பேராசிரியர் இலக்குவனார் பற்றிய ஆவணப்படம் “இலக்குவம்” உருவாகிறது.

இலக்கியம் கட்டுரைகள்

பேராசிரியர் சி.இலக்குவனாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஆவணப்படம்இலக்குவம் என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது. இந்தப்படத்தில் பேராசிரியரின்வாழ்க்கை குழந்தைப் பருவம் முதல் இறுதிப் பருவம் வரை தமிழோடு பயணிக்கிறது.பேராசிரியரின் தமிழின உணர்வு, அரசியல் தொடர்பு, படைப்புகள் முதலான குறித்த அனைத்துத் தகவல்களோடு அறிஞர்களின் கரு்த்துரைகளையும் கொண்ட இந்தச் சித்திரத்தை இலக்குவனார் இலக்கிய இணையமும் தமிழ்க்காப்புக் கழகமும் இணைந்து உருவாக்குகின்றன. இந்தப் படத்தை இயக்குநர் இலாரன்சு இயக்குகிறார்.தமிழன்பர்களுக்கும் உணர்வாளர்களுக்கும் இது நல்விருந்தாய் அமையும்.  பேராசிரியரின் பிறந்த நாளான இன்று (17.11.2011) ஆவணப்படப் பணி தொடங்கி உள்ளது. ஆவணப்படத்தில் பேராசிரியர் பற்றி வெளிப்படுத்த வேண்டிய கருத்துகள் இருப்பின்

தமிழ்க் காப்புக் கழகம்,

#281/397, பிரிசிசன் பிளாசா,

அண்ணாசாலை, தேனாம்பேட்டை,

சென்னை-18.

            மின்னஞ்சல்: thamizh.kazhakam@gmail.com

என்னும் தமிழ்க்காப்புக்கழக முகவரிக்குத் தெரிவிக்க வேண்டுகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *