“பால் கலக்காத “டீ” சாப்பிட்டால் உடல் எடை குறையும்”

“பால் கலக்காத “டீ” சாப்பிட்டால் உடல் எடை குறையும்” என ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க படாத பாடுபடுகின்றனர். மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அத்துடன் பால் கலக்காத வெறும் டீயை மட்டும் குடித்தால் போதும். உடல் எடை அதிகரிக்காமல் கணிசமாக குறையும் என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏனெனில், தேயிலையில் உடல் எடையை குறைக்கக்கூடிய பல மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால், அதில் கலக்கப் படும் பசும் […]

Read More

சரித்திரம் பேசுகிறது : இஸ்லாமியக் கம்பர்

நறுமணப் பொருளை விரும்பி வாங்கும் பழக்கமுள்ள எட்டையபுரம் மன்னர் வெங்கடேச பூபதி கல்வியிலும் ஒழுக்கத்திலும் மெய்ஞானத்திலும் உயர்ந்து விளங்கிய நறுமணப் பொருள் வணிகரான செய்கு முகம்மது அலியாரை எட்டையபுரத்திலேயே தங்கும்படிச் செய்தார். இவ்வேளையில் அவருக்கு அரசவைக் களப்புலவர் செந்தமிழ்ச் செல்வர் கடிகை முத்துப்புலவரின் நட்பும் கிட்டியது. ஆதலால், முகம்மது அலியாரின் தவப்புதல்வர் உமறு தமிழ்மேதை கடிகை முத்துப்புலவரிடம் தமிழ்ப் பாடங்கேட்டுக் கற்பன கற்று, கேட்பன கேட்டுப் புலமையில் சிறந்து வளரலானார். பின்னர் உமறின் அருட்திறத்தையும், கவிதையாற்றலையும், உள்ள […]

Read More

ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ! வைரமுத்து ….

ஒரு நாளும் உங்களை நான் தேடி வந்து சந்தித்ததில்லை. ஆனால், அந்த ஒரு கறுப்புப் பகலில் மட்டும் உங்களை ஓடிவந்து பார்க்காமல் என்னால் உட்கார முடியவில்லை.ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க் கிடத்தப்பட்டிருந்தீர்கள். உங்களைத் தொட்டுப் பார்க்க நினைத்து, தொட முடிந்த தூரம் வந்தும் தொட முடியாமல் நின்றேன். எம்.ஜி.ஆருக்கே மரணமா? எனக்கு முதலில் மரணப்பயம் வந்தது. காற்று – சமுத்திரம் – வானம் – எம்.ஜி.ஆர் இவைகளெல்லாம் […]

Read More

பரோட்டா மகாத்மியம்

http://www.sramakrishnan.com/?p=2801 ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும் என்ற ஷாநவாஸின் புத்தகத்தை வாசித்தேன், முன்னதாக இவரது கட்டுரைகளில் சிலவற்றை உயிரோசையில் வாசித்திருக்கிறேன், பரோட்டா குறித்து மிகச்சுவையாக எழுதப்பட்ட  முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ள சிறந்த புத்தகமிது, உணவுக்கலாச்சாரம் பற்றி தமிழில் அதிக புத்தகங்கள் வருவது கிடையாது, சமையல்குறிப்புகளை புத்தகங்களாக எழுதும் பலருக்கும் உணவின் வரலாறு தெரியாது, அது ஏற்படுத்திய கலாச்சார மாற்றங்கள் மற்றும் புதிய ருசியின் தனித்துவங்கள் பற்றித் தெரியாது, ஆனால் ஷாநவாஸ் பரோட்டாவின் சகலபரிமாணங்களையும் படிப்பவர் […]

Read More

தோல் தொற்று நோய்களைத் தடுக்க…

மனித உடலின் தோல் பகுதி ஆரோக்யத்தின் கண்ணாடி. தோலில் பிரச்னை ஏற்பட்டால் உடலில் ஏதோ தொந்தரவு உள்ளது என்று அர்த்தம். தவறான உணவு முறை, அலர்ஜி, சுகாதாரத்தில் கவனம் இல்லாமை, சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் தோல் நோய்கள் ஏற்படுகிறது. தோல் நோய்களை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது பல்வேறு மனஉளைச்சல்களை ஏற்படுத்துகிறது. எனவே தோல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த வேண்டும் என்கிறார் காஸ்மெடிக் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி. தோலின் தன்மைக்கு […]

Read More

நெஞ்சுப் பொறுக்குதில்லையே..!!!!

கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி                 குதறி விடத்தான் கொலைவெறி நஞ்சு கலந்து வருவதை              நன்க றிந்த நிலையினால் நெஞ்சுப் பொறுக்கு    தில்லையே             நேரமைத் திறனு  மின்றியே வஞ்சிக் குமிவர் பிழையினை             வளர விட்டக் கொடுமையே அஞ்சி அஞ்சி வாழ்வதால்           அன்னைத் தமிழும் சாகுமே கெஞ்சிக் கேட்டா லிவர்களின்             கொடுமை யின்னும் கூடுமே பஞ்சில் வைத்தத் தீயினாய்             பாழாய்ப் போகும் தாய்மொழி பிஞ்சு நாவுகள் சொல்லுமே            பிழையாய்த் தமிழைக் […]

Read More

ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்

ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் (AUTO LOAN SCHEME) தமிழ் நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 1 இத்திட்டத்தின் கீழ் கடன் எதற்கு வழங்கப்படுகிறது? இத்திட்டத்தின் கீழ் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த மற்றும் பார்ஸி சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சுய தொழில் துவங்கிட கூட்டுறவு சங்கங்கள் […]

Read More

விதவை

                                   N. ஹஜ் முகம்மது ஸலாஹி. வாடிட தயாராக இருக்கும் மலர்களுக்கு தண்ணீர் ஊற்றி   மறுவாழ்வு கொடுக்கிறது       இந்த சமூகம். உயிரிழக்க தயாராக இருக்கும் தாவரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி    மறுவாழ்வு கொடுக்கிறது        இந்த சமூகம். பசியால் துடித்து மயங்கும் ஜீவன்களுக்கு உணவூட்டி மறுவாழ்வு கொடுக்கிறது      இந்த சமூகம். இயங்க தயங்கிக் கொண்டிருக்கும்  வாகனங்களை சரி செய்து  மறுவாழ்வு கொடுக்கிறது      இந்த சமூகம். மூலையிலே முடங்கி கிடக்கும் இயந்திரங்களை செப்பனிட்டு   […]

Read More

குடியரசு தினம்

குடியரசு தினம்; கோபத்தில் மனம் குடியரசுக் கொண்டாட்டம் வருடந்  தோறும் *****குறைவின்றி விமர்சையுடன் நடந்த போதும் விடியாத இரவினிலே பிறந்த நாட்டில் *****விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப் பாட்டில் முடியாத நிலைமைக்கு வந்த தாலே *****முதலில்லா வியாபாரம் ஊழல் தானே படியாத அரசியலார் போடும் வேசம் ***** பகற்கொள்ளை நடக்குமெங்கள் பார(த) தேசம் புனிதமான ஆன்மீக வாழ்க்கை காணோம் ***** பொய்யுலகி  னாசையிலே மூழ்கிப் போனோம் மனிதமானம் என்னவென்றுத் தெரியாக்   காயம் *****மலையேறிப் போனதிங்கு மனித நேயம் […]

Read More

ஸஃ பர்

கயத்தாறு – அல்ஹாஜ் ச. கா. அமீர்பாட்சா ஸஃபர் மாதம் இஸ்லாமிய ஆண்டின் இரண்டாவது மாதமாகும். இந்த மாதத்தை பீடையுடைய மாதம், கழிசடை மாதம், நல்ல காரியங்கள் செய்யக் கூடாத மாதம் என்ற மெளட்டீக எண்ணம் தமிழ் நாட்டில் நீண்ட காலமாக நிலவி வந்தது. ஆனால் தற்பொழுது நாடெங்கிலும் அதிகமான அரபுக் கல்லூரிகள், அதிலிருந்து கல்வி அறிவு பெற்று வெளிவந்து தீன் சுடர் பரப்பும் ஆலிம் பெருந்தகைகளின் அளப்பரிய முயற்சியால் ‘பீடை பிடித்த மாதம்’ இன்று ‘பீடுடைய […]

Read More