கலசம் – இணைய தள தமிழ் வானொலி

கலசம் ஒரு இலவச இணைய தள தமிழ் வானொலி. அரசியல் தவிர தமிழின் அழகை சொல்லக்கூடிய துணுக்குகள் அடங்கிய ஒலிபரப்பு . கடந்த நான்கு ஆண்டுகளாக இடைவிடாது புதிய தகவல்களை வழங்கி வரும் கலசம் , அறிவுசார் அன்பர்களுக்காக விளம்பரங்கள் இல்லாமலேயே தொடரும் சேவை . கலசம் மனித நேயத்தையும் அன்பையும் மன நம்பிக்கையும் மீளப் பெருவதக்கான , நாங்கள் ரசித்தவைகளை நல்ல மனங்களுக்டன் பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சியே !. Here is the opportunity. Selected […]

Read More

திருமண நிதி உதவி பெற 40 நாள்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்: ஆட்சியர்

திருமண நிதி உதவி பெற 40 நாள்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்: ஆட்சியர்   சிவகங்கை, ஆக. 7: மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற 40 நாள்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.இது தொடர்பாக, சிவகங்கை ஆட்சியர் வே.ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி வழங்க 2 திட்டங்கள் உள்ளன. 18 வயது பூர்த்தி அடைந்த, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள் […]

Read More

இசாருதீனின் “மழை நதி கடல்” வெளியீட்டு விழா

ஜுன் 30 ந் தேதி நடந்த சகோதரர் இசாருதீனின் “மழை நதி கடல்” வெளியீட்டு விழாவில்  நான் வாசித்த கவிதை மற்றும் இம்தியாஸ், பக்ருதீன் பேச்சுக்கள் எனது நண்பர் தன் படக்கருவியில் பதிவு செய்து வைத்திருந்தார்.  மற்ற நிகழ்ச்சிகளை பதிவு செய்யவில்லை.  என் என்று ஓசியில் வாங்கு எனக்கு கேட்க துணிச்சல் இல்லை.  அதனால் கிடைத்ததை YOU TUBE-இல் பதிவு செய்கிறேன்.  சாஜஹான் என்னை பற்றிய நீண்ட (புகழுரை) அறிமுகம் கொடுத்தார். அதிலும் ஒரு பகுதியே பதிவு […]

Read More

பிரான்சு கம்பன் கழகம் – பத்தாம் ஆண்டு விழா

அன்புடையீர்! இனிய நல் வாழ்த்துகள். பிரான்சு கம்பன் கழகம் தன் பத்தாம் ஆண்டு விழாவை வரும்  ஐப்பசி   (நவம்பர்) த்  திங்கள் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது. இதன் தொடர்பாகக் 1 கம்பன் விழா மலர் வெளியிடப்படும். அதில் இடம் பெற மரபுக்  கவிதைகள்  வரவேற்கப்படுகின்றன . நிபந்தனைகள் : தலைப்பு : தங்கள் விருப்பம் பொருள் : கம்பன்  (கம்பனின் காவியம், பாத்திரங்கள், கவித்திறம்   …) பேரெல்லை   : நாற்பது வரிகளுக்கு மிகாமல்.(அல்லது  4 விருத்தங்கள் / […]

Read More

புனித ரமலான் வருக! வருகவே!!

அருமறையின் அடிச்சுவட்டில் அகமெங்கும் அர்ப்பணித்து ஆண்டவனின் தாள்பணிந்து அகிலத்தோர் வாழ்தலெனும் பெருமைமிகு நபிகளவர் செப்பிய வழிநடக்கும் முகமதியர் கடைப்பிடிக்கும் முப்பதுநாள் விரதமன்றோ? தருவதிலே உள்ள இன்பம் தரணியெங்கும் தான் பரவ ஈதல்செய்து உவக்கும் இஸ்லாமிய மார்க்கமதில் நோன்பதன் மாண்பதனை முப்பது நாட்கள் கண்டு ஊன் உயிர் யாவையும் ஒன்றெனப் போற்றிடும் ஆன்மீகப் பாதையில் ஆண்டவன் அருள்பெறவே ஓங்கிய வழி நடக்கும் உத்தமர்கள் வாழியவே! புனிதமெனக் கருதப்படும் ரமலானே வருக! வருக!! மனிதரெலாம் இணைந்து வாழ மறையோனின் அருள்பொழிக!! […]

Read More

ரஹ்மானியா எத்தீம்கானா

ஏழை, எளிய மாணவர்கள் படித்து, ஓதி பயன் அடையும் வகையில் முதுகுளத்தூரில் நய்னா முஹம்மது – காதரம்மாள் அறக்கட்டளையின் சார்பில் ரஹ்மானியா எத்தீம்கானா என்ற சிறுவர் பராமரிப்பு இல்லம் சிறப்பாக செயல் ஆற்றிவருகிறது. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், தேசிய விருது வழங்கப்பட்ட நல்லாசிரியமான டாக்டர் ஹாஜி. எஸ். அப்துல் காதர் எம்.ஏ., பி.எட்., டி.லிட் அவர்கள் இதன் நிர்வாகியாகவும், மவ்லவி ஹாஜி எஸ். ஏ. பஷீர் சேட் ஆலிம் ஹஜ்ரத் அவர்கள் இதன் மேற்பார்வையாலராகவும் பொறுப்பேற்று […]

Read More

நட்பு

சேகரப் புதையலே நட்பு              சோதனை விடைகளே நட்பு சாகர விடியலே நட்பு            சாதனைத் தூண்டுதல் நட்பு தாகமேத் தீர்த்திடும் நட்பு          தாயினைப் போலவே நட்பு வேகமாய்ச் செயல்படும் நட்பு        வேரிலே உறுதியாம் நட்பு         யாப்பிலக்கணம்: விளம், விளம்,மா என்னும் வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்   — ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்)   எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com   மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com […]

Read More

துபாயில் திரும‌ண‌ அழைப்பித‌ழ் ம‌ற்றும் வாழ்த்து ம‌ட‌ல்க‌ள் அச்சிட‌ ………

துபாயில் திரும‌ண அழைப்பித‌ழ், வாழ்த்து ம‌ட‌ல்க‌ள் ம‌ற்றும் பிற‌ நிக‌ழ்வுக‌ளின் அழைப்பித‌ழ்க‌ள் உள்ளிட்ட‌வ‌ற்றை சிற‌ந்த‌ முறையிலும், குறைந்த‌ செல‌விலும் அச்சிட‌ தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌ நிறுவ‌ன‌ம் அல் அமான் இண்ட‌ர்னேஷ‌ன‌ல் அஞ்ச‌ல் பெட்டி எண் : 231034 அல் கிஸ‌ஸ் பெங்க‌ளூர் எம்ப‌ய‌ர் ரெஸ்டார‌ண்ட் அருகில் துபாய் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம் தொட‌ர்பு எண் : 04-2390059      தொலை ந‌க‌ல் : 04-2390981 அலைபேசி எண்க‌ள் :      050 6766564 / 056 7255797 மின்ன‌ஞ்ச‌ல் : […]

Read More

நூல் : தஃவாவின் பன்முகங்கள்

நூல் மதிப்புரை நூல்            : தஃவாவின் பன்முகங்கள் நூலாசிரியர்     : ஆடிட்டர் பெரோஸ்கான் பக்கங்கள்       : 228 விலை          : ரூ. 100 வெளியீடு       : மக்கள் சேவைப் பதிப்பகம்                   புதிய எண் 101 தம்பு தெரு                   சென்னை – 600 001                   தொலைபேசி : 044 – 4216 4350 அணிந்துரை நம் இஸ்லாமிய மார்க்கத்தில் அழைப்பு இருவகை உண்டு. ஒன்று நம் […]

Read More

அனீஸ் பெற்றோர் துபாய் வருகை

அனீஸ் ( க/பெ. Er. A. ஜாஹிர் ஹுசைன் ) பெற்றோர் இன்று 02.08.2011 செவ்வாய்க்கிழமை இரவு துபாய் வருகை தர இருக்கின்றனர். சுமார் இரண்டு மாத காலம் துபாயில் இருப்பர். தகவல் உதவி : Er. ஏ. ஜஹாங்கீர்  ( 055 532 91 80 ) பொருளாளர், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் மற்றும் என்.ஜே. சீனி முஹம்மது

Read More