுத்துக்கள் ஆனால், தமிழுக்கு மட்டும் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. சீனா மொழிக்கும் அதிகமான எழுத்துக்கள் உண்டாம்.
இப்படி எழுத்துக்கள் அதிகமாக உள்ளதால் படிப்பதற்கும், எழுதுவதற்கும் தட்டெழுத்து போன்ற கருவிகளில் பயன்படுத்துவதற்கும் சிரமம் உண்டாகிறதென்று கருதி, ஒரு காலகட்டத்தில், தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் என்றபெயரில் ஒரு ஏற்பாடு செய்யமுயன்றனர் சில பிரமுகர்கள்.
குறிப்பாக ஈ.வெரா. பெரியார் ஒரு முறையைக்கையாண்டார். அவர் செய்த சீர்திருத்தத்தில் லை-னை-ணை-ளை போன்ற எழுத்துக்களை, லை-ளை-னை என்று மாற்றம் செய்யப்பட்டதே தவிர, பெரியமாற்றமோ எழுத்துக்குறைப்போ ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அதாவது; இப்படி ‘ன’ இரட்டைச்சுளி போட்டு எழுத்துக்களை இணைத்தார்கள். ‘லை’ இப்படி இல்லாமல் ’லை’ இப்படி மாற்றினார்.
தமிழ் மொழியின் எழுத்துக்கள் 247ஐ, கனிசமான அளவுக்கு குறைத்து சுமார் 150 எழுத்துக்களுக்குள் கொண்டுவர முயன்றால், ஓரளவு நல்ல பலன்கள் ஏற்படவாய்ப்பு உண்டாகும். அப்படிச் செய்ய இயலுமா?
நம்ம கொஞ்சம் முயன்று பார்ப்போமா?
தமிழில் உயிர் எழுத்துக்கள் 12 அ-ஆ-இ-ஈ-உ-ஊ-எ-ஏ-ஐ-ஒ-ஓ-ஒள-ஃ.
இந்த பனிரெண்டு எழுத்துக்களை குறில்-நெடில் – குறுகிய ஓசை உள்ளதால் அந்தப் பெயர் பெற்றின.
ஆ-ஈ-ஊ-ஒ-ஓ-ஐ-ஒள – இந்த ஏழும் நெடில்- நீண்ட ஓசையுள்ளதால் நெடில் என்ற பெயர் பெற்றன.
இப்போது முதலில் சொன்ன குறில் எழுத்துக்கள் 5ஐயும் அப்படியே வைத்துக்கொண்டு நெடில் ஓசையுள்ள 7ஐயும் அந்த எழுத்து உருவத்தை வைத்துக் கொள்ளாமல், வேறு ஒரு உருவத்துக்கு மாற்றுவோம். எப்படி?
ஆ- என்பது நெடில் எழுத்து. அ- என்பது குறிப்பெழுத்து . இந்த குறில்,நெடில் என்ற இரு ஓசைக்கும் இரு எழுத்துக்களைப் பயன்படுத்தாமல் ஒரே எழுத்தையே பயன்படச்செய்யலாம். அதாவது
அ- என்ற எழுத்தோடு ’ர’ இந்தத்துணை எழுத்தைச் சேர்த்து அ ர= (ஆ) என்று உச்சரிக்க வேண்டும். ஏனென்றால்
க்+அ=க ஆகும். க்+ஆ=கா ஆகும். இந்த ‘கா’ இந்தத் துணை எழுத்துத்தானே பயன்படுத்தப்படுகிறது.
அதைப்போல், அ-வை, நெடில் ஓசையாக்க ‘சு’உடன் ’ர’ என்ற துணை எழுத்தைச்சேர்த்து ‘அ’ர’’ என்று எழுதினால் போதுமல்லவா?
இது போலவே மற்ற குறில் எழுத்துக்களுக்கெல்லாம் ’ர’ இந்தத் துணை எழுத்தைச் சேர்த்து நெடில் ஆக்கிக்கொள்ளலாம். அதாவது
அ-அ ’ர’ (ஆ); இ-இ ’ர’ (ஈ) ; உ- உ ’ர’ (ஊ); எ- எ ’ர’ (ஏ); ஒ-ஒ ’ர’ (ஓ) 12 எழுத்துக்கள் அதாவது 12 ஓசைகள் – உச்சரிப்புகள் உண்டாகிவிடும். ஆனால் எழுத்துக்கள் மொத்தம் அ-இ-உ-எ-ஏ-ஐ-ஒள, என்ற 7 எழுத்தான் ஆகும் கூட ’ர’ என்ற துணை எழுத்தும் சேர்ந்தால் 8 ஆகும். இதன்படி –உயிர் எழுத்துக்கள் 12-ல் 4 குறைந்து, 8 ஆகிவிட்டன.
இந்த குறைப்பினால் தமிழ்மொழி வளம் குறையவில்லை. ஓசை-உச்சரிப்பு குறையவில்லை. எழுத்தின் அமைப்புத்தான் மாறியுள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
எழுத்தின் அமைப்பு மாறுவது ஒன்றும் தவறாகாது. ஏனெனில் ஆரம்பகால தமிழ் எழுத்துக்களின் உருவங்களே சாதாரண கோடுகள் மாதிரித்தான் இருந்துள்ளன. கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்து அமைப்புகள் அப்படித்தான் உள்ளன.
பிற்காலத்தில்தான் எழுத்துக்களின் உருவங்கள் மாறின. அதுபோல் இப்போதும் எழுத்தின் உருவங்களை மாற்றினால் தவறாகாதல்லவா?
ஓசையும் உச்சரிப்பும்தான் மாறக்கூடாது. அவைகள்தாம் மொழியின் உயிர் போன்றவை என்பதால் !
சரி, தொடர்ந்துமற்ற எழுத்துக்களைப் பற்றியும் பார்க்கலாம்; உயிர் எழுத்துக்கள் போக, மெய்எழுத்துக்கள் – 18 இவை, க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் – என்பவைகளாகும்.
உயிர் எழுத்துக்களோடு மெய் எழுத்துக்கள் சேர்ந்து உயிர் மெய் எழுத்துக்கள் உண்டாகும். அதாவது க்+அ=க; க்+ஆ=கா; க்+இ+கி; க்+ஐ+கை; க்+ஒ+கொ; க்+ஓ=கோ; க்+ஒள= கெள என்று க-கா,கி-கீ,கு-கூ, கெ-கே, கை, கொ-கோ, கெள,க்… இப்படியே உயிர்மெய் எழுத்துக்கள் அமையும்.
இந்த க-கா-கி-கீ-கு-கூ — ஆகிய 216 எழுத்துக்களைக் குறைக்க வேண்டும். எப்படிக் குறைப்பது?
முதலில் அ-அ’ர’ என்று அவற்றை நெடில் ஆக்க, ‘அ’வுடன் ’ர’ என்ற துளை எழுத்தைச் சேர்த்த மாதிரி க –வை நெடில் ஆக்க ’ர’ இந்தத்துளை எழுத்தையே சேர்க்கிறோம். அதுபோல, கி –யை நெடில் ஆக்க, கி-யுடன் ’ர’ என்ற துணை எழுத்தைச் சேர்ப்போம். அப்போது கி-கீ(கீ) ஆகிவிடும்.
( சம உரிமை – மே 2010 இதழிலிருந்து )