அல்லாஹ்வின் அடியார்கள் முஃமீன்களே – அவனை
ஐவேளை தொழுவதற்கு வாருங்களே
இல்லாத ஏழைக்கு ஸக்காத்தையே – ஏழைவரியாக
இரண்டரை சதவீதம் வழங்குங்களே
பொல்லாத பாவங்கள் கரைந்தோடவே- இந்தப்
புனிதரமலானில் நோன்பை நோற்பீர்களே
கல்லான உள்ளங்கள் கசிந்திடுமே – அந்தக்
கஃபாவில் ஹஜ்ஜை செய்வீர்களே
சொல்லாலும் செயலாலும் ஒன்றான – நமது
சுந்தரநபி வழியே நன்றானது
வல்லான் வகுத்திட்ட குர்-ஆனிலே – நல்ல
வலிமை ஊட்டும் ஈமானிலே
அறபுத்தமிழ்ச் சொற்கட்கான பதவுரை:
முஃமீன் = நம்பிக்கையாளர்
— ஸக்காத் = 2.5% ஏழைவரியாக தன்னிருப்பிலிருந்து வருடந்தோறும் வழங்க வேண்டிய தர்மம்
கஃபா = முதலோனின் (உலகில் நிறுவப்பட்ட) முதலாலயம்
ஹஜ் = ஆயுளில் ஒரு முறையாவது மக்காச் சென்று நடாத்தப்பட வேண்டிய வழிப்பாட்டிற்கானப் புனிதப் பயணம்
குர்-ஆன் = இறைவனின் இறுதி வேதம்
ஈமான் = நம்பிக்கை
இயற்றியோன்:”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com/
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
shaickkalam@yahoo.com
kalaamkathir7@gmail.com
அலை பேசி: 00971-50-8351499