அப்படி,
இப்படி;
அந்தப்படி,
இந்தப்படி;
என்றபடிசுற்றியுன்னை
வளைத்தப்படி
புதியதாய் ஆதாரம்
முளைத்தப்படி
மறை கற்று
தெளிந்தபடி
உன் மூளை
மழுங்கும்படி
அத படி – இத படிஎன்றோதும்வழி கேடர்கள்வாதப்படிநம்பி
தம்பி! நீ ஏறிடாதேபாவ படி!
குறை மதியோர்“உணர்வு”களுக்குஇடந்தராதபடிசகாபாக்கள், இமாம்கள், வலிமார்கள்வரலாறு படி!
“மத்ஹபின்” அவசியம்படி!
தம்பி! நீஅவசியம் படி!
ஈருலக வாழ்வுசிறக்கஅவசியமதைபற்றி பிடி!
அந்த
வெற்றி படி உனை
கரைசேர்க்கும்ஞான படி! –
சொர்க்கத்தின்ஏணி படி!
மெய் நிலைகண்ட ஞானியும்பின்பற்றிஏற்றம் கண்ட படி!
கண்டபடி,
தன்
இஷ்டப்படிகுரான் – ஹதீஸைபொருள் கொண்டால்விழுந்திடும்சவுக்கடி!
இறுதிவரை
நபிகளின்
புகழ்பாடி
நீ
வாழ்ந்து
மடி!
மண்ணறையில்
உனக்கில்லை
கெடுபிடி!
மறுமையில்
நிழல் தரும்
“லிவாவுல் ஹம்த்”
கொடி!
—
அன்புடன்
M. முஹம்மது ஜாபர் சாதிக் (மாமா)
வழுத்தூர்.