மனசு

இலக்கியம் கவிதைகள் (All) விருதை மு. செய்யது உசேன்

இறைவனின் பேரருளால்…

———————————————-

மனசு

———

மனசே..நீ..,

எங்கு செல்கின்றாய்?

இல்லாத ஊருக்கு,

வழியைத் தேடியா?

அரு சுவை உணவும்

திகட்டி விடும்,

நீயோ…

வியக்கின்ற

விஷயங்களை

திகட்டாது

அசைபோடுகின்றாய்,

நடக்காத காரியத்தை,

நாடி ஓடுகின்றாய்,

நிறைவேறாததை

நினைத்து வாடுகின்றாய்,

கிட்டாததை

பற்றிட முனைகின்றாய்,

முடியாததின் மேல்

மோகம் கொள்கின்றாய்,

முடித்ததை நினைத்து

ஆனவமும் கொள்கின்றாய்

மனசே..நீ..,

கிட்டாத கனிக்கு

கொட்டாவி விடாதே,

மற்றவர் செழிப்பில்

மனம் புழுங்காதே,

உடலுக்கு சோர்வுண்டு

உனக்கேன் அது இல்லை

இங்கும் அங்குமாக

உலாவருகின்றாய்,

உன்னை தாழ் போட்டு

பூட்டிட நினைத்தாலும்

கதவில்லாதிருக்கின்றாய்,

உடலுக்கு ஒன்பது

வாசலென்றால்

உனக்கோ…

எத்தனைக் கோடி வாசல்?

அத்தனையிலும்

வளம் வருகின்றாயே,

மனசே..நீ..என்ன

மாயக் கண்ணாடியா?

எத்தனை உருவங்களை

பிரதிபலிக்கின்றாய்,

இளைப்பாறும் நேரமே

இவ்வுலகம்- இதில்

உனக்கேன்..,

ஓயாத அலை போல்

தேயாத பேராசை?

ஒன்றுக்கு மட்டும்-நீ

பேராசை கொள்,-அது

முடிய போகின்ற,

இவ்வுலகத்திற்காக அல்ல

முடிவுறாத..

மறுவுலக மோச்சத்திற்காக

————————————————-

 hussain_vnr@yahoo.com

055 490 83 82

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *