மாவீரன் திப்பு

இலக்கியம் கட்டுரைகள்

மாவீரன் திப்பு சுல்தானைப் பற்றி அண்ணல் காந்தியடிகள்:

” நல்ல இஸ்லாமியரான திப்பு சுல்தான், மதுவிலும் மங்கையரிலும் மூழ்கிப் போகாத நல்ல மன்னராக வாழ்ந்தார்.
வருவாய் இழப்புகளைப் பற்றி கவலைப்படாது பூரண மதுவிலக்கை அமுலாக்கிய இவர் ஓர் உன்னதமான மன்னன்.”
 
மாவீரன் திப்பு சுல்தான் பற்றி அல்லாமா இக்பால்:

ஏ! காவிரியே! கம்பீரமகாத் தலைநிமிர்ந்து நீ வீரநடைப் போடுகிறாயே!

நீ சுமந்து செல்லும் செய்தி என்னவென்று உனக்கு நினைவுள்ளதா?

நீ எந்த மாவீரனை சுற்றி நாள் தவறாமல் வலம் வந்து கொண்டிருந்தாயோ – அந்த

மாவீரனின் குருதி உனது அலைகளில் கொப்பளிக்கிறதே!

அது தான் அந்த செய்தி!

அன்று, கிழக்கு தூங்கிக் கொண்டிருந்தப் போது,

அவன் மட்டும் விழித்துக் கொண்டிருந்தான்.
மாவீரன் திப்பு சுல்தானைப் பற்றி ஆங்கில கனோனால் மேடோஸ் டைலர்:

“திப்பு சுல்தான் கௌரவமான பெரிய மனிதர். அவரைப் போன்ற உயர்ந்தக் கொள்கையுடைய மனிதரை இந்தியா இனிமேல் எப்போதும் பார்க்காது. வியக்கத்தக்க திறமையும் ஊக்கமும் கொண்டு, மக்களைக் கவர்ந்து எல்லோரிடமும் அன்போடும் கருணையோடும் நடந்துக் கொண்டார். மாசா அல்லாஹ்! திப்பு சுல்தான் கண்ணியம் மிகுந்த தலைவன்!”
 
மாவீரன் திப்பு சுல்தான் பற்றி ஆங்கில ஜெனரல். மேஜர் டிரோம்:

திப்பு சுல்தானின் ஆட்சி தன்னிச்சையானதும், கண்டிப்பனதுமானாலும், குடிமக்களைப் பாதுகாத்து , உதவிகள் செய்து அவர்களின் நன்மையை நோக்கமாகக் கொண்டு நடத்தும் செங்கோலாட்சியே அல்லாமல் துன்புறுத்தும் கொடுங்கோல் ஆட்சியல்ல! திப்பு சுல்தானின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த மக்கள் தாரளமாக பெற்று மன மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ்ந்தார்கள் என கூறியுள்ளார்.
 
தமிழ் கலைக் களஞ்சியத்தில் திப்பு சுல்தான்:

” திப்பு தூயவர். ஒழுக்கம், சமயப் பற்று, அறிவு , அரசியல் திறன் உடையவர். உருது, அரபி, கன்னடம், பாரசீக மொழிகளைப் பேசக்கூடியவர். சிறந்த நிர்வாகி. சிறந்த நூல் நிலையம் வைத்து இருந்தார். புதிய நாணயங்களை வெளியிட்டார். வேளாண்மையைப் பெருக்கினார். மதுவிலக்கை அமல்படுத்தினார். சிருங்கேரி மடத்திற்கு திப்பு எழுதிய கடிதங்கள் அவர் இந்து மதத்தின் இனிய நண்பர் என்பதை விளக்குன்கின்றன”.

மஞ்சை வசந்தன் எழுதிய மாவீரன் திப்பு சுல்தான் வரலாற்று நூல் முழுவதுமாக படிக்க
 
http://content.yudu.com/Library/A1tf5m/TipuSultanHistory/resources/index.htm?referrerUrl=

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *