மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் ஏற்பாட்டில்
கோப்பிக் காலத்து
வரலாற்று நாவல்
வெளியீடு
இரா. சடகோபனின் கசந்த கோப்பி மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்டு விழா இம்மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெறும். இது கிறிஸ்டின் வில்சன் என்ற ஆங்கில நாவல் ஆசிரியர் எழுதிய BITTER BERRY என்ற புகழ்பெற்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும்.
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் ஏற்பாடு செய்திருக்கும் இவ்விழாவுக்கு இச்சங்கத்தின் தலைவர் தெளிவத்தை ஜோசப் தலைமை தாங்குவார். பிரதம அதிதியாக பேராசிரியர் சோ.சந்திரசேகரன் கலந்து கொள்வதுடன் சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் எம்.எஸ்.மூக்கையா, பேராசிரியர் எம்.சின்னத்தம்பி, வீரகேசரி நிருவன நிர்வாகப் பணிப்பாளர் திரு.குமார் நடேசன், தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு எம்.வாமதேவன், இந்நூலின் வெளியீட்டாளரான சூரியா பதிப்பக அதிபர் திரு அத்துல ஜெயக்கொடி ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.
இலக்கிய புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் முதற்பிரதியை பிரபல தொழிலதிபர் கே.துரைசாமி ஜே.பி அவர்கள் பெற்றுக்கொள்வார்.
பின்வரும் விழா நிகழ்வுகளில் பேச்சாளர்களாக கலந்து சிறப்பிப்போரின் விபரம் வருமாறு
வரவேற்புரை கல்வி அமைச்சின் தமிழ்மொழிப்பிரிவு பணிப்பாளர் திருமதி ஜி. சடகோபன்
நூல் அறிமுகவுரை மலைநாட்டு எழுத்தாளர் மன்ற உப தலைவர் மு.சிவலிங்கம்
நூலாய்வு பேராசிரியர் செ.யோகராசா தமிழ்மொழித் திணைக்களம். கிழக்கு பல்கலைக்கழகம்
வேறுபட்ட நிகழ்வாக நூல் விமர்சன கருத்தாடல் இடம்பெறவுள்ளது. இதற்கு இணைப்பாளராக நாடக கலைஞர் எஸ்.பாக்கியராஜ் செயற்படுவதுடன் கருத்தாடலில் சிறுகதை எழுத்தாளர் ஜி.சேனாதிராஜா, கவிஞர் சு.முரளிதரன், கல்வி அமைச்சின் கல்வி வெளியீடுகள் பிரிவின் பிரதி ஆணையாளரும், எழுத்தாளருமான லெனின் மதிவாணம், கலை இலக்கிய சமூக ஆய்வாளர் சுதர்மமகாராஜா, எழுத்தாளர் மல்லியப்பு சந்தி திலகர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மற்றும் கவிக் கத்திச் சண்டை வீச்சினை இளங்கவி லுணுகலை ஸ்ரீ நிகழ்த்த நன்றியுரையை பிரபல எழுத்தாளர் ப.ஆப்டீன் கூற ஏற்புரையை நூலாசிரியரும் சுகவாழ்வு சஞ்சிகை ஆசிரியருமான சட்டத்தரணி இரா.சடகோபன் நிகழ்த்துவார்.