மா, மா, மா, மா, மா, காய்ச்சீர் வாய்பாட்டில் அமையும் விருத்தம்
அழகுத் தமிழில் பேசும் பொழுது
அமுதம் விளைவதுவே
பழகும் நட்பில் தூய்மை நிறைந்தால்
பண்பேத் தெரிவதுவே
மழலை மொழியே கவிதை மகிழ்ச்சி
மனதில் பூரணமே
உழவர் பலனே பூமிச் சிரிக்க
உண்மை காரணமே
இருளு மொளியும் மாறி வருதல்
இறைவன் நியதியிலே
அருளும் பொருளும் தேடிச் சென்று
அடைதல் மதியாலே
கருவி லொன்றும் செய்யா நிலையில்
கனவில் மிதந்தாயே
உருவம் பெற்று புவியில் வந்தும்
உழைக்க மறந்தாயே
நிலவில் காலை வைக்கத் துடிக்கும்
நிலையில் பிழையில்லை
உலகில் போரை நிறுத்தச் செய்ய
உண்மை மனமில்லை
கலகம் செய்யத் தானா நம்மை
கடவுள் படைத்தாரா?
விலகிச் செல்வாய் மூடர் செய்யும்
விவாதம் கலவாதே
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
எனது வலைப்பூத் தோட்டத்தில் உலா வர வழி:
http://www.kalaamkathir.blogspot.com/