Free Acupuncture class part – 1

மருத்துவக்குறிப்புகள் மருத்துவம்

Part – 1

எல்லாப் புகழும் இறைவனுகே…

      இறைவன் அருளால் நான் கற்ற கல்வி என்னோடு மறைந்துவிடாமல் மற்றவர்களுக்கும் பயனளிக்க வேண்டும் என்கிற எண்ணதில் பொது மக்களுக்கு இலவசமாக, மிகவும் எளிமையாக நோய் நீக்கும் சில செயல்முறைகளை கற்றுத்தர இத்தொடரை ஆரம்பிக்கின்றேன்.

      15 வருட காலமாக நான் படித்தவைகளிலிருந்தும், அனுபவத்தின் மூலம் கிடைத்தவைகளிலிருந்தும், எனது ஆராய்ச்சி மூலம் அறிந்தவைகளிலிருந்தும் ஒளிவு மறைவு இல்லாமல் உங்களுக்கு கற்றுத்தர இருக்கின்றேன். இதை படிக்கும் நீங்கள்  பயன் பெறுவதோடு மற்றவர்களும் பயன் பெறும் வகையில் உங்களுக்குத் தெறிந்வர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்க வேண்டுகிறேன். மேலும் இதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும் நான் பதிலலிக்க கடமைபட்டுள்ளேன். ஆகையால் உங்கள் சந்தேகங்களை என்னிடம் E-mail மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் கேட்டறிந்துக்கொள்ளலாம்.

உலகத்தில் நோயில்லாத ஒருவர் கூட இல்லை. மருத்துவ அறிவு என்பது அனைவருக்கும் தேவையான ஒன்று. அக்குபங்ச்சர் என்பது ஒரு முழுமையான மருத்துவமாகும். இதற்கு செயல் முறை விளக்கம் அவசியமாகும்.. இதை ஒரு தகுதியான அக்குபங்ச்சர் மருத்துவரிடம் நேரடியாகத்தான் படிக்க முடியும்.   எழுத்து மூலம் ஒரளவிற்கு நீங்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக எழுதுகிறேன். இதன் மூலம் நீங்கள் சில வியாதிகளையும், வலிகளையும் நீக்கிக் கொள்ளலாம். (அக்குபங்ச்சர் கல்வியை நாடிப்பரிசொதனையுடன் முழுமையாக படிக்க விரும்புபவர்கள் நேரடியாக எங்கள் கல்விநிறுவனத்திற்கு வந்து குறைந்த நாட்களில் முழுமையாகக் கற்றுக்கொள்ளலாம். இதற்கு கட்டணம் உண்டு.)

நோய்களை குணப்படுத்த பலவிதமான வைத்திய முறைகள் உள்ளன. அவற்றில் சீன நாட்டின் அக்குபிரஷரும் ஒரு முறையாகும். மருந்து மாத்திரைகள் எதுவும் கொடுக்காமல், ஊசியும் போடாமல் மனித உடலில் ஒரு குறிப்பிட்ட வர்மப் புள்ளியில் உங்கள் விரல்களைக் கொண்டு முறையாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் பலவகையான நோய்களை குணப்படுத்தும் முறைதான் அக்குபிரஷர் எனப்படும்.

நமது தேசத்தில் எத்தனையோ ரிஷிகள், முனிவர்கள் தோன்றியிருந்தாலும் மனித வாழ்க்கையின் அளவு சுமார் நூறு ஆண்டுகள்தான். ஆனால் சீன தேசத்து கலாச்சாரமே வேறு. அங்குள்ள சாதுக்கள் இன்றைக்கும் கூட சர்வ சாதாரணமாக 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். அதற்கு காரணம் அவர்களின் அழ்ந்த மருத்துவ ஞானம்தான்.

தமிழில் எழுதுவதால் பலருக்கு Font பிரச்சனைகள் ஏற்படும். அதனால் இத்தொடரை PDF Fomat மூலம் மாற்றி அனுப்பியுள்ளேன். ஆகையால் attachment – ஐ டவுன்லோடு செய்து படித்துக்கொள்ளவும்.

உதாரணமாக நமது உடலில் எந்த இடத்திலாவது வலி ஏற்பட்டல் அந்த இடத்தில் நமது கைகளைக்கொண்டு அழுத்திகொள்ளுகிறோம். இதில் சிறிது வலி குறைகிறது. காரணம் நாம் அழுத்தும் போது நமது உடலில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்பட்டு வலிகள் குறைக்கப்படுகிறது. அக்குபிரஷரின் அடிப்படை தத்துவமும் இதுவே. சரியான வர்ம புள்ளிகளை கற்றுக்கொண்டு முறையாக அழுத்தம் கொடுக்கும்போது மருந்து, மாத்திரை இல்லாமல் பலவிதமான நோய்களை குணமாக்கலாம்.

இந்த வர்ம – அக்குபிரஷர் முறையை கற்றுக்கொள்வதால்  நமது உடலில் ஏற்படும் பலவித வலிகள் குறைக்கப்படுகின்றன. மனஅமைதி கிடைகின்றது, உடல் இயக்கம் சமநிலை அடைகிறது, நரம்பு மண்டலம் பலப்படுத்தப்படுகிறது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, இரத்த அழுத்தம் முறைப்படுத்தப்படுகிறது. இதை கற்றுக்கொள்வதன் மூலம் உங்கள் மருத்துவ செலவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். இதற்கு கல்வித் தகுதி ஏதும் தேவையில்லை. தமிழ் படிக்கத் தெறிந்த அனைவரும் கற்றுக்கொள்ளலாம்.

 அக்குபங்சர் சிகிச்சை முறை தோன்றிய இடம் சீன நாடாகும். ஆனால் இன்று அது உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. சீன டாக்டர்களைப் போலவே மேல்நாட்டு டாக்டர்களும் சிறப்பாக அக்குபங்சர் சிகிச்சை அளிக்கின்றார்கள். இன்றய காலத்தில் நீங்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கு அக்குபங்சர் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அக்குபங்சருக்கும், அக்குப்ரஷருக்கும் பெரிதாக வேறுபாடு ஒன்றுமில்லை. அக்குபங்சர் புள்ளியில் விரலால் அழுத்தம் கொடுத்தால் அது அக்குபிரஷர் ஆகும். அதே அக்குபுள்ளியில் அக்குபங்சர் (A fine Special Acupuncture Needle) ஊசியை செருகி சிகிச்சையளித்தால் அது அக்குபங்சராகும்.

அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் போன்றவை போலவே அக்குபங்சரும் ஒரு தனிப்பட்ட வைத்திய முறைதான். ஆனால் அது முற்றிலும் வித்தியசமானது.

மருந்து, மாத்திரம், சூரணம், லேகியம் போன்றவை எதுவும் கொடுக்காமல் ஊசிமூலம் இரசாயண மருந்தும் செலுத்தாமல், மனித உடலை மூடிக் கொண்டிருக்கும் தோலில் மயிரிலையைக் காட்டிலும் மெல்லிய அக்குபங்சர் ஊசியைச் செருகுவதன் மூலம் எல்லா வகையான நோய்களையும் குணப்படுத்தலாம் என்று சொன்னால் சாதாரண மனிதர்களால் அதை நம்பவே முடியாது.

ஆனால் அதுதான் உண்மை! அதிசயத்தக்க உண்மை! இன்று ஆயிரக் கணக்கான நோயாளிகள் அக்குபங்சர் மூலம் குணமடைந்து கொண்டிருக்கின்றார்கள்.

சாதாரணமாக, நோய்களைக் குணப்படுத்துவதற்காக வைத்தியம் பார்ப்பவர்கள் மருந்து மாத்திரைகள் கொடுப்பார்கள். அல்லது ஊசி வழியாக மருந்தை உடலுக்குள் செலுத்துவார்கள்.

ஆனால் அக்குபங்ச்சர் முறை அப்படிப்பட்டதல்ல. உடலில் ஒரு குறிப்பிட்ட புள்ளிகளில் ஊசிகளைச் செருகுகிறார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த ஊசிகளை எடுத்து விடுகிறார்கள்.

இவ்வாறு சில நாட்கள் செய்ததும் நோய்கள் குணமாகி விடுகிறது! கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? மருந்தும் கொடுப்பதில்லை, மாத்திரைகளும் கொடுப்பதில்லை, ஊசி மூலம் உடலுக்குள் மருந்தும் செலுத்தப் படுவதில்லை. அனால் உடலில் சில குறிப்பிட்ட புள்ளிகளில் ஊசிகளைச் செருகி வைப்பதன் மூலம் நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்றால் அது நம்பும்படியாகவா இருக்கிறது?

ஆனால் அதை நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அதுதான் உண்மை. உலகின் பல பாகங்களிலும் இன்று இலட்சக் கணக்கான மக்கள் அக்குபங்சர் சிகிச்சை மூலம் நோய் நீங்கிக் குணமடைந்து கொன்டிருகின்றார்கள். அதனால் தான் WHO (World Health Orgnaization) என்கிற உலக சுகாதார நிறுவனம் அக்குபங்சரை பக்கவிளைவுகள் இல்லாத அறிவியல் பூர்வமான மருந்தில்லா மருத்துவம் என அங்கீகரித்துள்ளது.

எல்லா மருத்துவ துறைகளிலும் போலிமருத்துவர்கள் வரமுடியும். ஆனால் அக்குபங்சரில் போலி மருத்துவர்கள் வரமுடியாது. காரணம் முறியான பயிற்சி இல்லாமலும், அக்கு புள்ளிகளைப் பற்றிய படிப்பறிவு இல்லாமலும் யாரும் அக்குபங்சர் ஊசியை அவ்வளவு எளிதாக செருகிவிட முடியாது.

அக்குபங்சர் சிகிச்சை மூலம் சில குறிப்பிட்ட நோய்களைத்தான் குணப்படுத்த முடியும் என்பதில்லை. எல்லா வகையான நோய்களையும் குணப்படுத்த முடியும். அதற்கான அத்தனை சாத்திய கூறுகளும் அக்குபங்சர் வைத்தியத்தில் உள்ளது.

இன்று அக்குபங்சர் மருத்துவத்தில் விரைலைக் கொண்டு அழுத்தும் அக்குபிரஷர், ஊசிபோடும் அக்குபங்சர், •பெதர்டச் (Feather Touch) என்னும் சருமத்தின் மேலே பட்டும் படாமல் தொடும் முறை, தொடாமலேயே குணப்படுத்தும் முறை போன்ற எத்தனையோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது.  முறையான பயிற்சி இல்லாமல் ஊசிப்போடும் அக்குபங்சர் முறையை நீங்கள் செய்ய முடியாது என்பதால் உங்களுக்கு விரால் அழுத்தி குணப்படுத்தும் எளிய வர்ம – அக்குபிரஷர் முறையை சொல்லிகொடுக்கின்றேன். அதனால் இம்முறையில் உங்கள் நோய்கள் குணமாகுமா என சந்தேகம் கொள்ள வேண்டாம். நிச்சயாமாக குணமாகும். இதை படிக்கும் ஒவ்வொருவரும் வருங்கால மருத்துவர்கள் தான். இந்த நிமிடம் முதல் இரசாயண மருந்து மாத்திரைகளை (Chemical Tablets) குறைத்துக்கொள்ளுங்கள் அல்லது மறந்துவிடுங்கள்.

 என்னால் முடிந்தவரை எளிமையாக கற்றுகொடுக்கின்றேன். அனால் இது தான் முழுமையானது என நீங்கள் எண்ணி விடவேண்டாம். இதைவிட மேலான ஞானம் உங்களிடமும் இருக்கும். என்னைவிட மேலான மருத்துவர்களாக நீங்கள் வரவேண்டும் என்று உங்கள் மனதில் எண்ணிக்கொண்டு இதை கற்றுக் கொள்ள ஆயத்தமாகுங்கள்.

பொதுவாக அக்குபங்சர் வைத்தியத்தில் நோய்கள் தாமதமாக  குணமாகும் என்று சொல்லப்படும். ஆனால் எங்கள் பாடதிட்ட முறைகளில், பல நோய்களை 2 நிமிடத்தில் உடனே நீங்களே குணப்படுத்திக் கொள்ளலாம். இப்படி உடனே குணப்படுத்தும் முறையை வேறெங்கும் கற்றுக்கொள்ள இயலாது. பல்லாயிரம் ரூபாய்கள் கொடுத்தாலும் கற்றுக்கொள்ள முடியாத பல விஷயங்களை இங்கே நீங்கள் கற்றுக்கொள்ளப் போகின்றீர்கள். ஆகையால் நிதானமாக ஒன்றுக்கு இரண்டுமுறை படித்து மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

சீன வர்மக்கலையை கற்பதன் மூலம் அன்றாடம் நமக்கு ஏற்படும் பல அவசர நிலைகளுக்கு (Emergency) முதலுதவி செய்துக் கொள்ளலாம். மேலும் தலைவலி, ஜலதோஷம், மூக்கடைப்பு, ஜூரம், கழுத்துவலி, இடுப்புவலி, குதிகால்வலி, வாந்தி, மயக்கம், இரத்தஅழுத்தம், வயிற்றுபோக்கு, மாதவிடாய் கோளாறுகள், மலச்சிக்கல், வாயுத்தொல்லைகள், தொண்டைவலி, பல்வலி, பயம், டென்ஷன், படபடப்பு, மன அமைதி, தூக்கமின்மை, முடி உதிர்தல், இரத்தப்போக்கு etc., போன்ற பல நோய்களுக்கு நீங்களே சிகிச்சை செய்துகொள்ளலாம்.

தமிழில் எழுதுவதால் பலருக்கு Font பிரச்சனைகள் ஏற்படும். அதனால் இத்தொடரை PDF Fomat மூலம் மாற்றி அனுப்பியுள்ளேன். ஆகையால் attachment – ஐ டவுன்லோடு செய்து படித்துக்கொள்ளவும்.

          உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.                 தொடரும்…

Institute of Classical Acupuncture & Research Centre,
   No: 74- A, Pallivasal Street, Cuddalore – O.T – 607003, Tamil Nadu, India.
 
Cell: 0091- 98947 53790, 9940 723723.acu_home@yahoo.com.
__________________________________________________________________________
 
Dr. K. Ghouse Mohideen, MD (Acu).,
(D.Ac., D.P.T., D.Cos.Ac., Dip.Hom., D.Pr.H., D.Var.T., D.Hip.T.)
(Physio , Varma  & Acupuncture Therapist)
 
Member : Council  of  Indian  Acupuncturists – Regd. No: 1132.
International Acupuncture Licence No: 02200804 MA.
____________________________________

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *