காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

SP-RAMANATHAPURAM Tr. KALIRAJ MAHESH KUMAR , IPS, Officer : 04567-231380 Cell No : 9442208424 / 9600049649 Email : sp.rmd@yahoo.com DSP-MUDUKULATHUR Tr.N.STEPHEN JESU PATHAM Cell No. 9842631976  04576-222208

Read More

புதியதோர் உலகம் செய்வோம்

தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே? தெருவைத் திருத்தினால் ஊரைத் திருத்தலாம் ஊரைத் திருத்தினால் உலகத்தைத் திருத்தலாம் கலகம் இல்லா உலகம் காண்போம் ஊரை இணைக்கும் கோடுகளே ஊரைப் பிரிக்கும் கேடுகளானது வேற்றுமைத் தீயால் வெந்து மடிகின்றோம் வாஞ்சை வாளியால் அன்பு நீரெடுத்து வாரி அணைப்போம் சிரட்டை அளவேனும் சிரத்தை நினைப்போம் கத்தியில் நட்ப்பது போல் பத்திரமாகவும்; கண்ணாடிப் பாத்திரமாகவும் பக்குவமாய்க் கோத்திரப் பெருமையின்றி பழகுவோம் அண்டைத் தெருவோடு சண்டைப் போட்டே மண்டை ஒடு மலிவானால் […]

Read More

ஏன்?”

கேள்வி அல்ல; வேள்வி   அறிவுச்சுரங்கங்களின் அற்புதத் திறவுகோல்   அறிவியல் குழந்தைகள் அவதரிக்க வைக்கும் உயிரணு   கண்டுபிடிப்புகளின் கண்டுபிடிப்பு   சூத்திரங்களின் சூட்சமம்   ஞானிக்கள் என்னும் தேனீக்கள் சேமித்த மகரந்தப் பொடி   தேடலின் துவக்கம் முடிவேயில்லாத் தேடல்   பிறப்பையும்  இறப்பையும் புரிய வைக்கும் ஞான ஒளி புத்தியைக் கூராக்கும் ஞான உளி   அறியாமை இருள் விலக்கும் பகுத்தறிவுப் பகலவன்   “நான் பிறந்த காரணத்தை நானே அறியு முன்னே […]

Read More

தாலாட்டு

புன்சிரிப்பு பூமகனே கேளடா கண்ணே –உன் பூர்வீகத்தை மறந்திடாது நினைந்துகொள் கண்ணே பாபம்சேரா பாலகனே தெரிந்துகொள் கண்ணே இருந்தநிலை மறப்பதுவே பாபமாம் கண்ணே சிறந்தநாமம் சூட்டியுலகு அழைத்திடும் கண்ணே – அந்த நாமமதில் உறைந்தயொன்று நீயல்ல கண்ணே நாமரூப பேதமில்லா உயர்பொருள் கண்ணே – நீ நாமமதில் அடங்கிடாத மறைபொருள் கண்ணே அனுபவிக்கு யாவையுமே ஆய்ந்துபார் கண்ணே – அதில் ஆன்மீக விளக்கங்கள் கிடைந்திடும் கண்ணே தெளஹீதின் தெளிவில்நீ லயித்திடு கண்ணே – என்றும் லெளஹீக வாழ்விலும்நீ […]

Read More

புகைப்பிடிப்பதால் புத்திக்கூர்மை பாதிக்கும்-ஆய்வில் தகவல்

புகை மனிதனுக்குப் பகை என்பது அனைவருக்கும் தெரியும், புகைப்பிடிப்பதால் புத்திக்கூர்மை பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மன அழுத்தம் அதிகம் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் புகை பிடிப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20000 இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் புகைப்பிடிக்காதவர்களைக் காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின் அறிவாற்றல் குறைவாக இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது. தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவர்களின் அறிவுத்திறன், சராசரி ஆண்களை விட எட்டு புள்ளிகள் வரை குறைவாக இருக்கின்றது. தினமும் அவர்கள் […]

Read More

சென்னை மாற்று திறனாளிகள் ஆணையர் அலுவலம் இடமாற்றம்

சென்னையில் மாற்று திறனாளிகள் ஆணையர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகம் எண்.15/1, மாதிரி பள்ளி சாலை, ஆயிரம்விளக்கு, சென்னை-6 என்ற முகவரியில் செயல்பட்டு வந்தது. கடந்த 10ம் தேதி முதல் மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாக முதல் மாடி, அரசு புற மருத்துவமனை பின்புறம், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே.நகர், சென்னை-78 என்ற முகவரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. […]

Read More

எண்ணத்தில் …….

எண்ணத்தில் தூய்மை வேண்டும் ***** இதழ்களில் வாய்மை வேண்டும் மண்ணைப்போல் பொறுமை காட்டு ***** மனத்தெழு யிச்சை யோட்டு விண்ணைப்போல் உயர்ந்த நோக்கம் ***** வேற்றுமைத் தீயைப் போக்கும் கண்ணுக்கி மைபோல் நட்பு ***** காத்திடும் கூட்ட மைப்பு யாப்பிலக்கணம்: காய்+மா+தேமா (அரையடிக்கு) விளம்+மா+தேமா (அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம் “கவியன்பன்” கலாம் குறிப்பு:இப்பாடல் அண்மையில் (30/09/2011 அன்று) துபையில் நடாத்தப்பட்ட அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதற்பொதுக்குழுக் கூட்டத்தில் எனது (கல்லூரித்) தமிழாசிரியர் […]

Read More

ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கும், பைபாஸ் சர்ஜரிக்கும் என்ன வித்தியாசம்?

ஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம் இல்லையென்றால், உடனே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்தனை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரிந்து மனிதன் இறந்து போக நேரிடும். 1928வது வருடம் வரை இதய அறுவைச் சிகிச்சை என்பது ஒரு முடியாத காரியமாகவே இருந்தது. 1928ம் வருடம் கட்லர் என்ற சர்ஜன் எந்தவிதக் கருவியுமில்லாமல் மார்பின் இடதுபுறத்தைத் திறந்து கைவிரலால் இதயம் துடிக்கும்போதே இதய ஈரிதழ் வால்வு […]

Read More

இஸ்லாமியத் தமிழிலக்கிய 3-ஆம் மாநில மாநாட்டுத் தீர்மானங்கள்

இஸ்லாமியத் தமிழிலக்கிய 3-ஆம் மாநில மாநாடு அக்டோபர் 02, 2011, தென்காசி மாநாட்டுத் தீர்மானங்கள் 1. இறையருளால்… இஸ்லாமிய இலக்கியத் கழகத்தின் சார்பில் வருங்கால இலக்கியப் படைப்பாளர்களை வளர்தெடுக்கும் நோக்கத்தில் செப்டம்பர் 13, அக்டோபர் 1 ஆகிய தினங்களில் குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்ற ‘படைப்பிலக்கியப் பயிலரங்கு’ போல், இனி தொடர்ந்து பல்துறை சார்ந்த பயிலரங்குகள், கருத்தரங்குகள் இலக்கிய நிகழ்வுககள் நடத்தப்படும். 2. இஸ்லாமிய இலக்கியப் படைப்பாளிகள், எழுத்தாளர்களைச் சமுதாயத்தில் அதிகப்படுத்துவதற்கான முயற்சியாக, அவர்கள் தம் படைப்புகள் […]

Read More

முனைப்பூட்டும் மூன்றாம் மாநில மாநாடு

எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் கடந்த செப்டம்பர்30,அக்டோபர்1&2 ஆகிய நாட்களில் குற்றாலம்-தென்காசியில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் 3-ஆம் மாநில மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று நிறைவுற்றது.        கடந்த காலங்களில் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் நடைபெற்ற ஒவ்வொரு மாநாடும் வெவ்வேறு வகையில் எடுத்துக்கொண்ட கருப் பொருளுக்கு ஏற்ப வெற்றிகரமாக நடைபெற்று,வரலாறு படைத்தவைதாம். எனினும் அவற்றிற்கிடையிலான தொடர்பு மணிகளைக் கோக்கும் நூல் போன்றதாகும்.இந்த மாநாட்டின் கருப்பொருள் கடந்த காலப் பணிகளுக்கு அணி சேர்ப்பதாகவும் நிகழ்கால நீரோட்டத்தில் நம் […]

Read More