ஜப்பானில் சுனாமி

இலக்கியம் கவிதைகள் (All)

மார்ச் 11 2011– ஜப்பானில் சுனாமி

April 11, 2011

நிப்பான் (ஜப்பான்) என்றால் சூரியன் உதிக்கும் நாடு என்று பொருள் அன்று மட்டும் ஏனோ அஸ்தமனம் நிகழ்ந்தது
 
சூரியன் உதிக்கும் நாட்டில் அன்று சுனாமி உதித்தது தேசத்தை சகட்டுமேனிக்கு மிதித்தது. 
மார்ச் 11 2011 – ஒரு தேசம் சேதம் ஆனது கண்ணீர் மட்டுமே மீதமானது
 
கடலில் உப்பு அதிகம் என்பதற்காக இப்படியா உணர்ச்சிவசப்படுவது 
எங்கள் தேசத்து ஒரு சில அரசியல்வாதிகள் போல் மொத்தத்தையும் அல்லவா சுருட்டிக் கொண்டு சென்றது
சனங்கள் கண நேரத்தில் பிணங்களாய் 
 
அணு உலைகள் எல்லாம் அனல் உலைகளாய் மாறி கனலைக் கக்க இயற்கைக்கு  சவால் விட்ட விஞ்ஞானிகளும் மனித இனமும் திகைத்து நிற்க……
 
இறைவனை மறந்து இயற்கையோடு சமர் செய்யும் மனிதக் கூட்டம்மதங்களின் போர்வையில் மனிதனை மனிதன் கொன்று குவித்து எங்கும் இரத்த ஓட்டம் பசி பட்டினி அராஜக ஆட்சியாளர்கள் பம்மாத்து கூடாஒழுக்கம் வலிமையற்ற ஏழைநாடுகள் மீது சகட்டு மேனிக்கு குண்டுமழை பொழிந்து அப்பாவிகள் அழிந்து சனநாயகம் சமைப்பதாய் வாய்ச்சவடால் பேசும்வல்லூறுகளாய் வல்லரசுகள் இல்லை கொல்லரசுகள்………என அனாச்சாரங்களின் உச்சகட்ட ஆட்டம்
பூமிக்கு அடிக்கும் சாவுமணி தானா பூகம்பம்?புரிந்து கொண்டு இறைவன்பால் இயற்கையின் பால் திரும்பினால் மனித இனத்திற்கு இவ்வுலகு பூ-கம்பம்இல்லையேல் இது தான் அழிவின் ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *