முதுகுளத்தூர்:””முதுகுளத்தூர் பேரூராட்சியில் வளர்ச்சி பணிகளுக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் பாடுபடுவேன்,” என பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரா கூறினார். முதுகுளத்தூர் பேரூராட்சியில் தேர்தல் உதவி அலுவலர் ராமச்சந்திரனிடம் மனுத்தாக்கல் செய்த இவர் கூறியதாவது: அனைத்து வார்டுகளிலும் பாரபட்சமின்றி அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவேன். அனைத்து தெருக்களிலும் தினமும் காவிரி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யபடும். சுகாதாரத்தை காக்கும் வகையில் அனைத்து தெருக்களிலும் நவீன தொழில்நுட்ப வசதியுடன் குப்பை தொட்டிகள் அமைக்கபடும். அனைத்து தெருக்களிலும் சோடியம் விளக்குகள் அமைக்கபடும். மேலும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த பாடுபடுவேன்.
குறுகிய காலத்தில் முதுகுளத்தூர் பேரூராட்சியை, நகராட்சியாக்க முயற்சி செய்வேன், என்றார்.மனுத்தாக்கலின் போது, அ.தி.மு.க., ஒன்றிய இளைஞரணி செயலாளர் மாடசாமி, ஒன்றிய மாணவரணி செயலாளர் புகழேந்தி, கிராம தலைவர் நாகராஜன், முனியசாமி, ஒன்றிய மீனவரணி செயலாளர் தூரி முருகேசன் உடனிருந்த
னர்.