எல்லோரையும் ஈர்த்திட; வல்லமை வார்த்திட வழிகளைக் கோர்த்திட்டேன் இப்பாடலில்….
உடையிலே நேர்த்தியைக் கடைபிடி; எவருமே
உதவியைக் கேட்டால் “ஆமாம்”
தடையிலா மறுமொழிக் கூறிடு; உன்னிடம்
தகுதிகள் நிரம்ப உண்டு
விடைதரும் பாங்கிலே உன்னிடம் எவருமே
விரைவிலே நட்பு கொள்வர்
நடைபெறும் நிகழ்வினை மறைத்திடா உறுதியில்
நம்பிடும் பண்பு வேண்டும்
உன்னிடம் நல்லவை வந்திடும் பொழுதினில்
உளமுடன் பிறர்க்கு நாடு
தன்னிடம் வென்றிடும் திறன்களு முண்டெனத்
தகுதியை நம்பி ஓடு
பின்னிட வைத்திடும் சறுக்கலின் காரணம்
பின்னரே விளங்கும்; யோசி
உன்னிட முள்ளவர் சோர்ந்திடா வண்ணமே
உளமகிழ் உண்மை பேசு
யாப்பிலக்கணம்:
விளம், விளம், விளம், விளம், விளம், மா, தேமா வாய்பாட்டில் அமையும் எழுசீர் விருத்தம்:
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் : http://kalaamkathir.blogspot.com
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
shaickkalam@yahoo.com
அலை பேசி: 00971-50-8351499