ரூபாய்க்கு மதிப்பு போச்சு!

ரூபாய்க்கு மதிப்பு போச்சு! எஸ். கோபாலகிருஷ்ணன் இதுவரை இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையானச் சரிந்துள்ளது. இதனால்,சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு? ‘பட்ட  காலிலே படும்’ என்று சொன்னது எவ்வளவு பெரிய உண்மை! விலைவாசி உயர்வால் மூச்சுத் திணறிப் போயிருக்கும் சாதாரண மக்களுக்கு மேலும் ஒரு சோதனை. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய  ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. ஒரு டாலரின் மதிப்பு46அல்லது 47ரூபாயாக இருந்தது போக, இப்போது (25.11.2011நிலவரப்படி) 52.25ஆக சரிந்துவிட்டது. இதனால் […]

Read More

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன்!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன் – கல்விகடன் பெற இணைக்க வேண்டிய இணைப்புகள் விவரம்:   முழுமையாக நிரப்பப்பட்ட கல்விகடனுக்கான விண்ணப்ப படிவத்துடன் கீழ்காணும் இணைப்புகளை முறையாக இணைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரிடம் ஒப்படைக்க வேண்டும். 1.    பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 5 காப்பி மாணவருக்கும் பெற்றோர்க்கும். 2.    அட்டர்ஸ்டட் பெற்ற இரண்டு காப்பி ரேசன் கார்டு ஜெராக்ஸ். 3.    அட்டர்ஸ்டட் பெற்ற இரண்டு காப்பி அடையாள அட்டை மாணவருக்கும் பெற்றோர்க்கும். 4.    பெற்றோரின் […]

Read More

முஹர்ரம் என்னும் அருள்மாதம் !

  அல்லாஹ் உலகைப் படைக்க நாடி       அரும்பாய்ச் செய்து கமாவை எல்லா நலனும் இம்மை மறுமை        இருக்க இயக்கி வளர்த்தானே ! நல்லார் நபிமார் இலட்சம் மேலும்         நானிலம் எங்கும் வந்ததுவும் வெல்லும் வேதம் கமாவாலே          விளக்கும் முஹர்ரம் அருள்மாதம் ! பூவுல கெங்கும் ஹிஜ்ரீ புத்தாண்டு         பூத்து மணக்கும் புதுமை காண் ! மேவும் மனங்களில் மேன்மை பொங்க         மேலாம் தொழுகை மிளிர்வதைக் காண் ! காவும் […]

Read More

திருக்குறளில் இஸ்லாமியச் சிந்தனைகள்

( தமிழருவி மு.க. அன்வர் பாட்சா, தமிழாசிரியர். SBOA மேனிலைப் பள்ளி. கோவை )   கல்லை ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தான் கற்கால மனிதன். கை விரல்களால் கணினியில் உலகைக் கொண்டுவந்து வாழ்கின்றான். இக்கால மனிதன். இந்த வளர்ச்சியை என்னவென்று சொல்வது? நாளைய மனிதன் வளர்ச்சியை நினைத்தாலே பிரமிப்பு ஏற்படுகிறது.   இந்த அளவிற்கு மனிதன் வளர்ந்துவிட்டதை நினைத்து நாம் ஒருபுறம் பெருமிதம் அடைந்தாலும், மறுபுறம் மனிதன் தன் நிலையில் தடம்புரள்கின்றானோ என அச்சம் கொள்ளவும் வேண்டியுள்ளது. […]

Read More

அனைத்துக் கட்சிகளும் அரவணைத்து “அணையுங்கள்”

பாட்டன்மார் கெட்டியாய்த் தானே அணைகட்டிப் போட்டனரே சேட்டன்மார் மாத்திரம் எப்படித்தான் கற்றனர்ச் சேட்டைகளை நாட்டாமை தீர்ப்பு வழங்கவே கூட்டம் நடுவணாட்சிக் கூட்டாமல் தள்ளிவைத்தால் நாடோறும் பாடிடும் கூக்குரலே “கவியன்பன்”, கலாம்

Read More

முல்லைப் பெரியாறு அணை

“116 வருட சுண்ணாம்பு அணை இன்னும் எவ்வளவு நாள் தாங்கும்? தங்கள் இடத்திலேயே, தங்கள் செலவிலேயே, புதிய அணையைக் கட்டி,தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே. மேலும் ஒப்பந்தம் எழுதிக்தருகிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது? இது என்ன வீண் பிடிவாதம்? இது என்ன பைத்தியக்காரத்தனம்?” என சில ஊடகங்கள் கூறுகின்ன்றன. கேரளா இதுவரை செய்த அநியாயங்கள்,புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் இவை […]

Read More

அணைக்கட்டு அன்பை அணைக்கட்டும்

’முல்லைப் பெரியாறு’ சொல்லிப் பாரு நற்றமிழ்ப் பேரு நம்மை ஏய்ப்பது யாரு? உடைக்க நினைப்பது ஒற்றுமை உணர்வுகளை தண்ணீரை வைத்து தானியம், காய்கறி அரிசியும் பயிரிட்டாயா அரசியலைப் பயிரிடுகின்றாய் அண்டை மாநிலமே அரிசியும் பருப்பும் தந்தும் சண்டைப்  போட்டே சகோதர்களின் மண்டை ஓட்டை வைத்து மல்லுக்கு நிற்கின்றாய் உடைப்பதில் தான் இடைத்தேர்தல் வெற்றி கிடைப்பதென்பது  மடையர்களின் சூழ்ச்சி தமிழின் உதிரமாய் உன்றன் மொழியும் தமிழனின் உதிரமும் தட்டிப் பறிக்கின்றாய் உன்றன் பூமியில் உள்ள சாமியைத் தேடி உன்றன் […]

Read More

விக்கிப்பீடியா ஊடகப் போட்டி

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இதில் பங்கேற்போர் தமிழ்–தமிழர் தொடர்புடையபுகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம்.போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். இப்போட்டியின்மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100டாலர்கள், மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம்இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்றுசிறப்புப் பரிசுகளும், தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப் பரிசாகவும்வழங்கப்பட உள்ளன. போட்டி, நவம்பர் 15, 2011 முதல் பிப்ரவரி 29, 2012 வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர்http://ta.wikipedia.org/wiki/contest>  என்ற இணைய முகவரிக்குச் சென்று முழு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தகுந்த பதில்களைப் பெறலாம். குறிப்பு: 1. பரிசுத்தொகை வெற்றிபெறுபவரின் நாட்டின் நாணய அலகுக்கு மாற்றப்படும். 2. தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டிக்காக தமிழ் விக்கிப்பீடியாவில் வலைவாசல் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.அதிலும் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. அதற்கான இணைய முகவரி: http://tawp.in/r/2rbo

Read More

இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்

அப்போதே … நிகழ்ந்த அதிசயம் ( இளையான்குடி கவிஞர் ஹிதாயத்துல்லாஹ் ) இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம் – 13 ( நர்கிஸில் 2ம் பரிசு பெற்ற கட்டுரை ) கலீபாக்கள் ஆட்சியில் மட்டுமன்றி, அதனைத் தொடர்ந்து வந்த முஸ்லிம்களின் ஆட்சியின் போதும் முஸ்லிம் அல்லாத மக்கள் பயமின்றி சுதந்திரமாக நடந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.  இதற்கு சில சான்றுகள். சர் தாமஸ் ஆர்னால்ட் என்னும் ஆங்கிலேய வரலாற்றாசிரியர்    The spread of Islam in the world என்னும் […]

Read More

கவிதை என்பது

கவிதைகள் என்பது: உயிரின் மீது பதியும் உயிரெழுத்து மெய்யின் புலன்களை மெய்யாகவே புலன்விசாரணை செய்யும் மெய்யெழுத்து நிராயுதபாணிகளான நியாயவான்கட்கு ஆயுதமாய்க் காக்கும் ஆயுத எழுத்து கேள்விக்குறியாய் கூனிவிட்ட சமுதாயத்தை ஆச்சர்யக் குறியாய் ஆகாயமாய்ப் பார்த்திட ஆன்மபலம் ஊட்டும் கவிதைகள் யாவும் பொய்மைகள் அல்ல; ஈற்றெதுகையில் மிளிரும் இறைமறையும் இலக்கிய நடையால் இதயத்துக்குள் உறையும் பெருமானார் முஹம்மத்(ஸல்) அருள்மொழிகள் யாவும் புதுநடையில் போதிக்கும் புரட்சிகளாய் சாதிக்கும் செய்யுளின் யாப்புத்தறியில் பொய்யாமொழிப் புலவன் நெய்து தந்த  திருக்குறள் மெய்”மை” தானே […]

Read More