துபாய் தமிழ்ச் சங்கம் கொண்டாடிய பொங்கல் விழா

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வெகு சிறப்பாக 20.1.2012 வெள்ளிக்கிழமை மாலை அல் தவார் ஸ்டார் இண்டர்னேஷனல் ஸ்கூலில் நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஜெகநாதன் வரவேற்றார்.  துணைத்தலைவர் குத்தாலம் லியாக்கத் அலி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக இந்திய கன்சல் மதுரை அசோக் பாபு, ஆலியா டிரேடிங் மேலாண்மை இயக்குநர் ஷேக் தாவுது, பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் அதிகாரி […]

Read More

சலீம் அலி – பறவையியல் ஆர்வலர்

  “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பாடியதின் மூலம் பறவை இனங்களின் மீது தனக்குள்ள அன்பை வெளிப்படுத்திய மகாகவி பாரதி வாழ்ந்த சமகாலத்தில் பம்பாயில் வாழ்ந்த பறவையியல் ஆர்வலரான சலீம் அலி என்று அழைக்கப்பட்ட “சலீம் மொய்சுத்தன் அப்துல் அலி” என்பர், இந்திய பறவைகளை பற்றி செய்த ஆராய்ச்சிகளுக்காக மூன்று கவுரவ டாக்டர் பட்டங்களையும், இந்திய அரசின் உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருதையும் பெற்றார். 1896 – ஆம் ஆண்டு நவம்பர் 12 – […]

Read More

மனைவி

மஞ்சள் நதிமுகம் அஞ்சிச் சிவந்திட மஞ்சம் விரித்து வைத்தாள் – தனதோர் நெஞ்சைத் திறந்து வைத்தாள் – அந்தப் பிஞ்சு மயில்தனைக் கட்டிப் பிடித்ததும் பிள்ளையைப் போல் குதித்தாள் – சுகமோ கொள்ளை என்றே கொடுத்தாள். சாய்ந்து இரண்டுளம் பாய்ந்து துடிக்கையில் தாலியைச் சாட்சி வைத்தாள் – உனக்கே ஆலிலைக் காட்சி என்றாள் – அவள் சாந்துப் பொட்டில் ஒருமுத்தமிட்டேன் –அதில் நீந்திக் களித்திருந்தாள் – முதல் சாந்தி முடித்திருந்தாள்! கட்டிக் கிடந்திரு கன்னம் வருடிய கைகளைப் […]

Read More

துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் செயற்குழு கூட்டம் !

முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!!               துபாய் : துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் செயற்குழுக் கூட்டம் 12/01/2012 வியாழன் மாலை 8.30 மணிக்கு துபை ஸ்டார் மெட்ரோ ஹோட்டல் கான்ஃப்ரன்ஸ் அரங்கில் நடைபெற்றது. அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாகத் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தை திண்டுக்கல் ஜமால் முஹ்யத்தீன், இறைமறை வசனங்கள் ஓதி துவக்கி வைத்தார். பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான் வரவேற்றுப் பேசினார்.தொடர்ந்து அவர் பேசுகையில் இன்றைய நிலையில் நமது அமீரக […]

Read More

மதுரை பற்றி..

  மதுரை பற்றி.. கவிஞர் வைரமுத்து (1997)   பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள்         பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி தோண்டிய புலவர் சொல்லடியும் – இளந்         தோகைமார்தம் மெல்லடியும்             மயங்கி ஒலித்த மாமதுரை – இது             மாலையில் மல்லிகைப் பூமதுரை! நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான்         நிமிர்ந்து முட்டும் கோபுரமும் ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் – தமிழ்         அழுந்தப் பதிந்த சுவடுகளும்             காணக் கிடைக்கும் பழமதுரை – தன்             கட்டுக் கோப்பால் இளமதுரை! மல்லிகை மௌவல் அரவிந்தம் – வாய்         மலரும் கழுநீர் சுரபுன்னை குல்லை வகுளம் குருக்கத்தி – இவை         கொள்ளை அடித்த வையைநதி             நாளும் ஓடிய நதிமதுரை – நீர்             நாட்டிய மாடிய பதிமதுரை தென்னவன் நீதி பிழைத்ததனால்         தெரிந்து மரணம் அழைத்ததனால் கண்ணகி திருகி எறிந்ததனால் – அவள்         கந்தக முலையில் எரிந்ததனால்             நீதிக் கஞ்சிய தொன்மதுரை – இன்று             ஜாதிக் கஞ்சும் தென்மதுரை! […]

Read More

லோக்பாலா? “வீக்பாலா?”

இனிய திசைகள்- ஜன.2012 தலையங்கம் தலையங்கம் லோக்பாலா?  “வீக்பாலா?” ——————————————————- லோக்பால் மசோதா 1968ஆம் ஆண்டு முதல் பொதுவாக விவாதிக்கப்பட்டு வந்ததே தவிர நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குக் கூட எடுத்துக் கொள்ளப்படாமல் காலம் கடத்தப்பட்டுக் கொண்டே வரப்பட்டது.43 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 டிசம்பரில் நிலைக்குழு வரை கொண்டு செல்லப்பட்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்கள் அவையில் நள்ளிரவுவரை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டு விட்டது. லோக்பால் மசோதாவைத் தயாரித்த நிலைக்குழுவின் தலைவர் அபிஷேக் சிங்வி மக்களவையில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ‘மத்திய […]

Read More

முகங்கள்

முகங்கள் க.து.மு. இக்பால் சோதனையின் மத்தியிலும் உறுதி காட்டும் சோராத மாந்தார்க்குச் சுடர் முகங்கள் வேதனையின் இடையினிலும் புன்னகைக்கும் வீரர்க்கு மங்காத ஒளி முகங்கள் சாதனைகள் பலபுரிந்தும் அடக்கம் பேணும் சான்றோர்க்கு வற்றாத அருள்முகங்கள் போதனைகள் பலநல்கும் பூமி மீது பொறுமையினால் பெருமைபெறும் புகழ் முகங்கள் அடுத்தவரின் நலம்கண்டு மகிழ்ச்சி கொள்ளும் அன்பாளர் திருமுகங்கள் தாமரைகள் அடுத்தவரின் துயர்கொண்டு வாட்டம் கொள்ளும் ஆன்றோரின் பொன்முகங்கள் நீர்த்துறைகள் அடுத்தவரின் இடர்கண்டு சிரித்திருக்கும் அழிவுக்கு வழிதேடும் இருள் முகங்கள் அடுத்தவரை […]

Read More

தலைவாரிப் பூச்சூடி உன்னை…

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை! சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்து கின்றாய்? விலைபோட்டு வாங்கவா முடியும்? – கல்வி வேளைதோ றும்கற்று வருவதால் படியும்! மலைவாழை அல்லவோ கல்வி? – நீ வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி! படியாத பெண்ணா யிருந்தால் – கேலி பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்! கடிகாரம் ஓடுமுன் ஓடு! – என் கண்ணல்ல? அண்டை வீட்டுப் பெண்களோடு. […]

Read More

ஜ‌ன‌வரி 16, அப‌ர‌ஞ்சி ஆசிரியை துபாய் வ‌ருகை

முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் தொட‌க்க‌ப்ப‌ள்ளியின் ஓய்வு பெற்ற‌ ஆசிரியை அப‌ர‌ஞ்சி செல்ல‌ம் அவ‌ர்க‌ள் 16.01.2012 திங்க‌ட்கிழ‌மை ஏர் இந்தியா விமான‌ம் மூல‌ம் துபாய் விமான‌நிலைய‌ம் டெர்மினல் 2 க்கு ம‌திய‌ம் 1.30 அள‌வில் வ‌ருகை த‌ர இருக்கிறார்.

Read More

முதுகுளத்தூர் நஜுமுன்னிசா ஜமால் அவர்களுக்கு முனைவர் பட்டம்

சென்னை : சென்னை வண்டலூர்  பி.எஸ்.அப்துர்ரஹமான் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஜனாபா.டி.நஜுமுன்னிசா ஜமால் அவர்களுக்கு 08.01.2011  ஞாயிற்றுக்கிழமையன்று  முனைவர்  பட்டம்  அண்ணா பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா வழங்கி கௌரவித்தார். நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், துணைவேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர் சென்னை-40 அண்ணா நகர்  ஆர்க்கிடெக்ட் கே.ஜமால் முஹைதீன், ஆர்க்கிடெக்ட்  அவர்களின் மனைவியாவார். . மேலும் இவர் ஹாஜி எம்.எஸ்.முத்து முஹம்மது அவர்களின்  அண்ணன்,செனனை,அண்ணா நகர் மர்ஹும் டாக்டர்.எம்.எஸ்.திவான் […]

Read More