ஜமாஅத் அமைப்புகளின் எதிர்காலம்..?

                                             திருவிடைச்சேரி பயங்கரம்                                 ஜமாஅத் அமைப்புகளின் எதிர்காலம்..?   புனித ரமலானின் இயல்பான ஒரு புனிதப்பயணத்தின் இறுதிக் கட்டத்தில் ஒரு முஸ்லிம் ஜமாத் பெரும் பூகம்பத்தைச் சந்தித்திருக்கிறது! ரத்தத்தால் எழுதப்பட்ட அந்தக் கொடிய வரலாறு தமிழகத்தின் சிறிதும் பெரிதுமான சுமார் 12 -15 ஆயிரம் ஜமாஅத் அமைப்புகளின் எதிர்காலத்தில் அடிப்படையான சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது! இதற்கு முன்னால், ஜமாஅத்து அமைப்புகளில் அவ்வப்போது கருத்துவேறுபாடுகள்- மோதல்கள் -கைகலப்புகள் நிகழ்ந்துள்ளன. ஓரிரு இடங்களில் அவை காரணமாக ஜமாஅத்துகள் […]

Read More

மருதாணியின் மகிமை

பெண்களின் அழகு சாதனைகளில் தவிர்க்க முடியாத ஓன்று இந்த மருதாணி. மருதாணியை மறுதோன்றி, அழவணம், ஐவணம் மற்றும் மெகந்தி என்றும் பெயரிட்டு அழைப்பார்கள். மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது. குழந்தை முதல் கிழவி வரை இந்த மருதாணி கை மற்றும் கால்களில் பூசுவதை இன்றும் நீங்கள் கிராமங்களில் பார்க்கலாம். அதன் பயன்கள் என்னவென்று தெரியாமலே அவர்கள் இதனை பறித்து அரைத்து உபயோகித்துக்வருகிறார்கள். இதுவே பவுடராக இன்று நகரத்து பெண்களிடம்… இந்த மருதாணியில் நிறைய […]

Read More

எல்லாப் புகழும் ………..

எல்லாப் புகழும் இறைவனுக்கு அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு ஆற்றல் எல்லாம் அறிந்தவனாம் அவன் அருள்மறை எல்லாம் பொழிவனாம் தீர்ப்பு நாளில் பதியாகும் அவன் தீர்ப்பே நம்க்கு கதியாகும் கேட்கும் கடமை நம்மிடத்தில் கொடுக்கும் உரிமையோ அவனிடத்தில் அந்த தூயோன் ரகுமானை தொழுதிடுவோம் அவன் திருமறை வழியில் வாழ்ந்திடுவோம்

Read More

இறைவன் படைப்பில் …………

இறைவன் படைப்பில் பாருலகம் தொடக்கம் – அதில் உயிர்கள் கோடி உன்னத தொடக்கம் மாண்பாய் மனித ஜனனம் தொடக்கம் மானிட வெற்றிக்காய் தீன்வழி தொடக்கம் பாருலகம் மறுமைக்காய் படிக்கும் பள்ளியே – அதில் நன்மை தீமை பிரித்து காட்டும் பாடமும் மறையே சொல்லித் தந்த ஆசானும் அண்ணல் இரசூலே பரிட்சை எழுதும் நேரமது உலக வாழ்க்கையே முடிகின்ற இம்மைக்காக பெரிதும் உழைக்கிறோம் – அறிது முடிவுறாத மறுமைக்காக உழைக்க மறுக்கிறோம் இறைவன் கொடுத்த அவகாசம் முடிந்துவிட்டாலோ திரும்ப […]

Read More

சட்டமன்றத் தேர்தல் கூட்டணிஜுரம்! ———— சேமுமு

சட்டமன்றத்  தேர்தல் கூட்டணிஜுரம்!             ———— சேமுமு தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது; அரசியல் மேடையில் கூட்டணிக் கட்சிகள் விறுவிறுப்புப் பெற்று வருகின்றன; பெயர் தெரியாக்கட்சிகளும் பிரபலப்படுத்திக் கொள்ளும் காலமிது; லெட்டர்பேடு கட்சிகளும் பலமான கட்சிகளாகக் காட்டிக் கொள்ளும் நேரமிது; இட பேரத்தில் மும்முரமாக அனைத்துக் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் சமயமிது; மொத்தத்தில் தேர்தல் ஜுரத்தில் கட்சிகள் பலவும் கை, கால் நடுங்கிக் கொண்டிருக்கும் தருணம் இது.           வழக்கம்போலவே தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஓர் அணி; அ.தி.மு.க. தலைமையில் மற்றோர் அணி; […]

Read More

அருளாளன் தந்த நல் இஸ்லாம்

அருளாளன் தந்த நல் இஸ்லாம் ஆதம் ஹவ்வாவின் ஆரம்பம் இஸ்லாம் இப்றாஹிம் நபி தியாகம் இஸ்லாம் அண்ணல் இரசூலின் வழிமுறையே இஸ்லாம் சாஸ்திர சீர் கேடு இல்லை கெட்ட நேரமும் சூலமும் இல்லை காலங்கள் எல்லாமும் நன்றே – என்று சொல்லிடும் மார்க்கம் தான் இஸ்லாம் ஜாதிகள் தீண்டாமை இல்லை ஏற்ற தாழ்வுகள் பேதங்கள் இல்லை எல்லோரும் ஓர் மக்கள் தானே – என்று சொல்லிடும் மார்க்கம் தான் இஸ்லாம் மூடப்பழக்கங்கள் இல்லை மூடி மறைக்கின்ற விஷயங்கள் இல்லை […]

Read More

தீண்டாமை

தீண்டாமை :         கொன்றுவிடு வேற்றுமையை !           ஆக்கம் ; முதுவைக்கவிஞர், ஹாஜி A. உமர் ஜஹ்பர் மன்பயீ ”தீண்டாமை” என்கிற தீயதொரு வார்த்தைக்குத்  “தீ” யென்ற சூடான ஓரெழுத்தே முதலெழுத்து ! வேண்டாத உணர்வுகளை விதைத்திட்ட தீண்டாமை  வேண்டாமே ! வேண்டாமே ! என்கிறது அனைத்துலகு ! ஆண்டாண்டு காலங்கள் அகிலமெல்லாம் ஒன்றிணைந்து  ஆற்றுகிற பணிகளிலும் முளைக்கிறது தீண்டாமை ! தோன்றுகிற நாகரீகம், துளிர்விட்ட விஞ்ஞானம்  தலையெடுத்த உலகினிலும் வாழ்கிறது தீண்டாமை ! மண்பிறந்த […]

Read More

கொழுப்பை குறைக்கும் 12 இந்திய உணவுகள்

உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு மூல காரணம் கொழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா… என்று தேடிப்போக வேண்டாம். கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உங்களது உணவில், நாளொன்றுக்கு […]

Read More

பிப்.13 முதுகுளத்தூரில் பெண்கள் தொழுகைப் பள்ளி அடிக்கல் நாட்டு விழா

  முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்திற்குட்பட்ட ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்திற்குச் சொந்தமான இடத்தில் பெண்கள் தொழுகைப்பள்ளி மற்றும் மதரஸா அடிக்கல் நாட்டு விழா இன்ஷா அல்லாஹ் 13.02.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெற இருப்பதாக பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஜனாப் எம். சீனி முஹம்மது தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளார். இப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி வரும் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய […]

Read More

எகிப்து புரட்சி

எகிப்து புரட்சி மூக்கில் அலகால் கொத்தி முட்டையை உடைத்து வெளியில் வந்து சிறகு விரித்து  என்ன பலன்? கழுகுகள் காத்திருக்கின்றன ! -பேராசிரியர் குடந்தை உசேன்

Read More