தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே
ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே?
தெருவைத் திருத்தினால்
ஊரைத் திருத்தலாம்
ஊரைத் திருத்தினால்
உலகத்தைத் திருத்தலாம்
கலகம் இல்லா
உலகம் காண்போம்
ஊரை இணைக்கும் கோடுகளே
ஊரைப் பிரிக்கும் கேடுகளானது
வேற்றுமைத் தீயால்
வெந்து மடிகின்றோம்
வாஞ்சை வாளியால்
அன்பு நீரெடுத்து
வாரி அணைப்போம்
சிரட்டை அளவேனும்
சிரத்தை நினைப்போம்
கத்தியில் நட்ப்பது போல்
பத்திரமாகவும்; கண்ணாடிப்
பாத்திரமாகவும் பக்குவமாய்க்
கோத்திரப் பெருமையின்றி
பழகுவோம்
அண்டைத் தெருவோடு
சண்டைப் போட்டே
மண்டை ஒடு மலிவானால்
ஆதரவுப் பிச்சைக்கு
அதுவே திருவோடு
சமத்துவ மரத்தைச்
சாய்ப்பதற்குச்
சாத்தானின் கைகளில்
சுயநலக் கோடாரி
சந்தித்துச் சொல்வோம்
சகோதரர்களின் வீடேறி
”எல்லா வீதிகளும் ஒன்றே”
இனியொரு விதி செய்வோம் நன்றே
மேற்காணுபவைகள் புதுக்கவிதை வாசகர்கட்காக
கீழ்க்காணுப்வைகள் மரபுப்பாவின் நேசர்கட்காக
புதியதோர் உலகம் செய்வோம் புறப்படு தோழா நீயும் மதியினை அழிக்கத் தூண்டும் மதுவினை ஒழிக்க வேண்டும் சதிகளை உணர வைத்து சாதிகள் ஒழியச் செய்து நதிகளின் இணைப்பில் வெல்வோம் நம்மிடம் பிணைப்பில் செல்வோம் விளம்+மா+தேமா என்னும் வாய்பாட்டில் அறுசீர் விருத்தம்
குறிப்பு: இக்கவிதை 14/10/2011 வெள்ளிக் கிழமை துபை “சங்கமம்” தொலைக்காட்சியில் பதியப்பட்டது. தமிழன் தொலைக்காட்சி மற்றும் லண்டன் தீபம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் திகதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும், துபை “சங்கமம்” தொலைக்காட்சி நிர்வாகம் என்னை சங்கமம் தொலைக்காட்சியின் அபுதபி ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பினை ஒப்படைத்துள்ளார்கள். சங்கமம் தொலைக்காட்சி மூலம் உங்களின் கவிதைகள் சங்கமிக்க என்னை மேற்காணும் மின்னஞ்சல்/ கைப்பேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். —
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்) எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com shaickkalam@yahoo.com kalaamkathir7@gmail.com அலை பேசி: 00971-50-8351499
—
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்) எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com shaickkalam@yahoo.com kalaamkathir7@gmail.com அலை பேசி: 00971-50-8351499
தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே
ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே?
தெருவைத் திருத்தினால்
ஊரைத் திருத்தலாம்
ஊரைத் திருத்தினால்
உலகத்தைத் திருத்தலாம்
கலகம் இல்லா
உலகம் காண்போம்
ஊரை இணைக்கும் கோடுகளே
ஊரைப் பிரிக்கும் கேடுகளானது
வேற்றுமைத் தீயால்
வெந்து மடிகின்றோம்
வாஞ்சை வாளியால்
அன்பு நீரெடுத்து
வாரி அணைப்போம்
சிரட்டை அளவேனும்
சிரத்தை நினைப்போம்
கத்தியில் நட்ப்பது போல்
பத்திரமாகவும்; கண்ணாடிப்
பாத்திரமாகவும் பக்குவமாய்க்
கோத்திரப் பெருமையின்றி
பழகுவோம்
அண்டைத் தெருவோடு
சண்டைப் போட்டே
மண்டை ஒடு மலிவானால்
ஆதரவுப் பிச்சைக்கு
அதுவே திருவோடு
சமத்துவ மரத்தைச்
சாய்ப்பதற்குச்
சாத்தானின் கைகளில்
சுயநலக் கோடாரி
சந்தித்துச் சொல்வோம்
சகோதரர்களின் வீடேறி
”எல்லா வீதிகளும் ஒன்றே”
இனியொரு விதி செய்வோம் நன்றே
மேற்காணுபவைகள் புதுக்கவிதை வாசகர்கட்காக
கீழ்க்காணுப்வைகள் மரபுப்பாவின் நேசர்கட்காக
—