Month: February 2011
ஒபிசிட்டி
உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு மூல காரணம் கொழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா… என்று தேடிப்போக வேண்டாம். கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உங்களது உணவில், […]
Read Moreதுபாயில் இஸ்லாம் டைரி மாத இதழ் ஆசிரியர்
இஸ்லாம் டைரி – ஜனவரி 2014 இதழ் இஸ்லாம் டைரி – ஜனவரி 2014 இதழ் இஸ்லாம் டைரி – டிசம்பர் 2013 இதழ் இஸ்லாம் டைரி – அக்டோபர் 2013 இதழ் துபாய் : இஸ்லாம் டைரி தமிழ் மாத இதழின் ஆசிரியர் எஸ். காஜா முஹ்யித்தீன் துபாய் வருகை புரிந்துள்ளார். திண்டுக்கல்லில் இருந்து இஸ்டாம் டைரி மாத இதழ் கடந்த மூன்று வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இம்மாத இதழ் இஸ்லாம் என்பது உன் […]
Read Moreசோம்பலை விலக்கு; வெற்றியே இலக்கு
இலக்கினைப் பார்த்து வாழ்வினை நகர்த்து இடைவரும் சோம்பலை யொழித்து கலக்கமே யின்றி யிலக்கினைப் பற்றிக் களத்தினு ளிறங்கினால் வெற்றி விலக்கிடு ஐயம் யாவுமே துணிந்து விதைத்திடு மனத்தினுட் பதிந்து துலங்கிடும் புதிய வழிகளும் உன்னால் துவக்கிடுப் புள்ளியும் முன்னால் நோக்கியே தேவை யுணர்ந்திட வேண்டும் நோக்கமும் முடிவுறும் நாளை ஊக்கமாய்த் தெரிவு செய்திட வேண்டும் ஊறுந்தடை விலகவும் வேண்டும் ஆக்கமும் குறையக் காரணம் என்ன […]
Read Moreமனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கார்கள்
ஜேர்மனியைச் சேர்ந்த அடானமஸ் லேப் மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி மூலம் மனித மூளையின் விருப்பபடி வாகனங்களை இயக்கலாம். வாகன ஓட்டி சென்சார் கேப் ஒன்றை அணிந்து கொள்வதன் மூலம் மூளையின் எலக்ட்ரோ மேக்னடிக் மின் காந்த அலைகளை வைத்து தங்கள் மூளையின் செயல்பாட்டை கம்ப்யூட்டர் அறிந்து கொள்ள முடியும். மூளையின் வலது இடது வழி முறைகளை, மூளையின் கட்டுப்பாட்டோடு இணைந்து கணணியின் மென்பொருள் செயல்படும். இது தவிர […]
Read Moreஎன்றும் இளமைக்கு நெல்லிக்காய்!
டாக்டர் ஆர்.பத்மபிரியா பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் சிகிச்சை இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. முதலாவது நோய் அணுகாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது. இரண்டாவது நோய் ஏற்பட்ட நேரத்தில் சிகிச்சையளித்து நோயை குணப்படுத்துவது. இதில் முதலாவதான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிகிச்சை காயகற்பம் என அழைக்கப்படுகிறது. காயம் என்றால் உடல். கற்பம் என்றால் அழிவில்லாதது. நரை, திரை, மூப்பு அணுகாமல் என்றும் நோயணுகாமல் இளமையாக வைத்திருக்க உதவும் மூலிகைகளை காயகற்ப மூலிகை என்கிறோம். காயகற்ப மூலிகைகளில் மிக […]
Read Moreவீடியோக்களின் விபரீதங்கள்
மெளலவி J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி அளவிலா அருளும் நிகரில்லாத அன்பும் நிறைந்த அல்லாஹ்வின் திருநாமம் போற்றி துவங்குகிறேன். எங்கள் இறைவனே ! எங்கள் மனைவிமார்களையும், எங்கள் குழந்தைகளையும், எங்கள் கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கக் கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக ! மேலும் எங்களை இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாய் திகழச் செய்வாயாக (அல்குர் ஆன் 25 ; 74 ) இஸ்லாத்தில் திருமண நிகழ்ச்சி என்பது மிக எளிமையாகவே வரையறுக்கப்பட்டிருக்கிறது என்பதை […]
Read Moreநோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு!
இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம். நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் […]
Read Moreஹிம்மத்துல் இஸ்லாம் நூலக பொதுக் கூட்ட தீர்மானம்
அஸ்ஸலாமு அலைக்கும் ஹிம்மத்துல் இஸ்லாம் நூலக பொதுக் கூட்ட தீர்மானம் நாள்: 10.02.2011 ஹிம்மத்துல் இஸ்லாம் நூலக வளர்ச்சிக்காக வரவு (ம)செலவுகளை பராமரிப்பதற்கு முதுகுளத்தூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குவது என்றும் வங்கி கணக்கு ஹிம்மத்துல் இஸ்லாம் நூலகம், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம். பெரிய பள்ளிவாசல் முதுகுளத்தூர் என்ற பெயரில் தொடங்கி கீழ்கண்ட நமது நூலக உறுப்பினர்கள் முன்று நபர்களுக்க வங்கி கணக்கை பராமரிக்க […]
Read Moreகொழும்பில் நூல் வெளியீட்டு விழா
மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் கோப்பிக் காலத்து வரலாற்று நாவல் வெளியீடு இரா. சடகோபனின் கசந்த கோப்பி மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்டு விழா இம்மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெறும். இது கிறிஸ்டின் வில்சன் என்ற ஆங்கில நாவல் ஆசிரியர் எழுதிய BITTER BERRY என்ற புகழ்பெற்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் ஏற்பாடு செய்திருக்கும் இவ்விழாவுக்கு இச்சங்கத்தின் தலைவர் தெளிவத்தை ஜோசப் […]
Read More