E-கலப்பை 3.0 – புதிய வெர்ஷன் அறிமுகம்

தமிழா’ நிறுவனம் தமது புதிய தயாரிப்பான எ-கலப்பை 3.0 ‘தமிழ் எழுதி’ செயலியின் இறுதிப்பதிப்பை இன்று வெளியிட்டிருக்கின்றது. இதனைக்கணினியில் ஏற்றுவதும் அதனைப்பயன்படுத்துவதும் மிகவும் சுலபமானது. இதுவரை கணினியில் ‘யுனிகோட்’ தமிழை உள்ளீடு செய்ய வேறு செயலிகளை பயன்படுத்திவந்தவர்கள் இதனைப்பயன்படுத்திப்பார்க்கலாம். இந்த செயலி பழைய ‘எ-கலைப்பை 1.0′ போன்று மூன்றாம் தரப்பு செயலியான ‘கீமேனை’ப்பயன்படுத்தவில்லை. இது முற்றிலும் ஒரு ‘திறந்தமூலநிரலி’ யின் துணையுடன் உருவாக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பான அம்சம். Download: http://thamizha.com/project/ekalappai

Read More

காலை உணவை தவிர்க்காதீ​ர்கள்

பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? காலை காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம். சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் […]

Read More

நான் மட்டும் தனியாக..

பட்டம் வாங்கியதும்சுற்றித் திறிந்தேன் இறக்கைக்கட்டி! அடங்காப் பிள்ளையாகஇருந்தாலும் அம்மாவுக்குசெல்லமாக! கடவுச் சீட்டு கையில் வந்ததுகனவுகள் கலைந்ததுகடமைகள் பெருத்தது! திட்டித் தீர்க்கும் தந்தையோ தட்டிக்கொடுத்தார்! கொஞ்சும் அம்மாவோ குழந்தையானாள்அழுவதில் மட்டும்! வம்புச் செய்யும்தம்பியோ தேம்பி அழுதான்! அடிக்கடி அடிக்கும்அக்காவோ முத்தமிட்டால்;நெஞ்சத்தை தொட்டுவிட்டாள்! என்றுமே அழுததில்லை அன்று நான் கண்டதுபாசம் எனை வென்றது; தடுக்க முடியாமல்தாரைத் தாரையாககண்ணீர் என்னைக் கடந்தது! ஒட்டி உறவாடிய நண்பர்களோ கட்டித்தழுவி சென்றார்கள்! இப்போதுநான் மட்டும் தனியாகஎன்னைப் போல் இருப்பவர்கள்இங்கே துணையாக! வருமானத்திற்காகவளைகுடாவில் செரிமாணமாகாத நினைவுகளுடன்; […]

Read More

உனக்கென்ன மனக் கவலை?

”முதுவைக் கவிஞர்” அல்ஹாஜ் உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ முற்காலம் தற்காலம் பிற்காலம் என்கின்ற முக்கால வாழ்வுநிலை வரலாறு கூறுகிற அற்புதமாம் குர் ஆனே  உன்கையில் இருக்கையிலே அகிலத்தின் வாழ்வினிலே உனக்கென்ன மனக்கவலை?   கால்பதிக்கும் எத்துறையும் கலங்காமல் நீதியுடன் கண்ணியமாய் வழிநடந்து புண்ணியமாய் ஆவதற்கு சால்மிகுந்த சங்கைநபி  வாழ்வுமுறை உனக்கிருக்க சாதனைகள் படைப்பதற்கு உனக்கென்ன மனக்கவலை?   பொற்காலம் படைக்கின்ற வாழ்வுகளும் வழிமுறையும் புகழ்மிக்க அறிவுகளும் ஆன்மீக நெறிமுறையும் கற்கண்டுச் சுவைபோன்ற பாடங்களும் படிப்பினையும் கருணை […]

Read More

தலைகீழ் மாற்றங்கள்

தலைகீழ் மாற்றங்கள் இப்போதெல்லாம்…. இரவுகளைவிட பகலில்தான் பயமாயிருக்கின்றது! எதிரிகளை விட நண்பர்கள்தான் நம்மை அழவைக்கிறார்கள் கடலைவிட குளங்களே ஆழமாக உள்ளது கோவிலை விட உண்டியலுக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது ஒரிஜினலை விட ஒப்பனைகளே மேடையேற்றப்படுகின்றன விரல்களை விட்டுவிட்டு நகங்களுக்கே வர்ணம் பூசுகிறோம். வெற்றியை கொடுத்தவனைவிட பெற்றவனே போற்றப்படுகிறான் ஜனநாயகத்தில்…… A.R. Mohamed Sadiq VawaladiMob: 050-1570067 ( U.A.E ) E-mail : armohamedsadiq@gmail.com

Read More

பசுமை

இராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தில் 17411 அன்று ‘பசுமை’ என்ற தலைப்பில் வாசித்த கவிதை (பச்சை சட்டை போட்டவனாய், பச்சை பேனா வைத்துக் கொண்டு, பச்சை நிறப் பாட்டிலில் தண்ணீரோடு மேடை ஏறுகிறேன்) பசுமை சூரியத் தேரின் ஏழ் நிறக் குதிரைகளில் பச்சைக் குதிரை நான். ஈர நிலத்தில் ஊன்றும் விதைகள் முளைக்கும் போதே பிறக்கும் நிறம் நான் புதிதாய்ப் பிறக்கும் ஒவ்வொரு பச்சைக் குழந்தையும் நான் மேகப் பஞ்சிலிருந்து மழை நூல் இறங்க ஏர்த் தறி கொண்டு உழவன் […]

Read More