தளிர்க்கும் தளிரை…

இலக்கியம் கவிஞர் மலிக்கா கவிதைகள் (All)

தளிர்க்கும் தளிரை
தழைக்கவேண்டிய உயிரை
தாய்மையின் தரமறியா
தான்தோன்றித் தனத்தால்

உள்ளங்கள் சந்தித்து
உடல்கள் சங்கமித்து
உலகிற்கு ஓர் உன்னத உயிர்
உலாவரத் துடிக்க

உடலுக்குள் இருக்கும்
உறுப்பென்னும் கருப்பையில்
உலவிடும் ஊதாப்பூவை
உருத்தெரியாமல் அழிக்க

கருப்பையைக் கதறக் கதற
கருவறுக்கும் கூட்டமே
காதில் கேட்குதா
கர்பப்பையின் கதறல்

உயிர்வதைச் சட்டம்-உலவும்
உயிர்களுக்கு மட்டும்தானா!
உடல் உறுப்புக்குள்
ஊசலாடும் உயிர்களுக்கில்லையா!

சங்கமிக்கும் முன் சற்றே
சிந்தித்து உடல்கள் சந்தித்தால்
சங்கமம்
சரித்திரம் படைக்கவில்லையென்றாலும்
சாந்தியடையுமே சதையென்னும் உயிர்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *