கருணையாளா உன்னிடம்…..
கரம் ஏந்தி
கண்ணீர் சிந்துகிறேன்
கருணையாளா உன்னிடம்;
வெறுங்கையாய் திருப்பி விட
வெட்கப்படும் என்
மறையோனே!
முட்டியக் கண்ணிர்
பூமியை முத்தமிடுவதற்கு முன்னே
தட்டியப் பொடியாய்
தவிடு பொடியாக்குகிறாய் எங்கள் பாவத்தை!
ஒட்டு மொத்த நன்மையும்
தட்டிப் பறிக்க தேவையில்லை என
திறந்து விட்டாய் புனித மாதத்தை!
அடுத்தவரை பதம் பார்த்தே
பழகிப்போன என் நாவை;
அடக்கிவைக்க அற்புதமாய் ஒரு மாதம்!
வேகமாய் ஓடும் நாட்களை எண்ணி
சோகமாய் என் மனம் – விரைவில்
போய்விடுமோ பொக்கிஷமான
புனித மாதம்!
நெற்றியால் பூமியை
முத்தமிட்டு;
முனங்குகிறேன் உன் துதியை!
முட்டி நிற்கும்
முஸ்லிம் சமுதாயத்தை – ஒற்றுமையால்
கட்டிப் போட அருள் செய்வாய்
கருணையாளனே!!
-யாசர் அரஃபாத்