ஏங்கும் நெஞ்சம்

மீண்டும் மீண்டும் காண எந்தன் கண்கள் ஏங்குதே! மக்கா மதினாவைச் சுற்றியே எந்தன் நினைவு ஓடுதே! இறுதிக்கடமை நிறைவேற்ற நெஞ்சம் துடிக்குதே! இறுதிநபி வாழ்வில் எந்தன் வாழ்வும் தொடருதே! [மீண்டும் மீண்டும்] ஆவல்கொண்டு காப்பவன்தான் நமது இறைவனும் அவன் காவலில்தான் இயங்குதிந்த உலகம் முழுவதும்! ஆதி அந்தம் அனைத்தும் படைத்து பாது காப்பவன் அணுவுமெங்கும் அசையாது அவன் துணையு மின்றியும்! [மீண்டும் மீண்டும்] இறைவன் சொன்ன வாக்குகளை பற்றிப்பிடிக்கவே இருதயத்தின் குருதி முழுதும் எழுச்சி பெருகுதே! இன்னல் […]

Read More

”தியாகம் என் கலை!”

  நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்!   அவர் தொடங்கி வைத்த “முதலானவை” பல. அவற்றுள் முக்கியமானது, தியாகம்!   அவர் கண்ட கனவு, வஹீயாய் அமைந்தது; செய்த செயல் வரலாறானது; அதாவது- வாழும் வரலாறாக- உலக முடிவு நாள்வரை நீளும் வரலாறாக! அதிலே நமக்குள்ள பங்கை நாமறிந்தோமா?   ஆன்மீக உலகம், திரும்பத் திரும்ப நினைவு கூர்ந்து நெகிழும் அந்தத் […]

Read More

முதுகுளத்தூர் அருகேயுள்ள கருமலைச் சேர்ந்த பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சரானார்

சென்னை: கட்சியில் நீண்ட கால உறுப்பினர்களாக இருந்து விசுவாசமாக உழைத்ததற்கு பரிசாக தமிழக அமைச்சரவையில் 6 புதிய அமைச்சர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. தமிழக அமைச்சரவை நான்காவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை கடந்த மே 16-ம் தேதி பொறுப்பேற்றது. நான்கு மாதங்களில் நான்காவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையன்று தமிழக அமைச்சரவையில் இருந்து 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக ஆறு பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாகப் பொறுப்பேற்க உள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் […]

Read More

தேசிய லங்காடி போட்டி: முதுகுளத்தூர் மாணவர் தேர்வு

முதுகுளத்தூர் : தேசிய லங்காடி போட்டிக்கு தமிழக அணிக்காக முதுகுளத்தூர் மாணவர் தேவசித்தம் தேர்வு செய்யபட்டுள்ளார். தேசிய அளவில் சீனியர் லங்காடி போட்டிகள் நவ.,4ம் தேதி புனேயில் நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ளும் தமிழக அணி வீரர்களுக்கான தேர்வு மதுரையில் நடந்தது. முதுகுளத்தூர் மாணவர் தேவசித்தம் தேர்வு செய்யபட்டுள்ளார். இவரையும், பயிற்சியாளர் ஜான்சன் கலைச்செல்வனையும், ராமநாதபுரம் மாவட்ட லங்காடி கழக தலைவர் குமரன் சேதுபதி, துணை தலைவர் ரமேஷ்பாபு, பொருளாளர் ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.

Read More