துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
கருத்தரங்கின் துவக்கமாக மார்க்க ஆலோசகர் மௌலவி ஏ. சீனி நைனார் தாவூதி ஆலிம் இறைவசனங்களை ஓதினார்.
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். முதுகுளத்தூர்.காம் வலைத்தளம் மூலம் பல்வேறு நாடுகளிலும் வசித்து வரும் முதுகுளத்தூர் மக்களை ஒருங்கிணைத்து வருவதை பாராட்டினார்.
பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்வாண்டு தாயகத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் கல்வித் திட்டங்கள் குறித்து விவரித்தார். கல்விப் பணிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஐக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளை குறித்த அறிமுக உரையினை நிகழ்த்தினார். மேலும் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மான நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மௌலவி பி.கே.என். அப்துல் காதர் ஆலிம் பிறைமேடை மாதமிருமுறை இதழின் செம்மொழி மாநாட்டுச் சிறப்பிதழை வெளியிட்டு கல்வி மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைப் பாராட்டினார்.
துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் நிறைவுரை நிகழ்த்தினார். நிகழ்வில் ரஹ்மத்துல்லாஹ், முஹம்மது யூனுஸ், எம். காஜா நஜுமுதீன், எஸ்.என். ஃபக்ருதீன், அஹமது அனஸ், இம்தாதுல்லாஹ், ரஷீன் அஹமத், ஹபீப், ஜாஹிர் உசேன், முஹம்மது இல்யாஸ் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் நன்றி கூறினார். துஆவிற்குப் பின் நிகழ்ச்சி நிறைவுற்றது.
துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழு கூட்டம்
�
�
http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=1503
துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழு கூட்டம் 15.07.2010 வியாழக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின்னர் ஹோர் அல் அன்ஸ் கராச்சி தர்பார் உணவகத்தில் நடைபெற்றது.
கிராஅத் : மௌலவி ஏ. சீனி நைனார் தாவூதி
மார்க்க ஆலோசகர் மௌலவி ஏ. சீனி நைனார் தாவூதி ஆலிம் இறைவசனங்களை ஓதினார்.
தலைமையுரை : என்.எஸ்.ஏ. நிஜாமுதீன்
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஆலிம் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் ஐக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளை ஏற்படுத்த உதவியமைக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். இக்கல்விப் பணியில் நமதூர் மக்கள் அனைவரும் பங்கு பெற கேட்டுக் கொண்டார். முதுகுளத்தூர்.காம் இணையத்தளத்தை நிர்வகித்து சிறப்புற நடத்தி வருவதற்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
வரவேற்பு : பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத்
பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் முதுகுளத்தூரில் நமது ஜமாஅத்தின் சார்பில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இலவச தனிப்பயிற்சி வகுப்பில் பயின்று வரும் மாணாக்கர் பற்றிய விபரத்தை தெரிவித்தார். மேலும் பிளஸ் டூ மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதற்காக உழைத்த ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
சிறப்புரை : மௌலவி பி.கே.என். அப்துல் காதர் ஆலிம்
சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பி.கே.என். அப்துல் காதர் ஆலிம் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் கடந்த பிப்ரவரி 2010 ல் முதுகுளத்தூரில் இஸ்லாமிய பயிற்சி மையத்தின் சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற எனக்கு அமீரகத்தில் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்திலும் பங்கேற்கும் நல்வாய்ப்பு நல்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்றார்.
முதுகுளத்தூரில் பள்ளிப் பருவத்திலேயே பாஸ்போர்ட் எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்குச் சென்ற நிலைமை மாறி இன்று கல்வியில் ஏற்றம் பெற்று வருவதற்கு உறுதுணையாய் இருந்து வரும் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் ஜமாஅத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
முதுகுளத்தூரின் கல்வி வளர்ச்சிக்காக மௌலானா சம்சுதீன் சேட் ஆலிம் அவர்கள் பர்மாவில் தொடங்கிய பணி மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் விரிவடைந்து இன்று அமீரகத்தில் நடைபெற்று வருவது வரவேற்பை ஏற்படுத்தக்கூடியதே.
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தினரின் பணிகள் தமிழக அரசின் 3.5 இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு உதவிகரமாக அமையும் என்பதில் ஐயமில்லை. உங்களது பணிகள் தொடர வாழ்த்தி துஆச் செய்கிறேன் என்றார்.
அதனைத் தொடர்ந்து பிறைமேடை மாதமிருமுறை இதழின் செம்மொழி மாநாட்டுச் சிறப்பிதழை மௌலவி பி.கே.என். அப்துல் காதர் ஆலிம் வெளியிட துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் பெற்றுக் கொண்டார்.
செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு :
ரஹ்மத்துல்லாஹ் :
என்னை இந்த நல்ல முயற்சியில் இணைத்துக் கொண்டமைக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் இயன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் தருவேன்.
மௌலவி ஏ. சீனி நைனார் தாவூதி
சிறிய முயற்சியாக ஆரம்பித்து இன்று ஆலமரமாக வளர்ந்து வருவது மகிழ்வினை அளிக்கிறது.
முஹம்மது யூனுஸ்
கல்விப் பணி ஒரு இன்றியமையாத ஒன்று. அரசு இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெற இது உதவும்.
எம். காஜா நஜுமுதீன்
பள்ளிப்படிப்போடு இருந்து விடாது அடுத்த என்ன படிக்க வேண்டும் என்ற ஆலோசனையினை வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
எஸ்.என். ஃபக்ருதீன்
நாம் அளித்து வரும் இப்பயிற்சி வகுப்புகள் பொதுத்தேர்வுகளில் நல்ல பலனை அளித்து வருவது மகிழ்வினையளிக்கிறது.
பி.அஹமது அனஸ்
நமது பயிற்சிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பயிற்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
ஏ. அஹமத் இம்தாதுல்லாஹ்
நமது பயிற்சிகள் தற்போது 9 முதல் பிளஸ் டூ வரை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்குச் செல்வோருக்கும் உதவிட வேண்டும்.
ஹபீப் திவான் :
நமது பணி எதிர்காலத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும்
ஜாஹிர் உசேன்
முதுகுளத்தூரை விட்டுக் கிளம்பினாலே இரும்புக்கடை அல்லது வெளிநாடு என்ற நிலை மாறி கல்விக்காக ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்வினையளிக்கிறது. முதுகுளத்தூரைச் சேர்ந்தவனாக இருந்தாலும் இரண்டு மணி நேரம் மட்டுமே முதுகுளத்தூரை பார்த்துள்ள சூழலில் இது போன்ற கல்விப் பணிகள் என்னை முதுகுளத்தூரில் அதிக நாள் இருந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பணிகளுக்கு உறுதுணையாய் இருந்து வரும் அனைவரையும் பாராட்டினார்.
பொருளாளர் ஜஹாங்கீர்
ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை வெளியிடக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பணிகளுக்கும் முக்கியமாக இருந்து வருவது நிதி. இப்பணிகள் சிறப்புற தொடர்ந்து நடைபெற அனைவரும் தங்களது முக்கியமான ஒத்துழைப்பினை வழங்கிட கேட்டுக் கொண்டார்.
நிறைவுறை : துணைத்தலைவர் எஸ்.சம்சுதீன்
நமது நோக்கங்கள் நிறைவேற அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொண்டார். முதுகுளத்தூர்.காம் இணையத்தளம் நமதூர் மக்களை ஒருங்கிணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது. தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள கல்வி அறக்கட்டளை நமது எண்ணப் பிரதிபலிப்பு. கல்விப் பணிகள் எதிர்கால தலைமுறையினரிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
தீர்மானங்கள்
1. முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
2.2010 2011 ஆம் கல்வி ஆண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இலவச தனிப்பயிற்சிகள் தொடர்ந்து நடத்துவது.
3. ஐக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டதற்கு பாராட்டு. இதற்காக வாங்கப்பட்ட இடம் குறித்த தகவலும் தெரிவிக்கப்பட்டது
4. முதுகுளத்தூர்.காம் இணையத்தள வளர்ச்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குவது
5. பிளஸ் டூ மற்றும் எஸ்.எஸ்.எல். சி. தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பாராட்டு
6. வழமை போல் இவ்வாண்டும் ஃபித்ரா வசூல் செய்து தாயகத்தில் விநியோகிப்பது
7. முதுகுளத்தூர் முஸ்லிம் வரலாறு தொகுப்பு இறுதிப்பணி நடைபெற்று வருகிறது. விரைந்து அப்பணி நிறைவுற்று நூலாக வெளியிடுவது
8. நமது அனைத்து பணிகளுக்கும் ஒத்துழைப்பு நல்கி வரும் தேசிய நல்லாசிரியர் எஸ்.அப்துல் காதர், பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மத் மௌலவி எஸ். அஹமத் பஷீர் சேட் ஆலிம், திடல் பள்ளி தலைவர் முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர், இஸ்லாமிய பயிற்சி மைய இயக்குநர் ஹெச்.ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன், சி.எஸ்.சி. கணினி மைய இயக்குநர் ஏ. காதர் முகைதீன் (எ) ஹுமாயூன், ஜமாஅத்தார்கள், ஆசிரியப் பெருமக்கள், உலமாக்கள், பெற்றோர்கள் மற்றும் மாணாக்கரகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் முதுகுளத்தூரைச் சேர்ந்த பெரும்பாலோர் கலந்து கொண்டனர். சிலர் தவிர்க்க இயலாத காரணங்களால் தங்களால் கலந்து கொள்ள இயலவில்லை எனவும் கல்விப் பணிக்காக தங்களது ஒத்துழைப்பு என்றும் இருக்கும் எனவும் தெரிவித்தனர்.
சவுதி அரேபியா, ஓமன், கத்தார், துருக்கி, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பணிபுரிந்து வரும் நமதூர் வாசிகளும், அங்கிருந்து தாயகம் சென்றிருப்பவர்களும் இப்பணிக்கு உதவிடவும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
�
துஆ மற்றும் வழமையான இரவு விருந்துக்குப் பின்னர் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. நிகழ்வில் பலர் நீண்ட இடைவேளைக்குப் பின் ஆர்வத்துடன் பங்கேற்றது நிர்வாகிகளுக்கு மகிழ்வினை அளிக்கச் செய்தது.