ராணி ஜவுளி மற்றும் ரெடிமேட்ஸ்

முதுகுளத்தூர் நகரில் ரெடிமேட் ஆடைகள், சுடிதார், உள்ளாடைகள் உள்ளிட்ட ஜவுளி வாங்க… ராணி ஜவுளி மற்றும் ரெடிமேட்ஸ் முதுகுளத்தூர் – இராமநாதபுரம் ஜில்லா தொலைபேசி எண் : 04576 – 222 550 – 221444

Read More

கருணையாளா உன்னிடம்…..

கருணையாளா உன்னிடம்…..     கரம் ஏந்தி கண்ணீர் சிந்துகிறேன் கருணையாளா உன்னிடம்;   வெறுங்கையாய் திருப்பி விட வெட்கப்படும் என் மறையோனே!   முட்டியக் கண்ணிர் பூமியை முத்தமிடுவதற்கு முன்னே  தட்டியப் பொடியாய் தவிடு பொடியாக்குகிறாய் எங்கள் பாவத்தை!   ஒட்டு மொத்த நன்மையும் தட்டிப் பறிக்க தேவையில்லை என திறந்து விட்டாய் புனித மாதத்தை!   அடுத்தவரை பதம் பார்த்தே பழகிப்போன என் நாவை; அடக்கிவைக்க அற்புதமாய் ஒரு மாதம்!   வேகமாய் ஓடும் நாட்களை […]

Read More

ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் பூண்டு

ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் பூண்டு First Published : 18 Aug 2010 05:34:13 AM IST வாஷிங்டன், ஆக. 17: பூண்டு சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.    ஆஸ்திரேலியாவில் இருக்கும் அடிலெய்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. பச்சை பூண்டு, சமைக்கப்பட்ட பூண்டு மற்றும் பூண்டு பொடி ஆகியவற்றை சாப்பிடுவதை விட பூண்டுச் சாறை சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்துவதில் முழுப் பயன் இருக்கும்.   […]

Read More

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பேது என்று….

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பேது என்று            அன்றைக்குச் சொல்லிவைத்த பழமொழிகள் எதற்கு? அடுப்பூதும் வழக்கங்கள் இன்றில்லை! பெண்கள்     அடிமைபோல் அடங்கிவிடும் நிலையுமில்லை இன்று!   அண்ணல்நபி சொல்லிவைத்த அறிவுமொழி உண்டு     “ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்வி கடமை” என்று கண்ணியத்தைப் பெண்களுக்கு கொடுக்கவேண்டு மென்றால்     கட்டாயம் கல்விகற்க வைத்திடுவீர் நன்று     கற்றவராய்க் கட்டாயம் ஆக்கிடுவீர் நன்று அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், பிளாட்டோரூஷோ என்று     அகிலத்து அறிஞர்கள் பட்டியலும் உண்டு! அறிவான பெண்ணினத்தை உருவாக்க […]

Read More

கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களை சரிசெய்வதற்க்கு…

நம் கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களை சரிசெய்வதற்க்கு இஞ்னியர் தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பைசா செலவில்லாமல், என்ன சிக்கல் பென்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம். கம்ப்யூட்டரில் அடிக்கடி தோன்றும் சிக்கல்களுக்கான அறிகுறிகளும், அவற்றுக்கான் காரணங்களும்… மானிட்டர் விளக்கு மினுமினுத்தல்: மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள்கள், ராம், டிஸ்பிளே கார்டு, மற்றும் சி.பி.யூ இணைப்புகள் சரியில்லை என்றால் இது தோன்றும். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கவும். மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள்: ராம் இணைப்பில் சிக்கல் […]

Read More

ரமலான் நோன்பின் மாண்பு!

ரமலான் நோன்பின் மாண்பு! நோன்பு! மனசாட்சியால் விதைத்த மனங்களின் விரதம்! கட்டவிழ்ந்து விட்ட மனத்தை கைப்பிடிக்குள் கொண்டுவரும் நோன்பு! பசியின் சோகத்தை பணக்காரர்களுக்கும் ருசியாய் பரிமாறி கட்டாயமாக்கிய ரமலான்! உணவை மட்டும் துறப்பதா நோன்பு? ஊனாசை உடம்பாசை பேராசை பொருளாசை ஒருசேர ஒத்திவைக்கப்பட்ட மாதம்! புறம் கோள் பொய் சொல்வதை புறந்தள்ளிய மாதம் ரமலான்! அறம் அன்பு நேசமதை பறை சாற்றிய ரமலான்! ஈட்டிய செல்வமதில் ,ரண்டரை சதவீதம் ஏழைக்கு விதியாக்கி ஏற்றத்தாழ்வு நீக்கிய ரமலான்! வணக்கமும், […]

Read More

பிழை

பிழை ——– மோசமான கவிதையிது பிரசுரத்திற்கு உதவாது. அடித்தல் திருத்தலாய் கறுப்பு மை மொழுகலாய் எழுதும்போதே தெரிகிறது எல்லாம் காலத்தின் விரயம். கற்றுத் தந்த காலமே காற்றின் சுழிப்பில் அபகரித்து விடலாம். நானேகூட செய்யலாம்தான் கிழித்து வீசிவிட நாழியாகாது அத்தனைக்கு கேவலாமாயிது. படிக்கக் கிடைத்தவர்கள்தான் சொல்லனும் எனக்கிது வாழ்க்கை பிறருக்கது நான். *** – தாஜ் satajdeen@gmail.com 03.08.2010

Read More

வெள்ளை அறிக்கை

வெள்ளை அறிக்கை. —————————- இயற்கையின் வீச்சு மழுங்கி விட்டது. பேரிடி மின்னலுக்குப் பிறகு கொஞ்சம் மட்டும். பருவ மழை பொய்த்து விட்டது. தூறலின் சாரலில் புலண்கள் விழித்து ஆனந்தம் பாடியதும் மலர்களின் மகந்தத்தில் நீர் பட்டு சிலிர்க்கக் கண்டதும் கால்களை மழைநீரில் நனைய விட்டு விளையாடியதும் கெட்டிமேளத்தோடு கைகோர்த்த அடைமழை காலத்தில் தொப்பமாய் நனைந்து கிடந்ததும் ஞாபகத்தில் இனிக்கிறது. ***  தாஜ் satajdeen@gmail.com

Read More