அயோத்தி பாபரி மஸ்ஜித் சொத்து வழக்கில் அலகபாத் உயர்நீதி மன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட பென்ச் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ந்தேதி அலாவுதீனும் அற்புத விளக்கும் போல அதிசயத் தீர்ப்பு வழங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே. அதுவும் மூன்று மும்மூர்த்தி ஜட்ஜ்கள் கூடி கையில் கிடைத்த அயோத்தி என்ற அப்பத்தினை மூன்று பகுதியாக பிரித்து மூன்று அமைப்புகளுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளனர். அதில் ஒருவர் இஸ்லாமியர் மற்ற இரு அமைப்பினர் ராமர் பக்தர்கள். ஆகவே அப்பம் இரண்டு பகுதி ராமர் பக்தர்களுக்கும்; ஒரு பகுதி இஸ்லாமியருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறுவது மூலம் எப்படி அற்புதமான பங்கீடு என்று அனைவருக்கும் புரிந்திருக்கும். அந்த அப்பத்தினை பங்கிட்ட மூன்று ஜட்ஜ்களில் ஒருவர் முஸ்லிம் இருவர் முஸ்லிம் அல்லாதவர். இப்போது தான் கோர்ட்டுகளில் ஏன் நீதி தேவதையின் சிலையில் கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டுள்ளது என உங்களுக்குப் புரிந்திருக்கும். தினமணி 2.10.2010 தேதியிட்ட பத்திரிக்கையில் அலஹபாத் நீதிமன்ற தீர்ப்பினை விமரிசக்கும் போது ‘அந்த தீர்ப்பு ஒரு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு’ என விளக்கம் அளிக்கிறது. ஆங்கிலத்தில் கங்காரு கோர்ட் ஜட்ஜ்மெண்ட் என விமரிசிப்பார்கள்.
பாபரி மஸ்ஜித் இடிக்கும் போது பார்த்துக் கொண்டிருந்த முன்னாள் உ.பி.முதல்வர் கல்யாண் சிங் சொல்கிறார், ராமர் கோயில் கட்ட அந்த இடம் மட்டும் போதாது மீதமுள்ள 66 ஏக்கர் அருகிலுள்ள அரசு நிலமும் வேண்டுமென்கிறார். ஆனால் சர்ச்சைக்குரிய பாபரி மஸ்ஜித் இருந்த இடமே வெறும் இரண்டரை ஏக்க்ர் தான். அதில் மூன்றில் ஒரு பகுதியினைக்கூட விட்டுக் கொடுக்க கல்யாண்சி;ங் தயாரில்லை என உங்களுக்குத் தோனவில்லையா? ஒரு காலத்தில் உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங்குடன் கூட்டுச்சேரும் போது அதே கல்யாண்சிங் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதிற்கு வருத்தம் தெரிவித்தவர் தானே! ஆகவே அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கூறுவது போல உங்களுக்குத் தோனவில்லையா?
நீதிபதி சர்மா மற்றும் நீதிபதி அகர்வால் அவர்களும் சர்ச்சைக்கரிய இடம் பகவான் ராமர் பிறந்த இடமா என்று கேட்கும் கேள்விக்கு மத நம்பிக்கையின் படி ராமர் என்ற கடவுள் எங்கும் எப்போதும் எந்த உருவத்திலும் நிறைந்துள்ளவர். அந்த நம்பிக்கை அடிப்படையில் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22ந்தேதி நடுராத்திரியில் நீதிபதி கான் அவர்கள் சொன்னபடி 1528 ஆம் ஆண்டு பாபராலோ அல்லது அவரது தளபதிகளாலோ இடிந்து கிடந்த இடிபாடுகளுக்கிடையே கட்டப்பட்ட மஸ்ஜிதின் கோபுர நடுவில் வைக்கப்ட்ட ராமர் சிலை இருக்கும் இடத்தில் தான் பிறந்தார் என்ற அதிசய கண்டு பிடிப்பிற்குப் பிறகு தீர்ப்பு நிகழ்த்தியுள்ளார்.
இதில் பொது அறிவிற்கு விளங்காத வாதங்கள் வைக்கப்பட்டது போல உங்களுக்குத் தோனவில்லையா? எல்லாம் வல்ல அல்லாஹ் உருவமற்றவன் அகிலத்தினைப் படைத்து ஆட்சி செய்ய நீக்கமற நிறைந்து இருப்பவன். அவன் இந்த அண்டத்தினை உருவாக்க்p பாரிபாலனம் செய்து நம்மை மனிதப்பிரவியில் படைத்து நல்வாழ்வினைத் தந்ததிற்காக உருவமற்ற பள்ளிவாசல் கட்டி அங்கே இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். ஆனால் ராமர் என்ற ஒரு சிலையினை இருள் சூழ்ந்த நேரத்தில் வைத்த செயல் தடியெடுத்தவன் தண்டல் காரன் செயலாகவும், சிலையில்லாத பள்ளிவாசலில் சிலையினை வைத்து அதற்கு உரிமையுள்ளது என்று வாதிட்டு அதற்கு சார்பாக தீர்ப்புக்கூறுவது மூலம் எந்த வகையில் நியாயம் என உங்களுக்குத் தோனவில்லையா? அவ்வாறு ராமர் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றால் கிறித்துவர் சர்ச்சிலிலும், சீக்கியர் கோவிலிலும், சைன, புத்தர் கோயிலிலும் அவர் நீக்கமற நிறைந்திருக்கிறாரா? ஏன்ற கேள்வி உங்கள் மனதில.; தோன்றவில்லையா?
புhபரி மஸ்ஜித் கட்ட முன்னோட்டமான கர்சேவர்களின் ரதயாத்திரையினை வெற்றிகரமாக தடுத்து நிறுத்திய முன்னாள் உ.பி. முதல்வர் முலாயம் சிங்யாதவ் சொல்கிறார், இந்த தீர்ப்பு மத அடிப்படையில் சொல்லப்பட்டது அது சட்டத்திற்குட்பட்டு சொல்லவில்iயென்று. பாபரி மஸ்ஜித் இடிப்பில் முக்கிய பங்காற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி அவர்கள,; பாபரி மஸ்ஜித் தீர்ப்பு பற்றி சொல்லும் போது, நம்பிக்கை சட்ட வடிவில் வந்துள்ளது’ என சொன்னதாக 4.10. 2010 தேதியிட்ட இந்து பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. ஆகவே மத நம்பிக்கையில் எழுதப்பட்ட தீர்ப்பினை சட்ட முன்வடிவில் கொண்டு வர ஆரம்ப முயற்சிதான் அவர் அளித்த பேட்டி என உங்களுக்குத் தோனவில்லையா? அந்த தீர்ப்பினை வரவேற்று சில திராவிட அரசியல் கட்சகளும் கூட அறிக்கை வெளியிட்டுள்ளன.
ஆனால் தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை 4.10.2010 அன்று எல்லா பத்திரிக்கையிலும் வெளி வந்துள்ளது. அதில், ‘நீதிபதி டி.பி. சர்மா கூறிய தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம்தான். ராமர் ஒரு கடவுள். ஆங்கு பாபரால் கட்டிடம் எழுப்பபட்டுள்ளது. எந்த வருடம் என்று தெரியவில்லை. சர்ச்கைக்குரிய இடத்தில் 1949ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 22ந்தேதி நள்ளிரவில் சிலை வைக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய இடத்தினை ராமர் பிறந்த இடமாக கருதி, இந்துக்கள் வழிபட்டு உள்ளனர். ராமர் கிருதயுகத்தில் அதாவது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆகும். இப்படி கற்பனைக்கே எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்கு முன்பு, ராமர் பிறந்த இடம் இது தான் என்று அறுதியிட்டு உறுதியாக வழங்கப்பட்டிருக்கும் நீமன்ற தீர்ப்பு சொல்லும் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மக்களாட்சி தத்துவமான குடவோலை தேர்தல் முறை மற்றும் பல் வேறு மக்கள் நல சீர்திருத்தங்கற் அறிமுகப்படுத்திய தென்னகத்தினை ஆண்ட தஞ்சை மன்னன் ராஜ ராஜ சோழன் மறைந்த விதத்தை, அவன் கல்லறை, அவனுக்கு நினைவுத்தூண் அமைத்த இடத்தையோ நம்பமால் இன்னும் காண முடியவில்லை என வருத்தத்துடன’; தெரிவித்துள்ளார். ஏனென்றால் சோழ சாம்ராஜ்ஜியம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் கோலோட்சியது. வெறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட ராஜராஜசோழன் பற்றி நினைவுச்சின்னம் கூட இந்த நவீன உலகத்தில் கிடைக்காதபோது 17லட்சத்து 28ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ராமரைப்பற்றி அவர் முஸ்லிம் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் கோபுரத்தின் நடுவில் பிறந்தார் என தீர்ப்புக் கூறும் போது முதிர்ந்த நடுநிலையாளர்களுக்கு வியப்பாக இருப்பது நியாயமே! ஆனால் அதற்கு பதில் சொல்லும் விதத்தில் பி.ஜே.பி மாநில தலைவர் 5.10.2010 வெளியிட்ட அறிக்கையில் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கை மத வேற்றுமையினைத் தூண்டுவதாக இருப்பதாக சொல்லியுள்ளார். உண்னையினைச் சொன்னால் ஒருசாராருக்கு குத்தலும்- குடஞ்சலும் வருவதும் இயற்கையே!
என் நண்பர் ஒருவர் கேட்டார், ‘ஏன் சார், பாபரி மஸ்ஜிதில் 1949ஆம் ஆண்டு இரவில் பள்ளியில் ராமர் சிலை தெரியாமல் வைத்தபோது முஸ்லிம்கள் காலையில் பார்த்து எடுத்து அப்புறப்படுத்தியிருக்கலாமே’என்று. அதற்கு நான் சொன்னேன், ‘முஸ்லிம்கள் இந்திய நாட்டின் ஜனநாயத்தில் சம உரிமை பெற்றிருந்தாலும் மைனாரிட்டியாக வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக போகவில்லை. அரசுக்கு முறையாக தெரிவித்து அரசு நியாயமான நடவடிக்கைக்காக காத்திருந்தார்கள். அதற்கு கிடைத்த பரிசுதான் பாபரி மஸ்ஜித் கர்சேவகர்களால் தரைமட்டமாக்கப்பட்டதும், அலஹபாத் நீதிமன்ற அற்புதத் தீர்ப்பும்’ என்றேன். என்னதான் கீழ்கோர்ட்டு தீர்ப்பு சொன்னாலும் மேல் முறையீடு செய்யும் போது உச்ச நீதிமன்றத்திலுமா நமது உண்மைக்கு சரியான முகவரி கிடைக்காது?
தமிழ் நாட்டில் வீட்டுக் குடியுரிமைச்சட்டம் உள்ளது. அதில் பத்தாண்டுகள் அரசு நிலத்தில் குடியிருந்தோருக்கு பட்டா வழங்கப்பட்டு உரிமமும் வழங்கப்படும். அப்படி விவாதத்திற்கு வைப்போமானாலும் பாபரி மஸ்ஜித் சொந்தம் கொண்டாட பத்திர உரிமை இல்லாவிட்டாலும் 500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு தொழுகை நடத்திய ஜமாத்திற்குத்தானே அந்த இடம் ஒதுக்க வேண்டும்? அதனை விட்டு விட்டு 1949ஆம் ஆண்டு ராமர் சிலையினை திருட்டுத்தனமாக வைத்தவர்களுக்கு எப்படி வழங்குவது என்பது தான் நடு நிலையாளர்களின் புரியாத கேள்வி?
அலஹபாத் நீதிமன்ற தீர்ப்பு மூலம் சில பாடங்களை நாம் தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்:
1) 1990ஆம் ஆண்டு ஒரு நாள் நான் சிவகங்கையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் ரோட்டில் போய்க் கொண்டிருந்தேன். லுஹர் நேரம் வந்தது. அருகில் உள்ள ஊரில் பள்ளிவாசல் இருக்கிறதா என கேட்;;;டு அங்கே சென்றேன். ஆனால் அங்குள்ள சிறிய பள்ளிவாசல் மூடியிருந்தது. பள்ளிவாசலினைச் சுற்றியுள்ள வராண்டாவில் ஆட்டு மந்தையிருந்தது. ஆடுகளின் மூத்திரமும், புலுக்கையுமாக இருந்தது. எனது வாகனத்தினைப் பார்த்ததும் ஒரு தாடி வைத்த முதியவர் ஓடி வந்தார். அப்போது அவரிடம் லுஹர் தொழுகை நடத்த வில்லையா எனக் கேட்டேன். அப்போது அவர் சொன்னார் ரெகுலராக தொழுகை நடத்தக் கூட்டம் சேருவதில்லை. ஜூம்மாத்தொழுகைக்கு மட்டும் ஒரு இமாம் சிவகங்கையிலிருந்து வரவழைத்து தொழுகை நடத்துகின்றோமென்றார். இவ்வளவிற்கும் அந்த ஊரில் 20 முஸ்லிம்கள் குடும்பம் உள்ளது. ஆகவே இது போன்ற பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தாதும் ஆள்நடமாட்டம் இல்லாமலும் இருந்தால் மாற்றார் ஆக்கிரமித்து சிலை வழிபாடு நடத்த ஒரு வாய்ப்பு இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆகவே தான் அருகிலுள்ள பெரிய ஜமாத்தார் இது போன்ற சிறிய ஊரில் உள்ளவர்கள் இஸ்லாத்தின் ஐம்பொரும் தூண்களில் இரண்டாவது தூணான தொழுகையினை கண்டிப்பாக நடத்தி வர தூண்டுவது மட்டுமல்லாது அவர்களுக்கு வேண்டிய உதவியும் செய்து அவர்கள் ஈமான் மாறாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
2) மற்ற பள்ளிகளில் தொழுகை முடிந்ததும் அந்த பள்ளி வளாகத்தினை பாதுகாக்க ஜமாத்தார் காவலாளியினை நியமிக்க வேண்டும். வக்ப் சொத்துக்கள் எது என அறிந்து அதனை ஜமாத்தார் தங்கள் வசப்படுத்த சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
3) முன்பெல்லாம் பஜ்ர் தொழுகையினுக்கு ஒரு பள்ளியில் ஒரு வரிசை அல்லது இரண்டு வரிசை ஜமாத் நிற்கும். ஆனால் கடந்த பதினைந்து வருடங்களாக சமுதாய இயக்கங்கள் தோன்றய பிறகு தொழுகையில் இளைஞர்களுக்கு ஒரு ஈடுபாடு ஏற்படுத்திய பயனால் நிறைய இளைஞர்கள் பள்ளிவாசலில் தொழுகைக்கு மிகுந்த ஆர்வத்துடன் வருவதினைக் காணலாம். அந்த இளைஞரகளால்தான் சீதனமில்லாது மகர்கொடுத்து திருமணம் அதிக செலவுமில்லாது-ஆடம்பரமில்லாது திருமணம் நடப்பதினைக் காணலாம். அந்த இளைஞர்கள் பள்ளிக்குத் தொழுகைக்கு வரும்போது அவர்கள் தலையில் தொப்பி யணிந்துதான் வரவேண்டும் என்ற கட்டுப்பாடு ஜமாத்தார் ஏற்படுத்துவது மூலம் அந்த இளைஞர்களுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு மேல் வெறுப்பினை ஏற்படுத்தி விடக்கூடாது. இளைஞரகள் வருங்கால முஸ்லிம் சந்ததிகள். அவர்கள் படித்தவர்கள். சுய வேலை செய்து குடும்ப்பொறுப்பினைக் காப்பவர்கள் மட்டுமல்ல சமுதாயத்திற்கு ஒரு பிரச்னை யென்றால் முன்னின்று குரல் ஏழுப்பக் கூடியவர்கள் என்று சமீப காலத்தில் உணர்த்தியுமுல்லார்கள். அவர்களை ஜமாத்தார் அரவணைத்து அவர்களின் உண்மையான உணர்வுப் பூர்வமான கோரிக்கையினை பொறுமையுடன் கேட்டு நிவர்த்தி செய்யதால் அவர்கள் பிற்காலத்தில் அந்த ஜமாத்தினைக் கட்டிக் காப்பார்கள் என்பது வெள்ளிடை மலை. உதாரணத்திற்கு வியாபார ரீதியாக எதிரிகள் போன்று இருந்த துருபாய் அம்பானி மகன்களான முகேஷ் அம்பானியும் அவருடைய தம்பி அனில் அம்பானியும் தங்கள் தொழிலுக்கு போட்டி ஏற்பட்டு தங்கள் தொழில் நசுங்கி விடும் என்ற நிலை ஏற்பட்ட போது 24.5.2010 தாயார் நிரூபன் மூலம் சமாதான ஒப்பந்தம் செய்து இன்று உலக பணக்காரர்களில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆகவே ஒரு தாய் மக்கள் போன்றிருக்கம் ஒரு ஊர் ஜமாத்தார் சிறு சிறு பிரச்னைகளுக்காக பிரிந்து நின்று மாற்றான் உங்கள் வேற்றுமையினைப் பயன் படுத்தி உங்களை அழித்து விட இடம் கொடுக்கக் கூடாது.
சிந்தனை மன்றம்: இளைஞர்கள் பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு வரும் அதே நேரத்தில் அவர்கள் உடைகள் கேசுவலாக டி.சர்ட், தொழுகைக்கு வருபவர் கவனத்தினை ஈர்க்கக் கூடிய படங்கள், எழுத்துக்கள் போட்ட விதம் விதமான பேண்ட் சர்ட்டுகள் அணிந்து வருகின்றனர். சமுதாய அமைப்புகள் நடத்திக் கொண்டிருப்பவர்களும், ஜமாத்தாரும், இமாம்களும் அது போன்ற உடைகள் ஏன் அணிந்து வரக்கூடாது என விளக்க வேண்டும். சமீபத்தில் அண்ணா யுனிவர்சிட்டியில் இது போன்ற உடைகள் உடுத்திக் கொண்டு வரக்கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அதற்கு சில எதிர்ப்பு ஆரம்பத்தில் இருந்தாலும் இன்று அதனை கடைப்பிடித்து வருகிறார்கள். அது போன்ற பல கல்வி நிறுவனங்கள் கூட அமல் செய்துள்ளன. திருப்பதி தேவஸ்தானம் கூட அது போன்ற கட்டுப்பாடு பக்தர்களுக்கு விதித்துள்ளதாக 3.10.2010 செய்திகள் கூறுகின்றன. இஸ்லாத்தில் ஏற்கனவே உருவ வழிபாடு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் உருவம் பொறித்த உடைகள் அணிவதினை பள்ளிவாசலுக்கு வெளியே அணிந்தால் யாரும் கேட்க மாட்டார்கள். ஆகவே ஏக இறைவனைத் தொழும் பள்ளிவாசலுக்கு அது போன்ற டிரஸ் அணிந்து வருவது முறைகேடானது. ஆகாதா?