கருவின் பொறுமை கவிதைக் குழந்தைத்
தருவின் வளர்ச்சித் தளிர்விதை மூலம்
முகிலின் பொறுமை முழங்கும் மழையாய்த்
துகிலின் பிறப்புத் தறியின் பொறுமையாம்
வானிலாத் தோற்றம் வளர்பிறை மாற்றமே
தேனீப் பொறுமையேத் தேனின் சுவையாய்
பொறுத்தா லரிசியும் பொங்கிடும் சோறாய்ப்
பொறுத்தால் கிடைக்கும் புகழ்
யாப்பிலக்கணம்: பஃறொடை வெண்பா
—
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
shaickkalam@yahoo.com
kalaamkathir7@gmail.com
அலை பேசி: 00971-50-8351499