துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதைச் சங்கமம்

துபாய் : துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் எனும் கவிதைச் சிறப்பிதழ் ‘ஈரம்’ எனும் தலைப்பில் செம்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட இருக்கிறது. கவிதை ஆர்வலர்கள் ‘ஈரம்’ எனும் தலைப்பில் கவிதையினை superstarzia@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து கவிதைச் சங்கமத்திலும் பங்கேற்கலாம். கவிதைச் சங்கமத்தில் பங்கேற்க இயலாத பிற பகுதிக் கவிஞர்கள் தங்களது கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்பலாம். நிகழ்விடம் மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Read More

ஈரம்

ஈரமுள்ள நிலத்திற்றா னெழுந்துவரும் நல்விதைகள் ஈரமுள்ள மனதிற்றா னெழுதவரும் கவிதைகள் ஈரமுள்ள கர்ப்பத்தி லியங்கிவரும் குழந்தைகள் ஈரமுள்ள வுதடுகளி லெழும்காதற் போதைகள்   ஈரமுள்ள வுறவுகளி லெப்பொழுதும் நன்மைகள் ஈரமுள்ள வுணர்வுகளி லிரக்கத்தின் தன்மைகள் ஈரமுள்ள இதயந்தா னிரத்தத்தி னோட்டமாகும் ஈரமுள்ள ஈகையினா லேழ்மையுமே யோட்டமிடும்    ஈரப்பசையு மில்லையெனி லினியுறவும் தூரமாகும்  ஈரமின்றி வாழ்ந்தாலே யில்லறமும் பாரமாகும்  ஈரச்சு   ருதியினின் னிசைதானி லையுமாச்சு  ஈரக்காற் றில்லையெனி லென்னாகும் நம்மூச்சு  ஈரமென்னு மீரெழுத்தே இக்கவியின் தலைப்பெழுத்து  ஈரமென்னு […]

Read More

“சிறுகதைகளாகும் சமூக நிகழ்வுகள்’

சிவகாசி, ஆக. 31: சமூகத்தின் நிகழ்வுகளே சிறுகதைகளாக உருவாக்கப்படுகின்றன என தஞ்சாவூர் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் இரா. குருநாதன் பேசினார். சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி இளங்கலை தமிழ்த்துறை சார்பில், நவீன தமிழ்ச் சிறுகதைகள் என்ற தலைப்பிலான சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.  நிகழ்ச்சியில், அவர் மேலும் பேசியதாவது:  சமூக நிகழ்வுகளை சற்று ஆழமாக உற்றுநோக்கினால், அனைவரும் அற்புதமான சிறுகதைகளை படைக்கலாம்.  சிறுகதைகள் சமூகத்தின் அனைத்து நிகழ்வுகளையும் களமாகக் கொண்டு படைக்கப்படுகின்றன.  நமது […]

Read More