முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!!
துபாய் : துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் செயற்குழுக் கூட்டம் 12/01/2012 வியாழன் மாலை 8.30 மணிக்கு துபை ஸ்டார் மெட்ரோ ஹோட்டல் கான்ஃப்ரன்ஸ் அரங்கில் நடைபெற்றது.
அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாகத் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தை திண்டுக்கல் ஜமால் முஹ்யத்தீன், இறைமறை வசனங்கள் ஓதி துவக்கி வைத்தார்.
பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான் வரவேற்றுப் பேசினார்.தொடர்ந்து அவர் பேசுகையில் இன்றைய நிலையில் நமது அமீரக காயிதெமில்லத் பேரவைக்கு பொற்காலம் என்று குறிப்பிட்டு பேரவை வளர்ச்சியை நோக்கிய பயணத்தை சுட்டிக் காட்டினார்.
பேரவை தலைவர் லியாகத் அலி தனது தலைமையுரையில்: தாய்ச் சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்று இந்தியா முழுவதிலும் கால் பதித்து தனது சேவையை ஆற்ற தயாராகி வருவதை சுட்டிக் காட்டி இந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும் குறிப்பாக தமிழர்களுக்கும் அனைத்து வித சேவைகளையும் முனைப்புடன் ஆற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் வருகின்ற மார்ச் 10ம் நாள் திருப்பூர் நகரில் நடைபெற உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தின நிகழ்ச்சியில் நமது பேரவையின் சார்பில் தாய்ச் சபையின் முழு வரலாற்றையும் வெளிக் கொணரும் முயற்சியின் தொடர்ச்சியாக இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்களின் வெளியீடு சம்மம்ந்தமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
பேரவையின் பொதுச் செயலாளர் முஹம்மது தாஹா இக்கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி அனைவரின் கருத்துக்களையும் அடிக்கடி பகிர்ந்து கொள்ள இது போன்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொரு பகுதிகளிலும் நடத்தப்படும் என்றும், விரைவில் பாரதப் பிரமர் அறிவித்துள்ள வெளி நாடு வாழ் இந்தியர்கள் நலன் சம்மந்தப்பட்ட சலுகைகளை அமீரக மக்களுக்கு சென்றடைய நமது காயிதெமில்லத் பேரவை விரைந்து பணியாற்ற தயார் நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து செயற்கு உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும், நாம் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய ஆக்கப்பூர்வமான திட்டங்கள் குறித்தும் காரசாரமான கருத்துக்களை முன் வைத்தனர்.
செயற்குழு கூட்டத்தில் துணைப் பொருளாளர் முத்தலிபு இக்பால்,அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,கொள்கை பரப்புச் செயலாளர் கடையநல்லூர் எஸ்.கே.ஹபீபுல்லாஹ்,விழாக்குழு செயலாளர்: இராமநாதபுரம் பரக்கத் அலி,மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்து அன்சாரி,கீழை ஹமீது யாசின், துபை மண்டலச் செயலாளர் முதுவை ஹிதாயத்,அபுதாபி மண்டலச் செயலாளர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத்,ஷார்ஜா மண்டலச் செயலாளர் தஞ்சை பாட்சா கனி,தஞ்சை பாட்சா கனி,உம்முல் குவைன்:அஞ்சுகோட்டை அப்துல் ரஜ்ஜாக்,
அல் அய்ன்: இராமநாதபுரம் தைய்யுப் அலி,லால்பேட்டை நூருல் அமீன்,ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹ்யத்தீன்,தணிக்கையாளர்கள் காயல் எஹ்யா முஹையத்தீன்,கீழக்கரை ஹமீத் பக்ஷ் யூசுப், உள்ளிட்ட கலந்து கொண்ட அனைவரும் பேரவைக்கு உறுப்பினர்களை அதிகரிக்கும் பணியை உடனடியாக துவங்க கேட்டுக் கொண்டனர்.
செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1,பாரதப் பிரதமர் அறிவித்துள்ள வெளி நாடு வாழ் இந்தியர்களின் நலனுக்கான சலுகைகளை அனைவருக்கும் சென்றடையும் விதத்தில் அதன் சேவையில் தன்னை இணைத்துக் கொள்ளவது.
2,மீலாது விழாக்களை ஏற்பாடு செய்து அதில் அனைவரையும் ஒன்றிணைக்க கேம்ப்களில் கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
3,உறுப்பினர்கள் சேர்ப்புப் பணியை தீவிரப்படுத்தவும்,அனைத்து நிர்வாகிகளும் ஒவ்வொருவரும் தலா 10 நபர்கள் வீதம் தங்கள் பங்கிற்கு உறுப்பினர்களை சேர்ப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
முடிவில் அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் நன்றி கூற துஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.