மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி

1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும். ‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் […]

Read More

என் தேசம் = பாரதம்

எந்தேசம் காணுமே இன்று விடுதலைச் சந்தோசக் கொண்டாட்டச் சங்கமம்- இந்நேரம் பாட்டின் தலைப்பிலும் பாரதம் என்பதைப் போட்டேன் பொருத்தமாய்ப் போச்சு (வெண்பா) ******************************​******************************​******** நுனிநாக்கி லாங்கிலம் நுட்பக் கணினி தனியார்வ நோக்கில் தணியாத தாகம் இனியென்ன வேண்டுமிங் கிந்தியர் என்றும் நனிசிறந்தே வாழ்வர் நவில். ******************************​******************************​(வெண்பா) கடின உழைப்பும் கடமை யுணர்வும் படியும் குணமும் பலமான போட்டியுறும் சந்தையில் இன்று சிறப்பான எங்கள் இந்தியர் என்றே இயம்பு. ( வெண்பா) ******************************​******************************​************ காடும் மலையும் கடலுமே தாண்டி […]

Read More

நோன்பு

( கவிக்கோ அப்துல் ரகுமான் ) அருளின் தேவதை ஆண்டுக்கொருமுறை கால வீதியில்காலெடுத்து வைக்கின்றாள் -சாந்தியின் தூதாக ! அவள்தான் ரமழான் ! அவள் புன்னகையில் ஆயிரம்  பூர்ணிமைகள் !கண்களிலே கருணைச் சுடர்கள் ! அவள் நான்கு வேதங்களை ஈன்றளித்தபுனிதத்தாய் ! பாவக் கறைகளை அவள்பரிவோடு துடைக்கின்றாள் ! நரகக் கூண்டுகளில் அடைபட்ட பறவைகளை விடுதலை செய்கின்றாள் ! பிறைச் சுடர் கொண்டு அக அகல்களில் எல்லாம் ஆன்மீக வெளிச்சம் ஏற்றி வைக்கின்றாள் ! பசியென்ற அமுதம் […]

Read More

இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான்

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக! அவன் அருளாளன், அன்புடையோன். அவன் மனித இனத்தை படைப்பினங்களிலேயே மிகச்சிறந்த உன்னத படைப்பாக படைத்ததுடன் அம்மனிதர்களுக்கு அளப்பரிய அருள்வளங்களை அள்ளி வழங்கியிருக்கிறான். அதில் ஒன்று தான் தன் அடியார்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்று அல்லாஹ்வே நம்மிடத்தில் நேரிடையாக பேசுகிறானே அப்பேர்ப்பட்ட அருள்வளங்களும், இறைமன்னிப்பும் நிறைந்த புனித ரமளான் மாதம் தான் இது. இம்மாதத்தில் இறைவனுக்காகவே நோன்பிருந்து அதில் கேட்கப்படும் தன்னுடைய தேவைகளை இறைவனே நேரிடையாக நிறைவேற்றித் தருகிறான். இதில் […]

Read More

ரப்பர் செருப்பு கண்டுபிடிப்பும் ஈமானிய பலவீனமும்!

2011 ஜூன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் பரபரப்பாக பத்திரிக்கைகளில் ஒரு இஸ்லாமிய சிறுவன் சென்னை சிந்தாதரிப்பேட்டைப் பகுதியில் காணாமல் போனது பற்றிய செய்தி வெளியானது. அதாவது தெருவோர சிக்கன் பக்கோடா விற்கும் ஹாரிப் பாஷாவின் பதினோரு வயது மகன், தனது பாட்டியின் பராமரிப்பில் வீட்டிலிருந்தவன், பாட்டி தனது மகன் கடைக்குச் சென்று வந்த ஐந்து நிமிடத்தில் காணாமல் போய் விட்டான். அந்தச் சிறுவனைக் காணாது பெற்றோரும், உற்றாரும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என அறிந்து காவல் […]

Read More

மரணம் ஒரு பயணம்

இரவும் பகலும் மாறும்           இறைவன் வகுத்த நியதி வரவும் செலவும் சேரும்           வணிகக் கணக்கின் நியதி இரவு மட்டு மிருந்தால்          இயங்க மறுக்கு முலகம் வரவு மட்டு மிருந்தால்        வணிக வளர்ச்சி விலகும்     உறவும் பிரிவு மிணைந்து         ஊடலும் காதலும் கலந்து பிறப்பின் முடிவி லுறவைப்          பிரியு முயிரும் பறந்து இறப்பின் மூலம் சென்று         இறையைக் காண; மீண்டும் பிறந்து மறுமை வாழ்வும்        […]

Read More

உதைப் பந்து

எல்லை வரம்பினுள் எல்லாம் படரவே எல்லைப் பிடியி லெதுகைத் தொடரவே எல்லைத் தவறா  இனிமைத் தொடையுடன் சொல்லின் சுவையெனும் சொந்தப் படையுடன் வல்லமைக் காட்டும் வளமிகு மோனையும் மெல்ல நகர்த்திட மெல்லிசைச் சேனையும் வெல்லு மணியாய் விரைவுடன் பந்துப்பா நில்லா  உதையும் நெடுகிலு  மிந்தப்பா வெல்லம் கலந்த வரிசையாம்  சீர்களில் சொல்லைப் பதித்திடச் செய்யுளின்  வேர்களில் வில்லினு ளம்பாய் விரையு மிலக்கு கல்லி லெழுத்தாய்க் கலக்கு     யாப்பிலக்கணம்:”கலிவெண்பா — ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்) […]

Read More

பயணங்கள் இனிமையானவை – வெ. இறையன்பு இ.ஆ.ப.,

நூல் நிறை இலக்குவனார் திருவள்ளுவன் பயணங்கள் இனிமையானவை. பிறரின் பயணக் கட்டுரைகளைப் படிப்பதும் சுவையானது. ஆனால், பயணம் மேற்கொள்ளாமலேயே ஒரு பயண நூலை நமக்கு அளித்துள்ளார் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள். பத்தாயிரம் கல் பயணம் என்னும் பொருண்மையில் (10000 மைல் பயணம்) தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். எனினும் கட்டுரைத் தொகுப்பாக அமையாமல், சிறுகதைகளும் புதினங்களும் காணாமல் போன இக்காலத்தில், நெடும் புதினம் ஒன்றைப் படித்த மன நிறைவை அளிக்கிறது இந்நூல். பயணம் செல்வோம் […]

Read More

ஊடகத்துறை ஒரு புனிதமான பணி

முஸ்லிம் மீடியா போரத்தின் 15ஆவது வருடாந்த மாநாடு கடந்த 26.03.2011, சனிக்கிழமை கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்றது. அதில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க்  ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்களின் உரையின் எழுத்தாக்கத்தை வாசகர்களுக்கு வழங்குகிறரோம். உலக அரங்கிலே பல வேகமான மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்ற ஒரு கால கட்டத்தில் நானும் நீங்களும் இருக்கிறரோம். குறிப்பாக அரபுஇஸ்லாமிய உலகிலே எழுச்சி, புரட்சி, கிளர்ச்சி என்ற பெயர்களில் பாரிய பல மாற்றங்கள் […]

Read More

இலட்சிய வாழ்விற்கு இஸ்லாமிய இலக்கியம்! ஏ.ஸி. அகார் முஹம்மத்

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கடந்த மே மாதம் 20,21,22, ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெற்றது. அதில் விஷேட பேச்சாளராகக் கலந்து கொண்ட இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் ‘இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்’ எனும் கருப்பொருளில் உரை நிகழ்த்தினார். நேரத்தைக் கருத்திற் கொண்டு அங்கு சுருக்கமாக நிகழ்த்தப்பட்ட உரையின் முழு வடிவத்தை sheikhagar.org வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இந்த மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்தி எனது உரையை அமைத்துக் கொள்ள […]

Read More