தெருக்களின் பாகுபாடு உருக்குலைக்கும் ஒற்றுமைக் கூடு

ஊரை இணைக்கும் கோடுகளே ஊரைப் பிரிக்கும் கேடுகளானது   வேற்றுமைத் தீயால் வெந்து மடிகின்றோம் வாஞ்சை வாளியால் அன்பு நீரெடுத்து வாரி அணைப்போம் சிரட்டை அளவேனும் சிரத்தை நினைப்போம்   கூட்டமைப்பு என்னும் கூடாரம் அமைத்தோம் ஓட்டுக்காகப் பிளக்கும் வேட்டமைப்புகளை வெளியில் நிறுத்துவோம்   உளத்தூய்மைப் பற்றினால் உருவாகும் ஒற்றுமை கத்தியில் நட்ப்பது போல் பத்திரமாகவும்; கண்ணாடிப் பாத்திரமாகவும் பக்குவமாய்க் கோத்திரப் பெருமையின்றி பழகுவோம்   எதிர்மறை எண்ணங்களின் புதிர்களால் புறம்பேசுவதைப் புறந்தள்ளுவோம்   அண்டைத் தெருவோடு […]

Read More

துளிப்பாக்​கள் (ஹைக்கூ)

சுமந்த போழ்தும் சும்ந்த பின்னும் சுமப்பது – தாயின் தியாகம்   ஊருக்கு விருந்து வைக்கவும் ஊரையே விருந்தாக்கவும்- ஒற்றைத் தீக்குச்சி   மானம் காப்பதும் மானமிழந்தால் கோர்ப்பதும் – ஒன்றே முடிச்சு   மணந்தால் மறப்பதும் மணக்காவிடில் மறக்காததும்- அதே காதல்   உணவின் முடிவு மறுவுலகின் துவக்கம் – அதுவே மரணம்   ஊரை இணைப்பதும் ஊரைப் பிரிப்பதும் – அதே தெருக்கள்   பிறரைக் காப்பதால் தன்னைக் காப்பது – அதே தர்மம் […]

Read More

ஹஜ் – மனித வாழ்க்கையின் சம்பூரணம்

  ஒரு கருப்பைக்கு நன்றி சொல்லச் செல்லும் தொப்பூள் கொடிகளின் பயணமே … ஹஜ் ! கடலைத்தேடி நதிகள் தான் நடந்து போகும் ! ஆனால் … மனிதக் கடலே திரண்டு – புனித மக்காவை துல்ஹஜ் மாதத்தில் காணப் போகிறதே … ! அது தான் ஹஜ் ! மொழிகள் பலவானாலும் முகங்கள் சங்கமிக்கிறதே …! – அந்த முஹப்பத்தான திருநாள் தான் … ஹஜ் பெருநாள் ! அங்கே ஸலாம்கள் ததும்பி வழியும் ! […]

Read More

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது […]

Read More