வாழ நினைத்தால் வாழலாம்!

     இந்தியா ஒரு பயங்கரமான பாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. “படிப்பதற்கு கல்லூரி இல்லை. படித்து வந்தாலும் வேலை இல்லை!” என்ற நிலைமை பெருகிக் கொண்டே போகிறது. இனி எவ்வளவு பெரிய மேதைகள், ஞானிகள் ஆட்சி பீடம் ஏறினாலும், அந்தத் திண்டாட்டத்தை முழுக்க ஒழித்து விடுவதென்பது கடினமே. ஆகவே, பட்டம் பெற்ற அத்தாட்சியை கையிலே வைத்துக் கொண்டிருக்கும் இளைஞன், வெறும் படிக்கட்டுகளில் தினம் தினம் ஏறி இறங்கிப் பயனில்லை. ‘குமாஸ்தா வேலையாவது கிடைத்தால் போதும்’ என்று […]

Read More

காலம்

காலம் நிகழ்வுகளை நினைவுகளாய்ப் பதிந்து வைக்கும் ஒலிநாடா   இன்றைய செய்திகளை நாளைய வரலாறுகளாய்ப் பாதுகாத்து வைக்கும் பேரேடு   துக்கங்கள் யாவும் மறந்து போக வைக்கும் மாமருந்து   வாய்ப்புகளாய் வாசற்கதவினைத் தட்டும் உருவமில்லா ஓர் உற்ற நண்பன்   காத்திருத்தல் தவப் பயனாய் பொறுமை தரும் வரம்   மேலும் கீழுமாய்ச் சுழற்றிப் போடும் சக்கரம்   பிறப்பு, இறப்பு மறுமை யாவும் மறைத்து வைத்துள்ள இரகசியப் பெட்டகம்

Read More

புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?

புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ? தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள். குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ? தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும். மேலும் http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு இணை தளத்திலும் தரைஇறக்கம் செய்து கொள்ளலாம்.   விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ? அந்தந்த […]

Read More

சில நேரங்களில் சில மனிதர்கள் !

  நியூயார்க் நகரத்தின் சுரங்கப்பாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில் ஓர் அமைதியான சூழ்நிலை நிலவியது. சிலர் கண்களை மூடி அமர்ந்திருந்தார்கள். சிலர் பத்திரிகைகள் படித்தபடி அமர்ந்திருந்தார்கள். திடீரென்று அங்கு ஒருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்தார். அவர் அந்த எழுத்தாளர் அருகே கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தார். அந்தச் சிறுவர்கள் இருவரும் ஆறு வயதைத் தாண்டாதவர்கள். அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் […]

Read More

இனிய திசைகள் மாத இதழ்

ஜூன்’ 2018 பிப்ரவரி’ 2018 நவம்பர்’ 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஜூலை’2017 ஜூன்’2017 மே’2017 ஏப்ரல்’2017 ஜனவரி’2017 டிசம்பர்-2016 நவம்பர் -2016 ஆகஸ்ட்-2016 ஜூன்-2016 மே-2016 ஏப்ரல்-2016 மார்ச் 16-ஏப்ரல் 15- 2016 பிப்ரவரி 16 – மார்ச் 15- 2016 இனிய திசைகள் 2015 இதழ்கள் இனிய திசைகள் 27 நரசிம்மபுரம், மயிலாப்பூர், சென்னை 600 004 தொலைபேசி : 044 – 24936115 சந்தாவிபரங்கள்: தனிப்பிரதி      : ரூ. […]

Read More

பிறப்பு இறப்புக்கு உள்பட்ட எந்த மனிதனும் வணக்கத்துக்குரிய நிலையினன் அல்லன் – பழ. கருப்பையா

அண்மையில் மிலாதுநபி விழா வந்து சென்றது. உலகத்தின் பாதி மீது தன்னுடைய மார்க்கத்தின் வாயிலாக ஆட்சி செலுத்தும் நபிகள் பெருமானாரின் பிறந்தநாள் விழா அது. உலகத்தில் பல நபிகள் தோன்றினார்கள்; மோசசிலிருந்து ஏசுவரை எண்ணற்றோரை நபிகள் என்று ஏற்கிறது திருக்குரான். ஆனால், முகம்மதுநபிதான் இறுதி நபி! முகம்மது நபி “சல்லல்லாகூ அலைஹி வசல்லம்‘ என்று போற்றப்படுபவர்; சல் என்றால் நபி! நபிகள் நாயகம் அரபு மண்ணை மட்டுமன்றி, அனைத்துலகத்தையும் மனத்தினில் கொண்டு, ஒரு புதிய வாழ்வியல் நெறியை […]

Read More

பொய்யும் மெய்யும்

பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல! யாரிடத்தில் என்னென்ன பொய்கள் சொல்லி வைத்தோம் என்பதை நாம் நீண்ட பட்டியல் தயாரித்து வைத்திருந்தால் கூட அந்தந்த நபர்களிடம் இருந்து அந்தந்த பொய்யை நீடித்த நாள் வாழ வைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும். அந்த நபர் அங்கு இல்லை […]

Read More

ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒரு சந்திப்பு …

கேள்வி: ஆஸ்கார் வாங்கிய மேடையில் அன்பு, வெறுப்பு இரண்டில் அன்பின் வழியைத் தேர்ந்தெடுத்ததாக நீங்கள் கூறினீர்கள். வலி நிறைந்த வார்த்தைகளாக அவை தோன்றின. அதற்கு அடிப்படைக் காரணம் என்ன? ரஹ்மான்: எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். இப்படியும் போகலாம். அப்படியும் போகலாம். எந்த விஷயமுமே எளிதில் கிடைத்துவிடாது. பல சர்ச்சைகளைக் கடந்து முன்னேற வேண்டியிருக்கிறது. போட்டிகள் நிறைந்த உலகம் இது. மீடியாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஏனெனில், நிறையப் பேர் நம்மை எரிச்சல்படுத்த முயல்வார்கள். […]

Read More

அரிய நோய்க்கும் அரு மருந்து இருக்கிறது அல்குரானிலே!

(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பீஹெச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ) நான் கல்லூரி மாணவனாக இருந்த போது உலக குத்துச் சண்டையில் கொடிகட்டிப் பரந்த  ‘கேசிஎஸ் கிளை’ எதிரிகள் மீது குதித்து குதித்து விடும் குத்துக்களையும்,எதிரிகள் விடும்  குத்துக்களை லாவகமாக சமாளித்தும், எதிரிகளை டான்ஸ் ஆடி கோப மூட்டியும் அதன் பின்பு அவர்களை வீழ்த்துவதும் கண்கொள்ளா காட்சிகளாக இருக்கும். எப்படி மஞ்சு விரட்டில் மாட்டின் திமில் மீது தொத்திக் கொண்டு சீறி பாயும் காலை மாட்டினை அடக்குகிறானோ அதேபோன்று பல களங்களை  வெற்றிக் கொண்ட வீரராகத் திகழ்ந்தார். சில நேரங்களில் […]

Read More

கனவு

கனவே.. நானுறங்க நீயோ.. விழித்திருக்கிறாய் ஏன்? எண்ணங்களை சுமக்கின்ற, தலைக் கணமோ? பிள்ளையினை சுமக்கின்ற, பெண்டீருக்குக் கூட, இல்லை அது, உனக்கேன் அது…? செல்லாத இடம் சென்று, இல்லாததை காட்டுகின்றாய், கிள்ளாததை கிள்ளிக் கிள்ளி, பொல்லாததை தீட்டுகிறாய் அல்லாததை அள்ளி அள்ளி, அல்லாட வைக்கிறாய், அழகுதனை அதிகம் காட்டி, அழைக்கழிக்கிறாய், அசிங்கத்தை சிங்கமாக்கி, அதிர வைக்கிறாய், திகிலை திரட்டி காட்டி, திணர வைக்கிறாய், அநாகரீகத்தை நாகரீகமாக்கி அருவருக்க செய்கிறாய் கொடூரத்தினை கட்டவிழ்த்து, கொடுமைப் படுத்துகிறாய் இதெல்லாம்…. தீவிர […]

Read More