கலங்கரை விளக்கு

அதிரை கவியன்பன் கலாம் இலக்கியம் கவிதைகள் (All)

சேகரப் புதையலே நட்பு
             சோதனை விடைகளே நட்பு
சாகர விடியலே நட்பு
           சாதனைத் தூண்டுதல் நட்பு
தாகமேத் தீர்த்திடும் நட்பு
         தாயினைப் போலவே நட்பு
வேகமாய்ச் செயல்படும் நட்பு
       வேரிலே உறுதியாம் நட்பு
 
 கலங்கிடும் பொழுதினில் எமக்கு
      
          கலங்கரை விளக்கென நட்பு
 
துலங்கிடும் பண்புகள் எமக்கு
       
        துணைதரும் கலங்கரை விளக்கு
 
நலந்தரும் நூலகம் எமக்கு
 
        நாளெலாம் கலங்கரை விளக்கு
 
குலந்தழைக் கவ்ந்திடும் எமது
 
       குழவிகள் கலங்கரை விளக்கு 
— யாப்ப்பிலக்கணம்: விளம், விளம், மா (அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
 
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
 
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
 
 
அலை பேசி: 00971-50-8351499

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *