நலிவுற்ற இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், இஸ் லாமிய தமிழ் இலக்கி யங்களை பாட நூல்களில் விரிவாக இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு இஸ்லா மிய தமிழ் இலக்கிய மாநாடு வேண்டுகோள் விடுத்துள்ளது.
2011 ஜுலை 8, 9, 10 தேதிகளில் காயல்பட்டி னத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் நிறை வேற் றப்பட்ட தீர்மானங்கள்:
1. இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க காயல்பட் டினத்தில் நடத்துவதற்கு வாய்ப்பளித்த தமிழ்நாடு இஸ்லாமிய தமிழ் இலக் கியக்கழக நிர்வாகிகளுக்கு இம்மாநாடு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
2. 2011 ஜூலை 8, 9, 10 மூன்று நாட்கள் இம் மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற அனைத்து வகையான ஒத்துழைப்புக்க ளையும் வழங்கிய காயல் பட்டினத்தின் அனைத்து ஜமாஅத், சங்கங்கள், அரசி யல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவ ருக்கும் இம்மாநாட்டு குழுக்களின் சார்பில் நெஞ் சார்ந்த நன்றியைச் சமர்ப் பிக்கிறோம்
3. மாநாட்டின் பேரா ளர்களாக வெளிநாடுகளி லிருந்து பங்கேற்று உள்ள வர்களைத் தங்க இடமளித் தது. தவியவர்கள், உபச ரித்தவர்கள், தமிழகம் முழு வதுமிருந்தும் வந்துள்ளவர் களுக்குத் தங்க இடமும் உபசரிக்கவும், மாநாட்டுப் பந்தலுக்கும் தங்கியிருக் கும் இடங்களுக்கும் வந்து செல்ல வாகனங்களையும் தந்துதவிய வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி நிர் வாகத்திற்கும், ஆய்வரங்கம் நடத்த இடமளித்துதவிய எல்.கே.மேல்நிலைப்பள்ளி, மகளிர் அரங்கம் நடத்த இடமளித்துதவிய ஜலா லிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் ஆகிய நிர்வாகங்களுக்கும், மூன்றுநாள் பொது நிகழ்ச் சிகளையும் நடத்த இட மளித்துதவிய ஐக்கிய விளையாட்டுச்சங்க நிர்வா கத்திற்கும், இம்மாநாட்டு வெற்றிக்கு உழைத்தஇ ஒத்துழைத்த ஒவ்வொரு வருவருக்கும் ஆயிரமா யிரம் முறை நன்றி சமர்ப் பிக்கின்றோம்.
4. தமிழகத்தின் இஸ் லாமிய நுழைவாயிலாகப் போற்றப்படும் வரலாற்றுப் பெருமையைப் பேணிப் பாதுகாக்க ஆய்வுகளுக் கும் ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதோடு, புதைந்து கிடக்கும் கல்வெட்டுக்;கள், பண்டைய கலை பொக் கிஷங்கள், அரபுத்தமிழ் கிதாபுகள், நூல்கள் அனைத்தையும் மீட்டுப் பாதுகாக்க “”””அருங்காட்சி பாதுகாப்பகம்”” ஒன்றை இந்நகரில் நிறுவுவதென இம்மாநாடு முடிவு செய்வ தோடு, அதற்கு பூரண ஒத்துழைப்பு அளிக்கு மாறு அனைத்து ஜமாஅத் தினரையும், பொதுமக்க ளையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
5. நூற்றுக்கணக் கான தமிழ்ப்புலவர்களை பெற்றுத்தந்த காயல்பட் டினத்தில் அப்புலவர்களின் ஆக்கங்களை நூல்களாக அச்சிட்டு வெளியிடவும், அதிலிருந்து ஆய்வுக் கட் டுரைகளும், ஆய்வு சொற் பொழிவுகளும் நடத்தப் படவும் பரிசளிக்கவும் அறக்கட்டளை நிறுவவும் இம்மாநாடு முடிவு செய் கிறது.
6. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைத் தமிழ்ப் பாட நூல்களில் விரிவாக இடம் பெறச் செய்ய தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
7. சென்னை, நெல்லை மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக் கழகங்களில் இஸ்லாமிய ஆய்வு இருக்கைகள் அமைக்க இம்மாநாடு வலியுறுத்துகிறது.
8. நலிவுற்ற இஸ் லாமிய தமிழ் எழுத்தாளர் களுக்கு அரசின் சார்பில் உதவி தொகை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட் டுக் கொள்கிறது.
9. தமிழ்நாட்டில் பதிப்பிக்கப்படும் நூல்கள் வெளிநாடுகளில் வெளியி டப்படுவதுபோல், இலங்கை, மலேசியா உள் ளிட்ட வெளிநாடுகளில் வெளியிடப்படும் இஸ்லா மிய தமிழ் நூல்களைத் தமிழ்நாட்டிலும் வெளி யிட பதிப்பாளர்களை இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.
10. நாட்டில் சமூக நல்லிணக்கத்தை வளர்க் கும் வகையில் இலக்கிய நிகழ்ச்சிகளையும், ஈகைத் திருநாள் சகோதரத்துவ சந்திப்புக்களையும் நடத்த அனைவரையும் இம் மாநாடு வேண்டிக் கொள் கிறது.
சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் தனி நபர் தகராறுகளுக்கு சமு தாய, மதசாயம் பூச முற் பட்டால் அதற்கு யாரும் இடமளிக்காமல் அமைதியை நிலைநாட்ட துணை நிற்க அனைவ ரையும் இம்மாநாடு வேண் டிக் கொள்கிறது. அதே சமயம் பிரச்சினைகளுக்கு காரணமானவர்கள் யார் என கண்டறிந்து அப்படிப் பட்டவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கும் படியும், ஒரு போதும் நிர பராதிகளை துன்புறுத்தக் கூடாது என காவல் துறையையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
11. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக் குடி, கோவில்பட்டிக்கு அடுத்த ஒரே நகராட்சியான காயல்பட்டினத்தில் 45000 மக்கள் வாழ்கின்றனர். காயல்பட்டினம் கூட்டு குடிநீர் திட்டமும் குடிநீர் அபிவிருத்தி திட்டமும் இந்நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வில்லை என்பதால் இந்நக ருக்காக தனியாக குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட் டது.
பொன்னன்குறிச்சியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தனிகுழாய் மூலம் காயல்பட்டினத் திற்கு குடிநீர் வினியோகிக் கும் குடிநீர் திட்டத்திற்கு ரூ. 33 கோடியில் திட்டமி டப்பட்டு கடந்த ஆட்சி யில் ஒப்புதல் பெறப்பட்டு சட்டப்பேரவையிலும் அறிவிக்கப்பட்டது. அந்த குடிநீர் திட்டத்திற்கு இந்ந நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி நடப்பு ஆண்டில் இதனை நிறைவேற்றித்தர தமிழ்நாடு அரசை இம் மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
12. கல்வி வேலை வாய்ப்பில் மிகவும் பின் தங்கியுள்ள முஸ்லிம்க ளுக்கு 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது. இதனை 5 சதவீதமாக உயர்த்தி தர வேண்டுமென தமிழ்நாடு அரசை இம் மாநாடு வலியுறுத்தி கேட் டுக் கொள்கிறது.
13. தூத்துக்குடி-கொழும்பு இடையே கப்பல் சேவை தொடங் கப்பட வேண்டுமென்பது நீண்ட கால கோரிக்கை யாகும். அச்சேவை அண் மையில் துவக்கப்பட்டதும் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த கப்பல் சேவையை நிறுத்த வேண்டுமென தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட் டது மிகப்பெரும் அதிர்ச் சியை தருகிறது. மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு இடை யூறு இல்லாத வகையில் தொடர்ந்து இந்த கப்பல் சேவையை தொடர வேண்டுமென மத்திய மாநில அரசுகளை இம் மாநாடு கேட்டுக் கொள் கிறது.
14. இலங்கை வானொலியின் தமிழ் சேவை தமிழக மக்களை பெருமளவில் மகிழ்வித்து வந்தது. இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் தடைபட்ட அச்சேவை தற்போது துளிர்விட்டுள்ளது. அது 100 விழுக்காடு பூரணத் துவம் பெற்று மிளர வேண் டும். ரமலான் நோன்பு சஹர்நேர ஒலிபரப்பு உள்ளிட்ட இஸ்லாமிய சேவையும் விரைவில் தொடங்கப்பட வேண்டு மென இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தை இம் மாநாடு கேட்டுக் கொள் கிறது.
15. இலக்கியப் பேரறி ஞர் தாவூத்ஷா, தமிழக அரசின் சிறந்த கவிஞருக் கான விருதை இருமுறை பெற்ற தனித் தமிழ்த் தென்றல் காரை இறையடி யான், இறைய ருட் கவி மணி பேராசிரியர் கா.அப்துல் கபூர், வர லாற்றுப் புதின ஆசிரியர் செய்யது முஹம்மது ஹஸன் ஆகியோரின் நூல் களை நாட்டுடைமை யாக்கி, அவர்களது குடும் பங்களுக்கு போதிய ஈவுத் தொகை வழங்க வேண்டு மென வேண்டுகிறோம்.
16. தமிழகத்தில் இனி அமைய இருக்கும் பல் கலைக்கழகங்கள் இரண் டினுக்குத் தேசியத் தலை வர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பெயரை யும், இஸ்லாமியப் பெரும் புலவர் உமறுப்புலவர் பெய ரையும் சூட்ட வேண்டும் என்று இம்மாநாடு அர சைக் கேட்டுக் கொள்கிறது.
17. முஸ்லிம் சமுதாயத் தில் ஐஹளு, ஐஞளு, ஐகுளு படிக்க இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கவும் அவர்கள் பயிற்சி பெறுவதற்கு நிதி உதவி அளிக்கவும் சமுதாய புரவலர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
18. அரபுச் சொல் உச்சரிப்புக்களுக்கு சரி யான தமிழ் மொழி பெயர்ப்புடன் கூடிய கலைச் சொல் அகராதி வெளியிட வேண்டுமென அறிஞர் களை இம்மாநாடு கேட்டுக் கொள் கிறது.
19. தமிழ்நாடு அரசு பாடநூலிலிருந்து உலகம் போற்றும் தமிழ் அறிஞர் கவிக்கோ அப்துல் ரஹ் மான் கவிதை நீக்கப்பட் டதை அறிந்து இம்மாநாடு வேதனை அடைகிறது. மீண்டும் அக்கவிதையை இடம் பெறச் செய்யுமாறு தமிழ்நாடு அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது.
20. பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், முஅத்தின்களுக்கு இன் றைய கால சூழ்நிலைக் கேற்ப ஊதியம் வழங்கு மாறும், புனித ரமலான் மாதத்தில் அவர்களுக்கான ஊக்கத் தொகையை உயர்த்திக் கொடுக்கு மாறும் சமுதாயத்தை இம் மாநாடு மிகுந்த பணிவன்போடு கேட்டுக் கொள்கிறது.