வெற்றியின் இரகசியம்
ஆயிரம் அடிகள் தோண்டிய போதும்
அனுலும் வெப்பமும் பாலையில் பொங்கும் !
தூயவர் இஸ்மாயீல் ( அலை ) பிஞ்சுப் பாதம்
தோண்டிய ‘ஜம்ஜம்’ அதிசயம் அன்றோ ?
கானல் நீரைக் கண்டதும் ஹாஜரா ( அலை )
கலங்கி ஓடிய சோதனைக் காண்டம்
வீணாய் இல்லை ! விளைந்தது சரித்திரம் !
வேதனை, சோதனை வெற்றியின் (இ)ரகசிய்ம் !
பஞ்சை மிஞ்சும் பிஞ்சுப் பாதம்
பறித்தது ஒரு சாண் ஆழமும் இல்லை !
பஞ்சம் நீங்கிடப் பொங்கிய தண்ணீர்
படைத்தவன் அல்லாஹ் அருளின் எல்லை !
பாலையில் பொங்கிய நீரும் அதிசயம் !
பொங்கிய நீரோ நின்றதும் அதிசயம் !
பாலையைப் பெருக்கிப் பாரினில் புகுந்தால் ….
பூமியின் உலகே அழிந்திடும் அவசியம் ?
ஆயிரம் (இ)லட்சம் அருவிகள் இருந்தும்
அகிலம் முழுவதும் அந்நீர் இல்லை !
சேயும் தாயும் தோண்டிய ( ? ) தண்ணீர்
சேரா நாடுகள் உலகில் இல்லை
இத்தனை ஆண்டுகள் கடந்தன பாரீர் !
இதுவரை கலங்கல் கிருமிகள் இல்லை !
சொத்தென நினைத்து வைத்தவர் எல்லாம்
சுகந்தரும் மருந்தாய் அம்ருந்துதல் உண்மை !
முதுவைக் கவிஞர் அல்ஹாஜ் ஏ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ
நன்றி :
குர்ஆனின் குரல்
டிசம்பர் 2010