பக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்

மருத்துவச்செய்திகள்

பக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்

வியாழன், 14 அக்டோபர் 2010 08:57

லண்டன், முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்த மனித “ஸ்டெம் செல்” மூலம் அமெரிக்காவின் அட்லாண்டா மற்றும் ஜார்ஜியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை உலகிலேயே இங்குதான் முதன் முதலாக சிகிச்சை அளித்து சாதனை படைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தற்போது உடல் முழுவதும் பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் நோயை குணப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை இச்சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி அவர்களை மீண்டும் நடக்க வைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஏனெனில், கலிபோர்னியாவில் உள்ள ஜெரான் கார்ப்பரேசன் ஆஸ்பத்திரியில் தண்டு வடம் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு “ஸ்டெம் செல்” மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற நோய்களை தீர்க்கும் பரிசோதனைக்கு ஒரு தொடக்கமாக அமைந்துள்ளது.

பக்கவாத நோய்க்கு மட்டுமின்றி இதயம், மூளை, தசைகள் போன்றவற்றில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த முடியும் என்று கருதுகின்றனர் “ஸ்டெம் செல்” மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என்ற தகவல் “மிகப்பெரிய செய்தி” என ஆஸ்திரேலியாவின் “ஸ்டெம் செல்” சிகிச்சை நிபுணர் ஆலன் டிரவுன்சென் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *