ஆற்றல்

இலக்கியம் கவிதைகள் (All) விருதை மு. செய்யது உசேன்

ஆற்றல்

இது மனிதனுக்குள்,

புதைந்துள்ள புதையல்

இதனை,

முயன்ருழைத்தவர்,

வெற்றியை ஈட்டுகிறார்,

முயலாதவர்

முடக்கத்தை நாட்டுகிறார்.

மானிடர் கண்ட

இயந்திரமோ…

வியக்கின்ற ஆக்கம்,

அந்த மானிடரிலும்,

பலர் ஏனோ..

காலத்தை நொந்தார்.

விரும்பாத விரக்தி,

திரும்பாத காலத்தை,

கரும்பாக நினைக்காமல்,

துரும்பாக நினைத்து,

அரும்பாகவும் நினைத்தார்.

முடியலை என்றே,

விடியலைக் காணாது,

கதியிது என்றும்,

சதியிது என்றும்,

விதிபழி சுமத்தி,

வீனாகி போனார்.

இன்னும்..,

ஏமாற்ற ஏக்கம்,

அசமந்த தூக்கம்,

விகார வீக்கம்,

விவாத தர்க்கம்,

விளைவோ துக்கம்.

கூடாது தாக்கம்,

வீனேன் தேக்கம்,

வேண்டாம் தயக்கம்,

வேண்டும் ஊக்கம்,

திடனெடு தீர்க்கம்.

இறையருள் வேண்டி,

முறையது தெளிந்து,

திறனது தொடங்கி

ஆற்றலால் உழைத்து,

சோதனை தாண்டி,

சாதனை படைத்திடு.

உன்னால்..

வீட்டார் மகிழ்வார்,

நாட்டார் போற்றுவார்,

பேர் புகழ் ஏணியில்,

ஏற்றம் பெற்று

சரித்திரமாவாய்.

hussain_vnr@yahoo.com

055 4908382

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *