( டாக்டர் மஹாதிர் முஹம்மது அவர்களின் உரையிலிருந்து)
தோற்றத்தைவிட உள்ளுணர்வுக்கு இஸ்லாம் முக்கியத்துவம் தருகிறது.தொழுகையில் ” நிய்யத்” எனப்படும் எண்ணம் முக்கியம். ஆதலால் நலக்குறைவாலோ, காலமின்மையாலோ, சூழ்நிலைகளாலோ, தொலைவினாலோ வணக்க முறையைச் சுருக்கிக் கொள்ளவோ குறைத்துக்கொள்ளவோ அல்லது சமிக்கை மூலம் தொழுது கொள்ளவோ இஸ்லாம் அனுமதிக்கிறது. பெரும்பான்மை முஸ்லிம்கள் அடிப்படை நோக்கத்தை அறியாது, சடங்குகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பது பரிதாபத்திற்குரியது.
ஹிஜ்ரத் நிகழ்ந்து ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்குப் பின்னும் மத துரோகிகளின் தலைகளை வெட்டுவது குறித்து விவாதம் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஊன்மையில் அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது என்பது இயலாத காரியம்.
ஆனால், நமக்குள் ஒற்றுமையின்றி ஒருவரை ஒருவர் காபிர் என்று கூறும் விவாதம் தொடர்ந்து நடைபெற்றால் நாம் அனைவருமே காபிர்களாக கருதப்படுவோம். உலகில் முஸ்லிம்களே இல்லை. ஏதேனும் ஒருசாரார் மட்டும் சரியானவர்கள் என்றால் உல்கில் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாதியாகிவிடும்.
உலகில் உள்ள பெரும்பான்மை கிறித்தவர்கள், புத்தர்கள், ஹிந்துக்களைப் போல பெரும்பான்மை முஸ்லிம்களும் அடுத்தவர்க்குத் தீங்கு நினைக்காதவர்கள், இவர்களின் செயல்பாடுகள் சில நேரங்களில் திரித்துக் கூறப்பட்டாலும் அனைவரும் நல்லவர்களே.
அனைத்து மதங்களிலும் தீவிரவாதிகள், அறிவிலிகள், வன்முறையாளர்கள் இருக்கின்றனர். மற்ற மதங்களில் உள்ளவர்களை விட முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லை.
உல்கில் இஸ்லாம் பிற மதத்தார் மட்டுமின்றி முஸ்லிம்களாலும் தவறாக் புரிந்துகொள்ளப்பட்ட மார்கமாகும். முஸ்லிம்களின் புரிந்து கொள்ளாமையால் மற்ற மதத்தவர்ககும் தமக்கும் இடையில் மிகப்பெரும் தடையை உருவாக்கியுள்ளனர்.
முஸ்லிம்களின் முன்னோர்கள் எவரும் முஸ்லிமாகப் பிறக்கவில்லை. முஸ்லிமக்ளின் தொடர்பு கொண்டதால் முஸ்லிம்களாக மதம் மறியவர்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டனர்.
நம் முன்னோர்கள் பிற மதத்தவரிடம் தொடர்பு வைக்காமல்லா இருந்தனர். அப்படி இருந்திருந்தால் அவர்கள் முஸ்லிம்களாக மாறி இருக்கமாட்டார்கள்.அந்நிலையில் இன்று வாழும் முஸ்லிம்கள் முஸ்லிம்களாகப் பிறந்திருக்கமாட்டார்கள். முஸ்லிம்களால் புரிந்துகொள்ள இயலாத பல செய்திகளில் இஸ்லாம் வலியுறுத்தும் முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற தத்துவமும் ஒன்று.
முஸ்லிம்களில் காணப்படும் பிரிவுகளில் இருப்போர் மற்ற பிரிவினரைப்பார்த்து இவர்கள் முஸ்லிம்கள் அல்லர். முஸ்லிமாகள் என்று கூறத் தகுதியற்றவர்கள் . அதனால் அவர்கள் சகோதரர்கள் அல்லர் என்று கூறிவருகின்றனர்.
பிற சமயத்தார் முஸ்லிமகளை வெறுப்பத்றகுக் காரணம் முஸ்லிம்களைப் புரிந்து கொள்ளாததுதான். அது அவர்கள் தவறல்ல, அதற்கு காரணம் முஸ்லிம்களாகிய நாம்தான்.
ஒரு காலத்தில் முஸ்லிம்களின் நாகரிகம் உச்சத்தில் இருந்தது. முஸ்லிம்கள் செலவ வளத்துடன் வாழ்ந்தனர் என்பது மட்டுமல்ல, விஞ்ஞானத்திலும், கண்க்கியலிலும் ,கப்பல் ஓட்டுவதிலும்,வானவியலிலும்,கட்டிடக் கலையிலும் சிறந்து விளங்கினர்.
முஸ்லிம் நாடுகள் ஒரு கலிஃபாவின் தலைமையில் ஒன்றிணைந்து வலிமையாக இருந்தது.அவர்கள் வெற்றியாளர்களாக திகழ்ந்த போதும் இஸ்லாத்தை விட்டு விடவில்லை. அவர்கள் அல்குர் ஆனின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு இம்மைக்கும் மறுமைக்கும் உரிய வாழ்வினைச் செம்மையாக பெற்றிருந்தனர்.
ஆனால் இவர்களுக்கு பிறகு மறுமையை மட்டும் போதித்து அதற்கென்று அர்பணிக்கும் போதனைகளை வழங்குவோர் வந்தனர். இறைவன் படைத்தளித்த இவ்வுலக வாழ்வை சாபக்கேடாக கருதி இவ்வுலக வாழ்க்கை காபிர்களுக்குரியது என்றும் அதை இன்புறக்கழித்தால் மறுமையில் அழிந்து போய்விடுவர் என்று கூறலாயினர்.
இந்த கருத்துப் பரவலுக்குப் பின் முஸ்லிம்களுக்கு இவ்வுலகக் கல்வி மட்டும் போதுமானது என்று கருத்தில் கொண்டனர்.
அதனால், பன்னூறு ஆண்டுகளாக முஸ்லிம்கள் தங்களின் திறமையை, அறிவை மற்றும் வலிமையை இழந்தனர்.
இன்று அவர்கள் வலிமையற்றவர்களாக ஆதிக்க சக்திகளுக்கு கீழ் எடுபிடிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
( நன்றி: இஸ்லாமியச் சிந்தனைகள்)