நிகழ்ச்சியில், அவர் மேலும் பேசியதாவது:
சமூக நிகழ்வுகளை சற்று ஆழமாக உற்றுநோக்கினால், அனைவரும் அற்புதமான சிறுகதைகளை படைக்கலாம்.
சிறுகதைகள் சமூகத்தின் அனைத்து நிகழ்வுகளையும் களமாகக் கொண்டு படைக்கப்படுகின்றன.
நமது அன்றாட வாழ்வில் காணும் நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக சிறுகதைகள் அமைகின்றன.
இன்று பல படைப்பாளிகள் தோன்றி, வாழ்வின் பல கோணங்களையும், சிறுகதைகளில் பதிவு செய்கிறார்கள்.
தொடக்கம், கதைக் கரு, முடிவு என மூன்று பகுதிகள் அடங்கியது சிறுகதையாகும்.
தமிழ்த்துறை மாணவர்கள் அனைவரும் சிறுகதை எழுத முயல வேண்டும்.
அதில் வெற்றி என்பது உடனே வருவதில்லை. எழுத எழுதத்தான் திறன் மேம்படும் என்றார்.
நிகழ்ச்சிக்கு, இளங்கலை தமிழ்த் துறை தலைவர் இரா. இளவரசு தலைமை வகித்தார்.
முதுகலை தமிழ்த் துறைத்தலைவர் க.சிவனேசன் முன்னிலை வகித்தார். உதவிப் பேராசிரியர் த.சந்திரகுமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் வா.வாசுகி,து.வெள்ளைச்சாமி, சு.நயினார், ந.அருள்மொழி, சோ.முத்தமிழ்செல்வன், பா.பொன்னுராஜன், ந.சுலேச்சனா, ச.அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.