(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
‘முக்காடு போட்டிடு முஸ்லிம் பெண்ணே தூய முகத்திற்கு எழில் தரும் முஸ்லிம் பெண்ணே’ என்று இசை முரசு நாகூர் ஹனிபா பாடிய பாடல் இஸ்லாமிய பட்டி தொட்டிகளில்லாம் இன்னும் இனிமையாக ஒளித்துக் கொண்டுள்ளது என்று மகிழ்ந்து இருக்கும் நாம,; அந்தப் பாடல் நவ நாகரீக அமெரிக்காவிலும் புரட்சி செய்கிறது என்றால் சற்று ஆச்சரியமாகத் தானே இருக்குமல்லவா அனைத்து ஈமான்தார்களுக்கும்?
அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தினினைச் சார்ந்த 35 வயதான குல்சூன் அப்துல்லாஹ் பொறியியல் துறையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். அவர் பழு தூக்கும் போட்டி நேராக தூக்கும்(டெட்லிப்ட்) 111 கிலோ பிரிவிலும், மற்றும் தாங்கிப் பிடித்து தூக்கும்(ஸ்நேச்) 47.5 கிலோ பிரிவிலும் சாதனை செய்துள்ளார். ஆனால் அந்த சாதனையாளருக்கு வந்ததே சோதனை! அது என்ன என்று கேட்கிறீர்களா?
குமாரி குல்சூன் அப்துல்லாஹ் மற்ற பழுதூக்கும் பெண்மணிகள் போன்று அரைக்கால் கால் கட்டை, மேல் ஆடை அணிந்து வராது முக்காட