முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு

மதுரை : முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மதுரையில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வு முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எம். சீனி முஹம்மது, சென்னை கிளை ஜமாஅத் தலைவர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை கிளை ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள் விபரம் வருமாறு : தலைவர்             : எம். கே. […]

Read More

கலங்கரை விளக்கம்

வின் விமானாங்களுக்கும்,            வழி தடங்களுண்டு!                  தரை செல் ஊர்திகளுக்கும்,            தகவல் பலகையுண்டு!                  தண்ணீர் செல்மிதவைகளுக்கும்,       களங்கரை விளக்கமுண்டு!            தேன் தேடும் வண்டினமும்,            தான்.. தூரம் சென்று,                 தேன் மதுவையுண்டு,                 தனதிலக்கம் அடைய,                களங்கரை விளக்கம்    அமைத்தறிவதுண்டு! காதலுக்கு.. சொல் மொழி தெவையா? மெளன மொழி போதுமே? காதலர்கோ.. கண்ணசைவே.. கலங்கரை விளக்கம்! கன்னியாகுமரிக்கு, திருவள்ளுவரே.., கலங்கரை விளக்கம்!    தமிழுக்கு, திருக்குறளே.. கலங்கரை விளக்கம் அரபுலக கவிஞர்க்கெல்லாம் அமீரக தமிழ்த்தேரே.. கலங்கரை விளக்கம்!  மானிடர்கெல்லாம் […]

Read More

பாதைகளும் பயணங்களும்

அன்னையின் கருவறையில் ஜனித்து,  அவனிக்கு வருகின்ற பயணம்! தாயின் அன்பான அரவனைப்பில், மழழை துள்ளலாய் பயணம்! பெற்றோர் காட்டும் பாதையில், பேணி செல்லுகின்ற பயணம்! ஆசானின் அறிவு பாதையில், கல்வி தேடி பயணம்! ஆன்மீக பேரருள் பாதையில், இறையருள் நாடி பயணம்! இளமை எழுச்சி பாதையில், தடுமற்றமில்லா பயணம்! வாழ்வாதார பாதையில், பணி தேடி பயணம்! இல்லற இணைப்பு பாதையில், நல்லற மண வாழ்வு பயணம்! நன்னெறி உறவு பாதையில், நல் சந்ததி நாடி பயணம்! பாச […]

Read More

அமலால் நிறையும் ரமலான்

காய், காய், காய், மா (அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும்   எண்சீர்  கழிநெடிலடி விருத்தம்       பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்          படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம் கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்           கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம் பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவ்ரும் மாதம்           பயபக்தி யாதென்றுச் சோதிக்கும் மாதம் வசிக்கின்ற ஷைத்தானை  விலங்கிலிடும் மாதம்           வறியவர்க்கு ஈந்திடவே “ஃபித்ராவின்” மாதம்     குடலுக்கு மோய்வாக்கி […]

Read More

இயல்பான பிரசவங்கள் குறைந்தது ஏன்? 100க்கு 50 குழந்தைகள் “சிசேரியன்’ மூலம் பிறக்கின்றன

ஒரு நாட்டில் 15 சதவீதத்துக்கு மேல் சிசேரியன் பிரசவங்கள் இருந்தால், அந்த நாட்டில் பெண்கள் ஆரோக்கியமாக இல்லை என அர்த்தம்’ என, உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. சென்னையில், சிசேரியன் சதவீதம் 50க்கும் மேல் உள்ளது.சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது உண்மைதான் என, டாக்டர்களே ஒப்புக் கொள்கின்றனர்.  வாழ்க்கை முறை மாற்றம், அதிக எடை, குறைந்த உடல் உழைப்பு போன்றவை சிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்கக் காரணங்கள் என்றாலும், சிசேரியன் பிரசவங்களை தனியார் மருத்துவமனைகள் ஊக்குவிக்க, பணமும் […]

Read More

சட்டமல்ல, கண்துடைப்பு!

கடந்த 44 ஆண்டுகளாகக் காலதாமதம் செய்யப்பட்ட லோக்பால் மசோதா இப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கப்பட்டு, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் முதல் இரு நாள்களுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒரு வகையில் இது மனநிறைவு தந்தாலும், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்த பல கருத்துகள் ஏற்கப்படவில்லை என்பது நெருடலாகவே இருக்கிறது. சமூக ஆர்வலர்கள் குழு தெரிவித்த கருத்துகள் ஏற்கப்படப்போவதில்லை என்றால் எதற்காக அவர்களை வரைவு மசோதா குழுவில் சேர்த்துக்கொண்டு பலமுறை பேச்சு […]

Read More

ரயில் பயணங்களில்

அசைந்து நகரும் ரயில்பெட்டிகளுக்கு அசையும் எல்லாக் கைகளிலும் அப்பிக்கொள்கிறது பிரிவு. பதிந்து வைத்த இருக்கையெனினும் பரபரப்பாய்த் தேடியலைந்து கண்டடையும்போது பரவும் நிம்மதி. நடன லயத்தில் நகரும் பெட்டியில் இடறி நடப்பவர்கள் இடைவிடாது விதைக்கிறார்கள் மன்னிப்பை. காலை ரயிலில் சாப்பிடுபவர்கள் அருகில் இருப்பவர்களுக்கு ஊட்டுகிறார்கள் பசியை எல்லாப் பயணங்களோடும் ஓடும் ரயில் பெட்டிகளுக்கு உள்ளேயே குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் ஏதாவதொரு குழந்தை மறக்கவைக்கிறது வயதை. – ஈரோடு கதிர்

Read More

நேசம்

வெளிநாட்டில் வசிக்கும் முறைப்பையன் வாங்கியனுப்பிய பரிசை நெஞ்சோடு பத்திரப்படுத்தும் பேத்தியை பாசம்பொங்க முத்தமிடுகிறாள் பாட்டி அவளுக்கு இவள் பெயர் அவனுக்கும் அவர் பெயர். H.FAKHRUDEEN பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்) +966 050 7891953 / 050 1207670 www.ezuthovian.blogspot.com www.mypno.com

Read More

நினைவுகள்

விவாகரத்து செய்தபின்னர் எதிர்பாராமல் ஒருநாள் வீதியில் எதிர்பட்ட முன்னாள் கணவனை விட்டும் வேகமாகப்பார்வையைத் திருப்புகிறாள் மனைவி. பார்க்கிறாளா வெனபாராமல் பார்த்துக்கொண்டேயிருக்கிறான் அவன் இருவரின் உலகத்திலும் இப்போதைக்கு யாரும் இல்லை. H.FAKHRUDEEN பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்) +966 050 7891953 / 050 1207670 www.ezuthovian.blogspot.com www.mypno.com

Read More