பெண்ணினத் துரோகி
என்ற பெயறால்
கனவுலகில்
நான் மிதந்தேன்.
உழைப்பின்றி
உணவு கிடைத்தது
உல்லாசமாய்
கருவறையில்
பக்குவசூழலில்
கவலையின்றி
நான் இருந்தேன்.
அந்தோ விபரீதம் கண்டு பிடித்தனர்
மருத்துவ வல்லுனர்கள்…
நான் ஒரு பெண்ணாம்.!
ஏமாற்றம்
என்னைச் சுமந்தவளுக்கு!
ஒழித்துக் கட்டுங்கள்
என ஓலமிட்டனர்.
என்னைக் கொடூரமாக
கொலை செய்தனர்.
கருவறை
மண்ணறையாகியது.
பெண் மகவு
பிறக்கும் உரிமையை
தடுத்திட காதகியும்
ஒரு பெண்தான்.
அவள்
பெண்ணுரிமை
போராட்டக் குழு
தலைவியாம்.
மக்கள்
அவளுக்குச் சூட்டிய
சிறப்புப் பெயர்
சமூக சேவகி.
இல்லை
அவள்
பெண்ணை
கருவறையிலேயே
ஒழித்துக் கட்டிய
பெண்ணினத் துரோகி…!.
P.A.சையத் முஹம்மது , கோவை.