தெரிந்து கொள்ளுங்கள்!
* 500 தாள்கள் கொண்டது ஒரு ரீம்.
* இரவில் மலரும் பூக்களில் நிஷாகந்தியும் ஒன்று.
* யூதர்களின் புனித நூல் டோரா.
* உலகில் சுமார் 850 எரிமலைகள் உள்ளன.
* இலியட் என்ற நூலை எழுதியவர் ஹோமர்.
* இரவில் மிகவும் பிரகாசமாக ஒளிரும் நட்சத்திரம் சீரியஸ்.
* ஆக்டோபஸ் போலவே பல கால்களுடன் நீரில் வாழும் பிராணி ஸ்குவிட். இதன் நரம்புகள் மிகவும் தடியானவை.
* ஹம்மிங் பறவையால் ஒரு மணி நேரம் அசையாமல் இருக்க முடியும்.
* மானுக்கு ஆண்டுதோறும் கொம்புகள் புதுசாக முளைக்கின்றன.
* சூரிய மீன் என்ற ஒருவகை மீன் கோடிக்கணக்கில் முட்டை இடும்.
* எலிகளின் இதய துடிப்பு நிமிடத்திற்கு 700 முறையாகும்.
* தமிழ் இலக்கியத்தில் முதலில் தாலாட்டு பாடியவர் பெரியாழ்வார்.
* சிரிப்பை பற்றிச் சொல்லித் தரும் பள்ளி மான்செஸ்டரில் உள்ளது.
* நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் சிங்கவால் குரங்குகள் வசிக்கின்றன.
* சிலந்திகளின் வலை அமிலத்தன்மை உடையது. பாசி, பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளால் பாதிப்படையாது.
* கடலில் சுமார் 25,000-த்துக்கும் மேற்பட்ட மீன் இனங்கள் உள்ளன.
* தாமரை மலரிலிருந்து 200 வகையான மருந்துகள் தயாரிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
* உலகிலேயே அதிக பக்கங்களுடன் வெளிவந்த நாளேடு நியூயார்க் டைம்ஸ். 1956 மே 5-ம் தேதியன்று 516 பக்கங்களுடன் வெளியானது.
* தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கலைஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை.
* முதன்முதலில் கிளிஜோதிடம் தோன்றிய நாடு மியான்மர்.
* நேபாள மன்னர்களின் குலதெய்வம் தமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில்.
* உலகில் அதிகளவில் பழத்தோட்டங்கள் உள்ள நாடு கொலம்பியா.
* உலோகங்களில் உயர்ந்தது புளுட்டோனியம்.
* சூரியனின் மகள் என்றழைக்கப்படும் தாவரம் பருத்தி.
* நெல்லிக்காய் சாப்பிட்டால் பித்தம் நீங்கும்.
* ஆஸ்திரேலியாவில் கங்காருவைப் போல புகழ் பெற்ற மற்றொரு விலங்கு கோலா. இது தன் குட்டிகளை சுமந்தபடி மரத்துக்கு மரம் தாவுமாம்.
* வேப்பமரத்தின் மாற்றுப் பெயர்கள் அரிட்டம், துத்தை, பரிமதரம், பின்மந்தம், வாதாரி, அருட்டம், அருணாவதி, கடிப்பாறை, கேசமுட்டி, பூமாரி, புயாரி, மந்தமரம் ஆகியனவாகும்.
* ஆக்டோபஸின் ரத்தம் நீல நிறமாக இருக்கும்.
* இந்திய மண்ணில் படையெடுத்த முதல் ஐரோப்பியர் அலெக்ஸôண்டர் ஆவர்.
* சீனாவிற்கு முதலில் வந்த ஐரோப்பியர் மார்கோபோலோ.
* இந்தியாவிற்கு வந்த சீன யாத்ரிகர் பாகியான்.
* இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ஐஸன்ஹோவர் ஆவர்.
* இந்தியாவிற்கு வந்த முதல் சோவியத் பிரதமர் புல்கானின்.
* வடதுருவத்தை முதன்முதலில் சென்றடைந்தவர் ராபர்ட் பியரி.
* ஆர்டிக் கடல் வருடத்தில் 8 மாதங்கள் உறைந்திருக்கும்.
* முதன்முதலில் கடல் பயணத்தின் மூலம் உலகைச் சுற்றி வந்தவர் மெகல்லன்
* பச்சயம் இல்லாத தாவரம் காளான்.
* காந்தியடிகள் தனது சுயசரிதையான சத்தியசோதனையை குஜராத்தி மொழியில் எழுதினார். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் மஹாதேவ் தேசாய்.
* உலகையே நடுங்க வைத்த சர்வாதிகாரி ஹிட்லர், இளம் வயதில் ஓவியராக இருந்தார்.
* பிறந்த ஐந்தே நாட்களில் குதிரைக் குட்டி ஓடத் துவங்குகிறது.
* பறந்தாலும், நின்றாலும், அமர்ந்தாலும் இறக்கையை மடக்க முடியாத பூச்சி தட்டாம் பூச்சி.
* பறவைகளில் ஆந்தைக்கு மட்டுமே மனிதர்களைப் போல இரண்டு கண்களும் முகத்தின் முன்புறத்தில் இருக்கின்றன.
* பறவைகளில் நீரை உறிஞ்சிக் குடிப்பது புறா மட்டுமே.