இறையருளும் மனித முயற்சியும்

அதிரை கவியன்பன் கலாம் இலக்கியம் கவிதைகள் (All)
1)
ஆற்றல் மிக்கோ னாற்றற் றானே
ஆற்று நீரும்; அள்ளி நீயும்
போற்றி நன்றாய்ப் பேண்.
 
2)
கட்வுளி னருளினால் கடலிலே உயிரினம்;
படகிலே வலையுடன் பயணமாம் முயற்சியால்
நடக்குமே வணிகமும் நலம்
 
3)
கிணற்றுநீரும் பெருகுவதும் கருணையா ளனருட்டானே
உணர்ந்துநீயும் முயல்கின்றா யுனதுவாளி கயிற்றினாலே
குணங்களிலே விடாமுயற்சி குழைத்து.
 
4)
கதிரவனொளி கட்லுறவினால் கருமேகமாய் உருவாகுதல்
கதியமைத்திடும் பரம்பொருளருள்; கருணையாளனை மறவாமலே
துதித்துதினமும் முயற்சிகளிலேத் தொடர்.
 
5)
தூணின்றி நிற்கின்ற தூக்கிய வானத்தை
வீணின்றி தந்தவனை வீணாக நிந்திக்கும்
வீணர்கள் காண விய்ப்பு.
 
வாய்ப்பாக வாழ்வை வழங்கு மவனைத்தான் 
வாயுடன் நாக்கும் வழங்கு மவனைத்தான்
வாயாலேத் தூற்றும் வியப்பு.
 
இல்லாமை மூலம்நாம்:  இல்லை அவனன்றி
இல்லை அவனென்று எப்படித்தான் சொல்கின்றனர்
வில்லைப்போல் நின்றேன் வியந்து.
 
 
யாப்பிலக்கணம்: 1) நேரொன்றாசிரியத்தளையால் வந்த வெண்டாழிசை
                                2) நிரையொன்றாசிரியத்தளையால் வந்த வெண்டாழிசை
                                3) கலித்தளையாலான வெண்டாழிசை
                                4) வஞ்சித்தளையாலான வெண்டாழிசை
                                5) மூன்று சிந்தியல் வெண்பாக்களில் ஒரே பொருள் குறிக்கும் வெள்ளத்தாழிசை
  
 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

— 

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
 
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
 
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
 
 
அலை பேசி: 00971-50-8351499 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *