அழுது புலம்பும்
பிரசவத்தில்;
அரை மயக்கத்திலும் உன்
அழும் குரலுக்கு
ஆனந்தமாய் நான் அன்று!
பாலுக்கு ஏங்கி
உன் சிவந்த
இதழ்கள் இரண்டும்
பிதிங்கியதைக் கண்டு;
மனம் பதுங்கியக்
காலம் அன்று!
பள்ளிக்கு
முரண்டுப் பிடிக்கும்
உன் பாதம்
இரண்டையும் பக்குவமாய்
திருப்பியக் காலம் அன்று!
நீ மெத்தப் படிக்க
ஒத்த வீட்டையும்
விற்றுத் தீர்த்து;
உன் படிப்பிற்குத்
தீணியானது அன்று!
தனியாய் நடைப்போடும்
உனக்குத் துணைத்தேடி;
விழி சிலிர்க்கும்
இணையை உன்
கரம் சேர்த்தேன் அன்று!
இன்று
துவண்டுப்போன இளமையால்;
முட்டி நிற்கும் என் முதுமை
உனக்கு பாரினில்
பாரமென்று ஆனதா;
முதியோர் இல்லம் வந்து
சேர்ந்ததா?
—யாசர் அரஃபாத்